எனக்கு நேர்ந்த, நான் கேள்விப்பட்ட ரெண்டு சம்பவங்கள் இத எழுதனும்னு தோணுச்சு. ரொம்ப நாளா எழுதனும்னு நினச்சப்பதிவு இது .
- தாஸ்தவோஸ்கி, நான் விரும்பித் தேடிப்படிக்கும் ரஷ்ய எழுத்தாளர். (அவருடைய தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிப்பேன்) அவருடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்
- புதிதாகப் பேச ஆரம்பித்த நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி ? உங்களோட பழைய புகைப்படங்கள் எல்லாமே அவ்ளோ வெகுளியா (குழந்தைத்தனமா) இருக்கீங்களே எப்போது ஆரம்பித்தது இந்த ஊர் சுற்றும் பயணம் . சென்னைக்கு எந்த தைரியலத்துல வந்தீங்க இப்போ எந்த தைரியலத்துல தனியா ஊர் சுத்திக்கிட்டு இருக்கீங்க .
உனக்கு எல்லாமே அவ்வளோ ஞாபகம் இருக்கான்னு
கேட்டா, அது என்னோட நோய்ன்னு கூட சொல்லலாம் . எதையும் அவளோ சுலபமா மறக்க முடியாது, அவமானங்களும்
சரி அனுபவங்களும் சரி.
10வதுல நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரல அந்த
விரக்தில நாமா நினைக்கறது எதுமே நடக்காது போலன்னு படிக்க விருப்பம் இல்லாம இருந்தன்
. படிக்க ஒரே ஒரு காரணம் சென்னைல காலேஜ் சேரனும். 12வது பரீட்சை முடிந்த சமயம்,
எதுக்கு சென்னை போய்ப் படிக்கிற, இங்க இல்லாத கோர்ஸா ?
அம்மா அப்பாக்கு உத்தாசையா இங்கவே இருந்துரு
சென்னை போனா உன்னால சமாளிக்க முடியுமா
அது மோசமான ஊரு உன்ன கெடுத்துரும்
சென்னை போய் படிக்கிற அளவுக்கு உனக்கு மார்க் வருமா
உங்க வீட்ல நிலைமை சரி இல்லைதான ஒரு வருஷம் கழிச்சு படிக்கலாமே
அந்த சமயம் உறவினர்கள் , அக்கம்பக்கத்தினர் என இது எல்லாமே என்ன சுத்தி என்ன நோக்கி வந்த அறிவுரைகள்
அம்மா அப்பா ஒன்னே ஒன்னு தான் சொன்னாங்க , 'நீ தான் பரீட்சை எழுதுன உனக்கு தான் தெரியும் என்ன மார்க்ஸ் வரும்ன்னு , நீ தான் முடிவு பண்ணனும் என்ன படிக்கணும் எங்க படிக்கணும்' .
அப்படி அம்மா அப்பா சொன்னது ரொம்ப சந்தோசமா இருந்தாலும் ஒரு வித அழுத்தம் இருந்தது உள்ளுக்குள்ள . நாம ஆசைப்படறமோ இல்ல பேராசை படறமோன்னு
சந்திக்கற நண்பர்கள், ஆசிரியர்கள்ன்னு எல்லாருமே மாத்திக் குழப்பினாங்க. அம்மா, அப்பா நம்மள எடுக்க சொல்லிடாங்க தப்பா எடுத்தா life அவ்ளோதானா
இந்த மனநிலையில் இருக்கும்போது தான் அந்த போஸ்டர் கண்ணுல பட்டுச்சு .
Education fair உங்க நாமக்கல்ல தொடர்ப்புக்குன்னு சொல்லி ஒரு நம்பர் .
நாமக்கல் , சேலம்ல இருக்க எல்லா கல்லூரிகளும் அந்த விளம்பரப்பலகைல இருந்துச்சு
இன்னும் யோசிக்கறேன். எந்த துணிச்சல்ல அந்த நம்பர்க்கு கால் பண்ணணு. நம்பர் பிஸின்னு வர கட் பண்ணிட்டன்.
திரும்ப கொஞ்ச நேரத்துல அதே நம்பர்ல இருந்து கால். என்ன பேசன்னு பயந்துபோய் மறுபடியும் கட் பண்ணிட்டன்.
அன்னைக்கு இரவு முழுக்க தூக்கம் வரல , மறுநாள் காலையில என்ன பேசணும்னு எழுதி வச்சுட்டு கால் பண்றன். திரும்பவும் பிஸி.
எனக்கு நினைவு தெரிஞ்சு போன் பண்ணும் போதெல்லாம் பிஸின்னு வந்தது அவர் நம்பர் தான். அதுவே அவர் மேல நல்ல அபிப்ராயம் கொடுத்துச்சு.அவரே அப்பரும் கூப்டாரு .
Educational fair எப்போ நடக்கும், உங்கள பாக்கணும் பேசணும்னு சொன்னன்
அமைதியா கேட்டவர் அன்னைக்கு event க்கு வர சொன்னார், அந்த event நடத்துறதே அவர் தான் எனக்கு அப்பறம் தான் தெரிஞ்சுச்சு.
நல்ல உயரம், formalsla அவர் வந்தாரு
முருகானந்தம் நீங்களா
ஆமான்னு சொன்னன்.
சொல்லுங்க என்ன பேசணும் ( போன சைலென்ட்ல போட்டாரு)
சென்னைல படிக்கணும்...என்ன கோர்ஸ் நல்லா இருக்கும் எவ்ளோ செலவு ஆகும்
மார்க்ஸ் எவ்ளோ வரும்ன்னு கேட்டாரு
குத்துமதிப்பா ஒரு மார்க் சொன்னன் .
இங்க இவ்ளோ காலேஜ் இருக்கே ஏன் அங்க படிக்கணும்னு சொல்ற
எனக்கு அந்த ஊரு சுத்திப் பாக்கணும் அதான்
சென்னைல யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா
இல்ல சார் , யாருமே இல்ல
சரி சென்னைல உனக்கு காலேஜ் கிடைக்கும் நீ எதிர்பார்க்கற மார்க்கு
ஒரு வேலை அந்த மார்க் வரலைன சார்
நீ தான் இந்த மார்க் வரும்னு சொன்ன இப்போ வராதுன்னு சொல்ற
இல்ல சார் 10வதுல இப்படி தான் எதிர்பார்த்தன் ஆனா அது வரல அதான் பயமே.
சரி இப்போ உனக்கு வேற என்ன பிரச்சனை
எனக்கு இருந்த குழப்பம்லாம் சொன்னன் . அமைதியா கேட்டவர் நாளைக்கு வான்னு சொல்லிட்டரு.
(Educational fair ரெண்டு நாள் நடந்துச்சு)
அடுத்த நாள் , உனக்கு இந்த காலேஜ்ல பேசிட்டன் ( நாமக்கல்ல பெரிய காலேஜ் அது ) அங்க ஒரு சீட் உனக்கு தான். சோ நீ இப்போ படிக்கறது நிச்சயம். இனி உனக்கு வர மார்க் வச்சு மத்த விசயம் பேசிக்கலாம் நிம்மதியா இரு
அப்போ எனக்கு கிடச்ச நிம்மதிக்கு அளவே இல்ல. அன்னைக்கு இரவு அம்மா அப்பாகிட்ட இதுவர நடந்தத சொல்றன். முதல நம்பல அப்பறம் சந்தோசப்பட்டாக
அவர்க்கு அப்போ கால் பண்ணி பேசுனோம்
ரெசல்ட் வந்துச்சு
நல்ல மார்க்.
எல்லார்கிட்டயும் இருந்து போன் வந்துகிட்டே இருந்துச்சு நான் எதிர்பார்த்து இருந்தது அவரோட கால்.
கால் பண்ணாரு
மார்க் சொன்னன், சந்தோஷப் பட்டாரு அது அவரோட குரல தெரிஞ்சுச்சு
உனக்கு சென்னை அண்ணா யுனிவர்சிட்டில சீட் கிடச்சுரும்ன்னு சொன்னது அவர் தான் முதல்ல .
நானே வந்து உனக்கு சென்னைல சீட் எடுத்து தரன்னு சொன்னாரு .
கடைசில அவர் அப்பாக்கு உடம்பு சரி இல்லாம போக , அவர்கிட்ட இருந்து கால் .
முருகா நீங்க கரூர் வர முடியுமா , நாளைக்கு
சரி சார் வரன்
போனன்
என்னால வர முடியல மனிச்சுக்கோ . நீ தைரியமா போ . பணம்லாம் ரெடி பண்ணியாச்சா
அதல்லாம் இருக்கு சார்
டக்குனு பாக்கெட்டில இருந்து டெபிட் கார்டு எடுத்துக்கொடுத்தார்
உன்னோட செலவுக்கு வச்சுக்கோ சென்னை முத முறையா போற .
இல்ல சார் பணம்லாம் இருக்கு .
முத முறையா போற, செலவு அதிகம் ஆச்சுனா என்ன பண்ணுவீங்க , இத வச்சு செலவு பண்ணிக்கோன்னு சொல்லி பின் நம்பர் ஒரு சீட்ல எழுதிக் கொடுத்தார்
எனக்கு இன்னும் வியப்பா இருக்கும், இப்படி யாராவது இருப்பாங்களான்னு
அந்த கார்டு என்னோட பர்செல , காசு ஒருத்தன்னுக்கு எவளோ நம்பிக்கை கொடுக்கும்ன்னு அப்போத்தான் தெரிஞ்சுச்சு.
அந்த கார்ட்ல 2000 ருபாய் எடுத்தன் , முத முதலா நான் யூஸ் பண்ண கார்டு அதான் .
எதிர்பார்த்த மாதிரி எல்லாமே நல்லா தான் போச்சு . கோர்ஸ் எடுத்து முடிச்சுட்டு கரூர்ல அவர பாக்க போறன் கார்டு கொடுத்தன்.
ஏன் ஒரு மாறி இருக்க
இல்ல சார் , ஏதோ ஒரு நம்பிக்கைல எடுத்தன். சென்னை அப்டி இப்படின்னு சொல்றாங்க . தனிய வேற இருகன்னுமா அம்மா அப்பா விட்டுட்டு அதான் யோசிக்கிறேன்.

அவர் சொன்ன வரிகள் இன்னும் எனக்குள்ள இருக்கு ,
நீ என்ன என்கிட்ட சொன்னன்னு ஞாபகம் இருக்கா , சென்னைல படிக்கனும்ன்னு . எந்த கோர்ஸ் எந்த காலேஜ்ன்னு உனக்கு தேட விருப்பம் இல்ல , அந்த ஊரு மட்டும்தான் உனக்கு தெரிஞ்ச்சு. அங்க படிக்க என்ன மார்க் வேணுமோ அத நீ வாங்கி இருக்க , உனக்கான இடம்தான் அங்க காத்துகிட்டு இருக்கு , நீ தேடிப் போல அது உன்ன தேடிக்கிட்டு இருந்துச்சு அவ்ளோ தான். சென்னை பாத்து பயப்படாத , அது ஒரு ஊர் அவ்ளோ தான். அது உன்னோட designation இல்ல உன்னோட base அங்க இருந்து எல்லாமே ஆரம்பி. சென்னைல உனக்கு யாருமே இல்லன்னு சொன்னல , இனி என்கிட்ட யாராவது கேட்டா சென்னைல நீ இருக்கணு சொல்றன் . வரவங்கள பாத்துக்கோ . எல்லாரையும் கவனி, கோவப்படாத , அமைதியா இரு எல்லாமே பழகிப் போகும் . சென்னையும் ஒரு நாள் அலுத்துப் போகும். Simply Explore.
Painting by Anastasia
Kachina
நிற்க,
ஒன்னு ரெண்டு காதல் கதைகளை எழுதி ஓரளவு புகழ்பெற்ற சமயம், அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார் எனத் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டு தாஸ்தவோஸ்கிக்கும் அவரோடு சேர்த்து சில புரட்சியாளர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்படுகிறது.
ஊர் கூடி இன்னும் சில நொடிகளில் உயிர் போக போகிற தருணம், அவரோடு சேர்ந்து மரணிக்கப்போகும் மற்றவர்கள் கத்திச்கூச்சல் இடுகிறார்கள். கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவருக்கு அந்த மரண ஓலம் ஒரு கேள்வி உள்ளுக்குள் எழுப்புகிறது. இவ்வளவு தானா வாழ்க்கை ? மரணம் அத்துணை சுலபமானது போல ? இங்கு வாழ்வது மட்டும் தான் கடினம் . இனி ஒரு வாழ்க்கை கிடைத்தால் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் தருவாயில் அந்த செய்தி.
‘உங்களுக்கான மரணதண்டனை விளக்கிக்கொள்ளப்படுகிறது, அதற்க்குப் பதிலாக நீங்கள் அனைவரும் செரிபியா சிறையில் இரண்டு வருடம் காலம் தள்ள வேண்டும்’ என்று, உயிர் இன்னும் போகவில்லை என்று உணரும் தருணம் அவர் ஒன்றை புரிந்துக்கொள்கிறார் . எவ்வளவு சக்தி வாய்ந்தது. இந்த மானிடப்பிறப்பு அப்போது தான் புதிய தாஸ்தவோஸ்கி பிறக்கிறான்.

அவர்கள் செரிபியா சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள் . இந்த உலகின் மிக மோசமான சிறைச்சாலைகளில் அதுவும் ஒன்று . அங்கு பனி என்றால் அப்படி ஒரு பனி . கொட்டும் பனி –40*C. இங்கே நமக்கு 0*C என்றாலே கை கால்கள் நடுங்கும். அதுக்கும் கீழே -1*C - -2*C என்றால் மூச்சடைத்து விடும் வெளியில் வர முடியாது . ஆனா அங்கே –40* C. சரியாக சொல்லப்போனால் உறைபனி. தாஸ்தவோஸ்கி ஒரு இடத்தில் சொல்கிறார், சட்டையில் இருந்து கையை வெளியே நீட்டினால் நரம்புகள் வெடித்து கருப்பாகி விடும் என்று.
இந்த உறைபனில அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு,
ஒரு கப் முட்டைகோஸ் சூப் , ஒரு ரொட்டித்துண்டு ஆனா வேலை மட்டும் எட்டு மணி நேரம்.
எட்டு மணி நேரமும் என்ன வேலை செய்யணும்னா பனில இறங்கி மரங்கள வெட்டி விறகுகள படகுல கொண்டு வரணும். சொல்லப்போனா மிகமிகக் கடுமையான வேலை. இப்படி செய்ஞ்சு முடிச்சுட்டு தூங்க போனா அங்க படுக்கை இருக்காது . ஒரே ஒரு போர்வை கொடுப்பாங்க அதை உடம்பு முழுக்க சுத்திக்கிட்டு படுக்க வேண்டியது தான் ஒரே வழி. அங்கயும் ஒரு சிக்கல், அங்க இருந்த மேலதிகாரி தீவிர சமய நம்பிக்கை உடையவர் வலப்பக்கம் யாரும் தல வச்சுப் படுக்கக்கூடாது அது ஏசுபிரான்மட்டும் தான் அப்படி தூங்கனும் நம்பிக்கை வச்சு, மீறி வலப்பக்கம் படுக்கறவங்கள சவுக்கால அடிப்பாரு .
நீங்க பாருங்க , 40 டிகிரில இப்படி படுத்தா எப்படி இருக்கும் , சரி , எவ்ளோ நேரம் உறக்கம்னா வெறும் 5 மணி நேரம் தான் . விடியற்காலை 2-3 மணிக்குலாம் எழுந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல காலைக்கடன் முடிச்சுட்டு (குளிக்க முடியாது) திரும்ப ரொட்டித்துண்டுகள சாப்ட்டு அதே வேலைகள செய்யணும்.
அந்த இரண்டு ஆண்டுகள் வேற எதையும் நினைக்க முடியாது, மிக கடுமையான வேலை செய்தே ஆகணும். பெரும்பாலான கைதிகள் நோயுற்று அங்கவே இறந்துருவாங்க, மீதி இருக்கவங்களுக்கும் நோய் வந்துரும் அது அவங்க வாழ்நாள் முழுக்க கூட வரும்.
தாஸ்தவோஸ்கிக்கு ஏற்கனவே உடம்பு சரியா இல்லாதாதுநாளா இரவுல தூக்கம் வராமா புலம்புவதும் துர்கனவுகளால முழிப்பதுமே வாடிக்கையானது, சொல்லப்போனா அங்க இருக்க எல்லாருக்கும் இந்த நிலை இருந்ததா அவர் சொல்றார்.
அவர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் அந்த காலத்தில அரசியல் கைதிகளை நாடு கடத்தும்போது அவர்களின் குடும்பத்தயையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டு செல்வார்கள் . அவங்க மனைவி புள்ளைகளுடன் . இப்படி decemberist ன்னு சொல்லக்கூடிய அரசை எதிர்ப்பவர்கள் நாடு கடத்துபவர்கள் அவர்களின் மனைவிகள் இவரை போன்ற மற்ற கைதிகள் மீது இரக்கம் காட்டி உணவையும் மற்ற உதவிகளையும் செய்வார்களாம்.
அதுல ஒரு அம்மா தாஸ்தவோஸ்கிக்கு ஒரு புத்தகத்தை கொடுக்கிறார் அது ரஷ்யமொழி ‘புதிய ஏற்பாடு’ புத்தகம் .
“உனக்கு இந்த துயரத்துல இருந்து விடுபட நினச்சா இத படி. இதுல இருக்க சொற்களை நம்பு. இத தவிர உனக்கு வேற வழி இல்லன்னு”, சொல்லி கொடுத்தாங்க . அவர் அதுல இருக்க JOB அப்படின்னு ஒரு அத்தியாயம் திரும்பத்திரும்ப படிக்கிறார். அந்த புத்தகத்தை முழுசா முடிக்கிறார் .

சிறையில் இருந்து வெளில வருகிறார் அதற்கு
அப்பறம் தாஸ்தவோஸ்கி படைத்தது எல்லாமே வரலாற்று பொக்கிஷங்கள்.
சிறையில் படிச்சாரு இல்லையா அதற்கு அப்பறம் தாஸ்தவோஸ்கி அந்த புத்தகம் இரண்டாவது முறையா எப்போ படிச்சார்ன்னு தெரியுமா ? கடைசியா மரணிக்கும் முன் .
தன்னுடைய 59 வயதில் மரணத்தை தழுவிகிறார் அவர் . இறப்பதருக்கு கடைசி மணித்துளிகள் முன், புத்தகத்தை எடுத்து வர சொல்கிறார்.
THE LAST BREATH.
என்னோட மேசையில் கீழ இருக்க அலமாரில ஒரு புதிய ஏற்பாடு இருக்கும் அதையும் ஒரு மெழுகுவர்த்தியும் எடுத்துது வாங்கனு சொல்றாரு .
அந்த புத்தகத்தை தொட்டுப்பார்க்கும் போது சொல்றாரு இந்த புத்தகம் யார் கொடுத்துத்துன்னு தெரியுமா ? சிறைச்சாலையில் அங்க இருந்த ஒரு கைதியின் மனைவி அக்கறையோட இந்த வாழ்கையில நான் எதாவது செய்யன்னும் நம்பிக்கைல கொடுக்கப்பட்ட புத்தகம் இது .இப்போ என்னால படிக்க முடியாது நீ படின்னு அவர் மனைவிக்கிட்ட கொடுக்கறார்.
மனைவி புத்தகம் எடுத்து பக்கங்கள் புரட்டுரா, அதுல அந்த பகுதி யோகனுக்கு ஞானசானம் பண்ணி வைக்கற பகுதி . அந்த பகுதி படிக்கும் போது அதுல ஒரு வரி வருது , ‘ அவளோ தான் முடிஞ்சுருச்சு , இனி உன் காலம் வரும்ன்னு’.
படித்தவுடன் அவர் மனைவி சொல்றா, உங்களுக்காக எழுதப்பட்ட பதிவு இல்லன்னு. அதற்கு அவர் சொல்றார் இல்ல, இது எனக்காக தான் எழுதப்பட்டதுன்னு எனக்கு தெரியும் . இந்த புத்தகம் கொடுத்த பெண்ணை இந்த நிமிடம் நினைத்து பார்க்கிறேன்னு. எப்போ the last moment of life , கடைசி தருணத்தில் . என்னைக்கோ எப்போவோ ஒரு புத்தகம் கொடுத்த பொண்ண அவளோட கருணையை நினச்சு ஆறுதல் கொள்றாரு. சிறைல இருந்து வெளில வந்த தாஸ்தவோஸ்கி படைத்தது எல்லாமே காவியங்கள் ஆனா அதுக்கு அவர்க்கு தேவைப்பட்டது சிறைச்சாலையில கிடச்ச அந்த ஒரு புத்தகம். சொல்லப்போனா அது மிகச்சிறிய புத்தகம்.
எங்கோ, யாருக்கோ, ஏதோ ஒன்றுக்காக கொடுக்கப்பட்ட சிறிய பொருள் தான், அந்த தருணத்தை மகத்தானதாக மாற்றுகிறது. அந்த சிறிய பொருள் எந்த தருணத்தில் யாருக்காக யார் மூலமாக யாரால் தரப்பட்டது என்பதை பொறுத்து அதிசியமாகிறது . அது வெறும் பொருள் அல்ல அது இன்னொருவரின் ஆசியாக, ஆசையாக, கனவாக மற்றொருவருக்கு தரப்படுகிறது . தாஸ்தவோஸ்கிக்கு கிடைச்ச most precious gift அந்த புதிய ஏற்பாடு புத்தகம், எனக்கு அந்த ஒரு டெபிட் கார்ட்.
எனக்கு அப்போ தேவைப்பட்டது அந்த வரிகள் தான். சென்னை எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்துருக்கு ..இந்த பயணங்கள், மனிதர்கள், அனுபவங்கள் எல்லாத்துக்குமே புள்ளையார்சுழி சென்னை தான். ஒரு வேள அவர மீட் பண்ணாம இருந்து இருந்தாலும் சென்னைல எனக்கு சீட் கிடைச்சுருக்கும் ஆனா இதே மாதிரி ஒரு வாழ்க்கை சந்தேகம் தான்.
அதுக்கு அப்பறம் அவர நான் பாக்கவே இல்ல , இதோட 7 வருஷம் ஆகப் போகுது . இடைப்பட்ட நாட்களில் மூணு முறை போன்ல பேசி இருக்கோம் அதுல ரெண்டு முறை அவர் ரெண்டு பசங்களுக்கு உதவி கேட்டாரு. செந்தில், அதான் அவர் பேர் . கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் SMARTEVENTZன்னு சொல்லி event management/ Educational fair தொழில் செய்துக்கொண்டு வருகிறார்.
வாழ்வதற்க்கான நம்பிக்கையை சகமனிதன் தவிர்த்து வேறு யாரால் கொடுத்துவிட முடியும் ? உங்களுக்கும் அப்படி ஒரு most precious gift கிடைச்சுருக்கும். இன்னும் கிடைக்கவில்லையா எவனாவது ஒரே ஒருத்தன் இருப்பான் அவன் உனக்கு அந்த நம்பிக்கைய கொடுப்பான்.

1 Comments
He is my friend. Proud of him. Thanks for sharing those moments.
ReplyDelete