தீரா உலா – சென்னை என்னும் பெருங்கனவு !!



சென்னை மூன்று எழுத்து மிக பிரமாண்டமான வார்த்தை அது – சொல்லும்போதே ஒரு மிரட்சியும் கம்பீரமும் வரும்.சென்னைக்கும் எனக்கும் ரொம்ப அதிகம் உறவு இல்ல வெறும் நாலு வருஷம் சரியாய் சொல்லணும்னா நாற்பத்தாறு மாசம்தான் .ஆனா அதுக்கு முன்னாடியே அதுக்கும் எனக்கும் ஒரு உறவு இருக்குனு சொன்னா நம்ப கஷ்டமாதான் இருக்கும் . சென்னை வந்து ஈரோடு பக்கம் இல்ல தூத்துக்குடி பக்கம் இருக்கும்ன்னு நினச்ச என்னோட பால்யத்த நினச்சா இப்போ சிரிப்பா இருக்கு .ஒரு பெரும் மக்கள் சமுத்திரத்தில் தனித்தீவனா எனக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட உறவு தான் இந்த பதிவு. 

பொறந்தது சேலம் , வளர்ந்தது நாமக்கல்ல . முதல் முதலா சென்னை அறிமுகம் ஆனது சிவாஜி இறந்தப்போ தான் .ஆமா இன்னும் ஞாபகம் இருக்கு,  அப்பா கூட டீக்கடையில எல்லாரும் பேசிக்கிட்டாங்க,

இல்ல செட்டியாரே , எல்லா ஹீரோவும் போவாங்க , பெரிய தலைக்கட்டுல அவருன்னு,  ஒருத்தர் சொல்லும் போதே அத எல்லாருமே சென்னைல தான்யா இருக்காங்கன்னு இன்னொருத்தர் சொல்ல , அண்ணா அப்பரும்  MGR இறந்தப்போ அவ்வளோ கூட்டமும் அங்க தான் இருந்தச்சு, நான் போனேன்னே எவ்ளோ பெரிய ஊரு அதுன்னு டீ போட்டுகிட்டே கடைக்காரர் பேசுனார் .அப்படி இப்படின்னு அவங்க சொன்னதுல சென்னை தான் என் காதுல விழுந்துச்சு .பன்னிரெண்டு வயசு இருக்கும் எனக்கு , ஒரு இறப்பு எப்படி இருக்கும்னு  அப்போ தெர்ல , சென்னை மட்டும் கேள்விக்குறியா மாறன தருணம்.

Govt ஸ்கூல் படிக்கும் போது  E.O அடிக்கடி வருவாங்க, அவங்க கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்லணும்.அப்படி ஒரு நாள் என் முறை வந்தப்போ,  “ நீ என்ன ஆகப் போறன்னு கேட்டாரு “.நான் கலெக்டர் ஆகனும் சார்ன்னு சொன்னன் .அப்டினா என்னன்னு கேட்டாரு , “ IAS சார் , சைரன் வச்ச கார்ல போலாம் , MLA கூட கேள்வி கேக்கலாம்ன்னு சொன்னன் .எல்லாரும் இவர்க்கு கைதட்டுங்கன்னு சொல்லிட்டு , “அதுக்கு நீ ஸ்கூல் முடிச்சிட்டு சென்னை போகணும் ,அங்க போய் படிச்சா நீ IAS ஆகலாம் அப்படின்னு சொன்னாரு.அங்க போன IAS ஆகலாமான்னு கேட்டப்போ , கண்டீப்பா அங்க போன ஆகலாம்ன்னு மறுபடியும் சொன்னாரு.கேள்விக்குறி ஆச்சரியக்குறியா மாறன தருணம் .


சரவணா ஸ்டோர்ஸ் எவ்ளோ பெருசு தெர்யுமா , அங்க ஒரே இடத்துல பதினாலு தியேட்டர் இருக்காம்மா,அங்க போன ஏரோப்ளேன் தொட்டுப் பாக்கலாம் ,கிரிக்கெட் மேட்ச் அங்க தான் விளையாடுவாங்க , அங்க தான் எல்லா கம்பெனி இருக்கும் , சினிமா ஷூட்டிங் அங்க தான் நடக்கும் , எல்லா ரௌடிகளும் அங்க தான் இருக்காங்க, அங்க வெறும் இங்கிலிஸ்ல மட்டும் தான் பேசுவாங்க , கடற்கரைல நடக்கும் போது எப்படி இருக்கும் தெர்யுமான்னு , கூட படிக்கற பசங்கலாம் பேசும்போது இனம் புரியாத உணர்வு கூடவே ஒரு வெறுமை இருக்கும் என்கிட்ட. சென்னை பத்தி எந்த வித பின்புலமும் தெரியாத குடும்பத்தில் இருந்தது கூட அதுக்கு காரணமா இருந்து இருக்கலாம் .




11வது படிக்கும் போது கணக்கு டீச்சர் சொன்னங்கா, நல்லா படிச்சு கட் ஆப் வாங்கிட்டா சென்னை அண்ணா யுனிவெர்சிட்டில சீட் கிடைக்கும் .எவ்ளோ பெரிய காலேஜ் அதுன்னு . அண்ணாவிற்கு முன்னாடி இருந்த சென்னை பிடிச்சது நாளையோ என்னவோ என் குறிக்கோள் அண்ணா யுனிவெர்சிட்டி ஆச்சு .அப்போவே முடிவு பண்ணிடன் , சென்னைல தான் காலேஜ் படிக்கணும்னு .


ஒரு வழியா கஷ்டப்பட்டு படிச்சு , நல்ல மார்க் வாங்கி இதுக்கு அங்க சீட் கண்டீப்பா கிடைக்கும்ன்னு சொன்னபோ , அப்படி ஒரு பூரிப்பு என்கிட்ட இருந்துச்சு.

counsellingல சீட் எடுத்துட்டு ஊருக்குப் போறன், “ இதே மாதிரி mark வாங்குனா பசங்கலாம் வருவாங்க , சென்னை அவளோ பெரிய ஊர்ல தனியா இருந்துருவியா , அம்மா பட்ட கஷ்டம்லாம் வீனா போல , ஆளே மாறிப் போய்டுவ , எங்கல்லாம் மறந்து போயிராத “ என்னை சுத்தி வந்த உரையாடல்கள் இதலாம் . அவங்க கண்களின் கோணங்கள் அது தந்த உருவகம் இதலாம் விவரிக்க எனக்கு வார்த்தை வரல .சென்னை போகற நாள் எதிர் பாத்துக் காத்துகிட்டு இருந்தன் .

ஜூலை இருப்பத்தெட்டு காலையில சென்னை வந்து இறங்குறேன் காலேஜ் சேர . இப்போ தான் என் கதை ஆரம்பிக்குது. சென்ட்ரல் ஸ்டேஷன்ல ஹிக்கின்பாதம்ஸ் இருக்கும் அங்க போய் , அண்ணா ஒரு காலைக்கதிர் கொடுங்கன்னு சொன்னன் , தம்பி என்ன சேலமான்னு நக்கலா கேட்டாரு .ஆமான்னன்னு சொன்னன் . அப்பறம் தான் தெரிஞ்சுச்சு காலைக்கதிர் இங்க வராது அத தினமலர் பாக்கும் அப்டின்னு  இதுக்கு நடுவுல ஒரு பொண்ணு வந்து ஹிந்து கொடுங்கன்னு கெத்தா கேட்டா , பின்னாடி ஒருத்தர்  Excuse me ன்னு சொன்னாரு .அந்த வார்த்தை எனக்கு வர நாலு மாசம் ஆச்சு அதுக்கு நான் பட்ட கஷ்டம் அது தனிக்கதை .கேசுலா எல்லாரும் நடந்துபோன ஸ்டைல் ,அவங்க போட்ருந்த உடை , ஆப்போசிட்ல இருந்த பெரிய ஹோச்பிடல், வரிசையா நின்ன கார் இன்னும் என் கண்ணுல எல்லாமே பட்டுச்சு .மர்மங்கள் விளங்காத விடியற்காலை அது, 

அங்க இருந்து 221H பஸ்ல போன காலேஜ் போலாம்னு சொன்னங்க, ஏறி உக்காந்து அண்ணா யுனிவேரிச்ட்டி கொடுங்கன்னு சொன்னன் . மறுபடியும் ஒரு நக்கல் பார்வை இந்த முறை கொஞ்சம் மோசமா , எந்த காம்பஸ் போகணும்னு கேட்டாரு . கிண்டி காம்பஸ் இல்ல CEGன்னு சொல்ல தெர்ல .counselling நடக்கும்ல அங்க கொடுங்கன்னு சொன்னன் .சிரிச்சுகிட்டே டிக்கெட் கொடுத்தாரு அது ஒரு ஏளனச் சிரிப்புன்னு அப்போவே புரிஞ்சுச்சு.பக்கதுல இருந்த ரெண்டு பேரு பேசிகிட்டாங்க , “ இந்த மாதிரி ஒண்ணுமே தெரியாத புள்ளைங்க தான் இங்க வந்து எல்லாமே கத்துக்கிட்டுப் போயட்ரங்க , நம்ம புள்ளைங்க இங்கயே கடைசி வரைக்கும் இருக்குதுங்கன்னு. மூஞ்சில ஜீரோ வாட்ஸ் பல்பு எரிஞ்சமாதிரி இருந்துச்சு.

காலேஜ் அட்மிசன் முடிஞ்சு , சாப்பட வெளில போகலாம்னு விசாரிச்சபோ சங்கீதா போங்க , ஆட்டோல 5௦ரூபாய்ன்னு சொன்னங்க.அம்மா அப்பாவ ஆட்டோல போங்க நான் நடந்து வரன்னு சொன்னன்.அப்படி நடந்து போகும் போது ரெண்டு முறை அவங்கள கடந்து போனன் .அப்போவேதெரிஞ்சுகிட்டேன் இந்த ஊர்ல நடக்கறது தான் ஈசி போலன்னு .மத்ய கைலாஷ் சிக்னல்ல எல்லாருமே ஹெல்மெட் வோட இருந்தாங்க .எங்க ஊர்ல அப்போதான் அது அறிமுகம் ஆச்சு .அடையார் ரோடுல ரெண்டு பக்கமும் கடைங்க நடுவுல வண்டியலாம் போகுது , எங்க கடைவீதில மட்டும் தான் அப்படி இருக்கும்.இதான் தி.நகரான்னு கேட்டன் , அது இத விட மோசமா இருக்கும்னு சொன்னங்க.சங்கீதா போனோம்.நான் ஏதும் வேணாம்ன்னு சொலிட்டுஐஸ் கிரீம் கொடுங்கன்னு சொன்னன் .POT shape ல ஒரு ஐஸ் கிரீம் வந்துச்சு . எங்க ஊரில சேமியா ஐஸ், பால் ஐஸ் சாப்ட்டு வளர்ந்த பையன் நான் .சினிமாக்கு போகும்போது அப்பாக்கிட்ட அடம் பிடிச்சு அருண் இல்ல jamai ஐஸ் கிரீம் சாப்டுவன்.

அன்னைக்கு சாயந்தரம் அம்மா அப்பா விட்டுடு போகும் போது அப்படி அழுந்தன்,அம்மா பிரிஞ்சு ஒரு நாளும் இருந்தது இல்ல , ஊர்க்கு போன கூட லீவ் போட்டு கூடவே கூட்டிட்டு போயிருவாங்க .அந்த சமயம் J பிளாக் ல நான் இருந்தன் , அப்போ தான் அந்த சத்தம் , flight ground ah தொட்டுக்கிட்டு போச்சு ..அவளோ கிட்டப் பாக்கரன்.அது போகும் போது என் அழுகையும் சேர்த்து எடுதுட்டு போச்சு . முருகா நீ சென்னைல இருக்கன்னு சொல்லிக் கிள்ளிப் பாத்துகிட்டன்.அந்த நாள் பூரா சென்னை மட்டும் தான் நினைச்சன் .


இது தான் சென்னை நகரின் மீதான முதல் நாள் அனுபவம் , அப்றம்

தனிமை உறுத்த , நினைவு உறுத்த, இளமை உறுத்த, திடம் உறுத்த, முகம் உறுத்த, மாற்றம் ஆன இடம் உறுத்த, பழகிய ஆட்கள் உறுத்த, ஆட்கள் கொண்ட அன்பு உறுத்த, அந்த உறுத்தல் எல்லாம் இயல்பா மாறிப் போச்சு , எதுமே உறுத்தல அடுத்த ஆறு மாசம் ஒவ்வொரு சனி ஞாயிறுல சுத்திப்பாக்க கிளம்பிடுவன் .சத்தியமா தெர்ல எத்தன பேரு நம்புவீங்கன்னு ,

காலேஜ்க்கு எதிர்ல இருக்க பஸ் ஸ்டாப்ல ஏறி பெசன்ட் போகுமான்னு கேட்டு அசிங்க பற்றுக்கன் அது கிண்டி போற வழி . புஹாரி ஹோட்டல் சென்ட்ரல பாத்தோமே அடையார்ல எப்படி , எக்மோர் தாம்பரம் பக்கதுல இருக்கு : marina , bessy ஒண்ணுதான் இன்னும் என்னலாமோ

முத முறை தி.நகர் போனது , பொதுவாவே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் எப்படி பயந்துருப்பென்னு நினைச்சுப் பாருங்க , சரவணா ஸ்டோர்ஸ் போய்ட்டு bag கொடுத்து டோகேன் வாங்க சொன்னங்க.அத எங்க மிஸ் பணிருவேனோ ரெண்டு நிமிஷம் ஒருக்க தொட்டுப் பாப்பன் . டிரஸ் வாங்கிட்டு அதுக்கு ஒரு தனி லிப்ட் வச்சு கீழ அனுபிட்டு போய் வாங்கிகோங்கன்னு சொல்லிட்டாக.எங்க ஊர்ல அங்கேயே பில் போட்டு வாங்கி தான் பழக்கம், என்னடா இதுன்னு வியந்த , பயந்த தருணங்கள் அவை.



              என்னோட purseல இருந்து காசு கொடுத்து நான் வாங்குன முதல் டிக்கெட்.(பொக்கிஷம்)

  
இன்னும் சில விஷயங்கள் பொதுநலன் கருதி சொல்ல விரும்பல .இப்படி இந்த அனுபவங்கள் இன்னும் பசுமையா இருக்க காரணம் , நான் சென்னைய அவளோ ரசிச்சேன் , ஒரு வெறிபிடித்த உணர்வோடு சுத்துனன். Dayscholar பசங்க யார்கிட்டயும் நான் கேக்கற முத கேள்வி , உங்க வீடு எங்க அதுக்கு எப்படி போகணும் இதுதான் .

சென்னை பழக முழுசா ஒரு வருஷம் ஆச்சு , போகாத வீதி இல்ல , தியேட்டர் , ஹோட்டல்ன்னு எல்லலாமே போனன்.நண்பர்களுடனும் தனியாவும் .சென்னைல தெரியாதுன்னு சொல்ல இனிமே ஏதும் இல்லன்னு சொல்ற அளவுக்கு வந்தன் .நண்பர்கள் தான் எல்லாதுக்கும் காரணம் .சென்னை நண்பர்களுக்கே சில சமயம் சில இடங்கள் சிபாரிசு செய்யும் போது உள்ளுகுள இருந்து ஒருத்தன் வந்து காதோரம , நீ ஜெய்ச்சிடன்னு சொல்லுவான்.

ராகவ் என்னோட gangல மிக முக்கியமான ஒருத்தன், சிந்தாதரிப்பேட்டைய பூர்விகமா கொண்ட அக்மார்க் சென்னை பையன் . அவன் பார்வையில சென்னை ரொம்ப வித்தியாசமா இருக்கும். சும்மா வம்பு இழுப்பேன் , என்ன ஊரு இதுன்னு ? அப்போ ரொம்ப சாதுவா சொல்லுவான், சென்னைல இருக்கவங்க அமைதியா தான் இருக்கோம்.வேற ஊர்ல இருந்து வந்து நீங்க பண்ற அலும்புகலதான் அது இப்படி போச்சுன்னு.

சென்னை ஆளுங்க கிட்ட பேசி இருக்கீங்களா ,

...த்தா , ...பாடு இப்படி தான் ஆரம்பிப்பாங்க . போலியான உபசரிப்புகளை விட, உண்மையான திமிர் அழகானதுனு ஒரு பழமொழிக்கு உதாரணமா .பழகுன ஒரே நாள்ல கூப்ட குரலுக்கு ஓடி வர பசங்க அவங்க , சென்னை பிடிக்க இன்னொரு காரணம் அது .

எவ்ளோ வேற்றுமைகள் இங்க இருக்கு . போட்டி, பொறமை ,ஏற்ற தாழ்வு, படிப்பு, பணம், நிறம், இனம், மொழி, சாதி இன்னும் நெறைய இங்க அதிகமாவே.. அதுக்கு முறணா  எல்லா தரப்பட்ட மக்களும் இங்க இருக்க அது அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்குது.

வந்தாரை வாழ வைக்கும் மண் எவ்ளோ சத்தியமான வார்த்தைன்னு சென்னை விட்டு கிளம்பும்போது புரிஞ்சுகிடன் . இப்போ நான் தூரமா டெல்லில இருக்கன் .கல்லூரி வாழ்க்கைய மறக்க முடியாதுன்னு சொலுவாங்க , சென்னை நாளா தான் அதுவும் எனக்கு கிடைச்சுசு.

அந்த நகர்ல முத முதலா நடந்த காலடி தடம் அந்த சூடு இன்னும் என் பாதம்ல ஒட்டிக்கிட்டு இருக்கு .பல தரப்பட்ட மனிதர்கள் , அவர்கள் தந்த உணர்வுகள் அது தந்த அனுபவமும் மறக்க முடியாது , அது கற்றுக்கொடுத்த பாடங்கள் இவை ,


  • எல்லாருக்குமே நல்லவனா இருந்துட்டு போறது உனக்கு நல்லது
  • இங்க எல்லாருமே நல்லவங்க அவங்க பார்வையில
  • ஒரு talent வளர்த்துக்கண்ணும் அத வச்சு கெத்து காமிக்கணும் , இல்லனா எல்லாரும் உன் மேல சவாரி செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.
  • யார் மனதையும் காயப்படுத்தாமல் யாரையும் எதற்கும் தொந்தரவு செய்யாமல் வாழும் வாழ்க்கை பேரழகு..!!!!

சென்னை பத்தி கவிதையா சொல்லனும்னா, அது எல்லாருக்குமே ஒரு மந்திரக்கோலும் வெள்ளை காகிதமும் கொடுக்கும் .அதுல நாம என்ன நினைக்கரமோ அத நாம தான் வரையனும் (கஷ்டப்பட்டு).

அப்போ சென்னைல உனக்கு நல்லதுமட்டும் தான் நடந்துச்சா அப்படின்னு தோணும் , எனக்கு கிடச்சது எல்லாமே உள்ளுக்குள்ள வலியா கனவா இருந்து நினவாச்சி . இதுக்காக நெறைய இழந்து இருக்கன்.இழந்த விஷயங்கள் , எங்க இவன் வளர்ந்துடுவனோன்னு நினைச்சு அமுக்க நினைத்த சில பெரிய மனிதர்கள் அவர்கள் கொடுத்த அனுபவங்கள் அத யாருக்கும் சொல்ல விரும்பல .

அதான் சென்னை கனவு இப்போ முடுஞ்சு போச்சு இப்போ என்ன இருக்குனு கேக்கறீங்களா ? மறுபடி சென்னை போய் அங்க கொஞ்சமா நிலம் வாங்கி வீடு கட்டி அதுல ஊஞ்சல் போட்டு படையப்பாவில வர நம்ம சூப்பர்ஸ்டார் மாதிரி கைய சுழட்டி salute வைக்கணும் சார்.என் மண்டைக்குள்ள அதான் ஓடிக்கிட்டு இருக்கு .இது பேராசையான்னு தெரியாது ஆனா ஒரு பெருங்கனவு கொடுத்த தைரியம் . எங்க ஸ்கூல் இங்கிலீஷ் டீச்சர் அடிக்கடி சொல்லுவாங்க ,

Your Little FAITH can do BIGGER things அப்படினு ,வேற மாதிரி சொல்லனும்ன நம்பிக்கை அதானே எல்லாம் .

எல்லாருக்குமே ஒரு கதை இருக்கும், இது என்னோட கதை .உங்க கதைய நினச்சு பாருங்க .

                   பக்கங்கள் புரட்டப்படும்  !!!








                                                 

3 Comments

  1. Chennai la ye thaan veedu vaanganuma thambi?? :)

    PetroMax light eh thaan venuma??

    ReplyDelete
  2. Super bro...All d best fa Ur upcoming success

    ReplyDelete