குணம்நாடிக் குற்றமும் நாடி


காலங்காத்தால ஆபீஸ்ல இருந்து போன் ,

சார், pick up assign பண்ண ஒருத்தர் லீவ் போட்டுட்டாரு alternative source இல்ல. அந்த ட்ரிப் கான்செல் பண்ணிடவா

சரி பண்ணிடுங்க

டக்குனு ஒரு யோசனை , உடனே கால் பண்ணி

pick up எங்க

ஏர்போர்ட் சார்

கஸ்டமர் name

விஷ்ணு

ஒரு நிமிஷம்

கான்செல் பண்ணாதீங்க , நானே போறன்

ஒகே சார், சோ நைஸ் ஒப் யூ

அவ போன் ah வச்சாவாட்டி என்ன நினச்சருப்பான்னு தெரியும்,பெரிய கஞ்சனா இருப்பான் போல..6௦ கார் ஓடுது இப்படி ஒரு சவாரி கூட விட மாட்றான்னு ஆனா காரணம் அது இல்ல. வேற இருக்கு.

எப்போ நான் ஓனர் ஆனானோ அப்போவே கார் ஓட்ரது நின்னுப் போச்சு ஆபீஸ் போய் எல்லாமே சரியாய் போகுதாணுப் பாக்கவே நேரம் சரியா இருக்கும் அப்ரும் ஏர்போர்ட், நீங்க நம்புவீங்களான்னு தெர்ல இதுவர நான் போனதே இல்ல.

இரண்டாவது இந்த பேரு . பேருக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கானு கேக்கறீங்களா .ஒரு காலத்துல இருந்துச்சு இப்போ இல்ல , எனக்கு வீட்ல வச்ச பேரு விஷ்ணு.அப்பா அம்மா இருக்க வர அந்த பேரு இருந்துச்சு .அவங்க போனதுக்கு அப்ரும் அந்த பேரும் போச்சு. இப்போ அந்த பேருக்கும் எனக்குமே சம்பந்தம் இல்ல..

சவாரிக்காக ஏர்போர்ட் போறன் ,விஷ்ணுன்னு போர்டு வச்சுட்டு இருந்தன் சட்டுன்னு என்ன மாதிரி ஒரு ஆளு.இல்ல என்ன விட ரொம்ப அழகா இருந்தாரு. நான் விஷ்ணுன்னு சொல்லி கை கொடுத்தாரு.

வண்டில உக்காந்தாரு, அவர கவனிக்கரன் , என்ன மாதிரி இல்ல..நான் எப்டி இருக்கணும்னு நினச்சனோ அப்டி இருக்காரு.சுருட்டை முடி, தொப்பை இல்லாத வயிறு , கழுத்துல சன்னமா ஒரு சையின் , டக்கின் பண்ண ஷர்ட்.

ஏன் அப்டி பாக்கறீங்கன்னு

ஒன்னும் இல்ல சார், எங்க போகணும்
காலையில இருந்து சாப்படல ,நல்ல ஹோட்டல்க்கு கூட்டிட்டு போங்க முதல
ரெண்டு நிமிஷம் யோசிக்கிட்டு மெதுவா சொல்றன் ,

சார் எனக்கு தெரிஞ்ச ஹோட்டல் இருக்கு, பாக்க அவளோ நல்லா இருக்காது பட் டேஸ்ட் நல்லா இருக்கும்.போகட்டுமா

போங்க

நான் இந்த ஹோட்டல் போலாம்னு சொன்னது எனக்காக , போகணும்னு நினச்சுடே இருப்பேன் .ஆனா ஏதோ ஒண்ணு என்ன தடுக்கும் போக முடியாம. நாலு வருஷதுக்கு அப்ரும் இங்க வந்துருக்கன்.

அந்த இட்லி சாம்பார் எத்தன வருஷம் ஆனாலும் அப்டியே இருக்கு . தேங்காய் சட்னில கொத்தமல்லி தலை அதிகமா போட்டு அரைச்சுருப்பாங்க, அதே மாதிரி சாம்பார்ல தக்காளி வாசம் தூக்கலா இருக்கும் நான் நல்லா சாப்டன் . சார் ரொம்ப நாளைக்கு அப்ரும் தேங்க்ஸ்ன்னு விஷ்ணு சொன்னாரு

அவர்க்கு நான் தன் தேங்க்ஸ் சொலணும்,அப்டியே திரும்பிப் பாக்கரன், அந்த தெரு .பகல் வெளிச்சம் , பழைய நினைவுகள். அருவருப்பான உணர்வுகள் என் மேல .உடனே வண்டிய எடுத்துட்டு வெளில வந்துட்டன்.

சார் எங்க போகணும்ன்னு சொல்லவே இல்லையே

பாண்டிச்சேரி போங்க .ஒரு வேலை இருக்கு அத முடுச்சுட்டு திரும்பி வந்து ஏர்போர்ட்ல விட்ருங்க

என்னோட கார் அப்டியே நின்னு போச்சு , நான் திரும்பப் போகவே கூடாதுன்னு நினச்ச ஊரு

சார், அவ்ளோ தூரம் முடியாது .நான் வேற டிரைவர் arrange பண்றன்

ஏன் சார், உங்களுக்கு டிப்ஸ் தரன் உங்க ownerக்கு தெரியாம , ப்ளீஸ் போங்க

வண்டி இன்னும் on பண்ணல,





நம்ம மூளைக்கு மனசு ரெண்டு யோசனை சொல்லும் ஒரே கேள்விக்கு , ஆனா மூளை சரியோ தப்போ இரண்டாவது சொல்றது தான் கேக்கும்.

அப்டி தான் இப்போ நான் வண்டிய ஸ்டார்ட் பண்ணதும்.கண் மட்டும் தான் ரோட்டில இருந்துச்சு , மனசு திரும்பிப் போன்னு சொல்லிட்டே இருந்தச்சு

கொஞ்ச நேரதுல அவர் , இங்க ஒரு பத்து நிமிஷம் இருங்க , ஒரு friend ah பாத்துட்டு வந்தரன்.அவர் சொலிட்டு போகும் போதே தெரியும் , எனக்கு அந்த ஞாபகம்லாம் வரும்னு,

இப்போ பாண்டிச்சேரிக்கு இரண்டாவது தடவையா போறன் .இப்போ எதுக்கு போறன்னு தெரியாது ஆனா முத முறை போகும் போது என்ன ஒரு குற்ற உணர்ச்சியில போனனோ அதே மாதிரி தான் இப்போயும் போறன் ஆனா தப்பு மட்டும் வேற.

நான் ஏன் முத முறை போனன்னு, நானே யோசிக்சு பாக்கறன்.

மகிழன் என் பேரு ஆனா நான் சந்தோசமா இருந்தது என்னவோ நான் விஷ்ணுவா இருக்கறப்போ தான்,

எங்க தாத்தா அந்த கால எஞ்சினீர் , வீட்ல சரளமா காசு புலங்கும் , காசோட அருமை என்னனு தெரியாமலே அத செலவு பண்ண ஆரம்பிச்ச குழந்தை நான் , சரியாய் சொல்லணும்மனா Born with Silver Spoon குழந்தை .சித்தி , பெரியப்பா , மாமான்னு எல்லா உறவுகளும் எங்க ஊர்ல எங்கள சுத்தி தான் இருந்தாக

பசங்கலாம் அம்மா செல்லம்னு சொல்லுவாங்க ஆனா நான் அப்பா செல்லம். அம்மா எப்போ பாரு திட்டிகிட்டே இருக்கும், அப்பா தான் எனக்கு எல்லாமே.அப்பா அடிக்கடி சொல்லுவாரு, படிக்கறது பெருமை இல்ல விஷ்ணு , நாலு பேருக்கு வேலை கொடுக்கணும் அதான் உண்மையான பெருமை. உன்னால வாழ்ந்தவங்கன்னு ஒரு குடும்பம் ஆச்சு இந்த உலத்துல இருக்கனும்ன்னு .

விளையாட்டுப் பையன்னு அப்பா சொல்லுவாரு , ஆனா அவர் மட்டும் தான் அப்படி மத்தவங்க எல்லார்க்கும் நான் பொறுப்பில்லாதவன் எல்லாத்துக்கும் அடம்,பிடிவாதம் கிடைக்கலைன்னா என்ன வேணா பண்ணற பையன்.எங்க தாத்தா இறந்தப்போ கூட ,அவரு செத்துப் போய்டாருனு தெர்ல , சக்திமான் டிரஸ் வேணும்னு அடம் பிடிச்சதா ஞாபகம்.

நான் ஒன்பதாவது படிக்கற வர எல்லாமே நல்லா தான் போச்சு , நாம சந்தோசமா எதுவர இருந்தோம்னு தெரியும் ஆனா ஏன் சந்தோசமா இருந்தான்னு கேட்ட சொல்ல தெரியாது அது போலத்தான் நானும்.

அன்னைக்கு பாண்டிச்சேரிக்கு நான் அப்பா அம்மா கார்ல போறோம் ,அப்பா டிரைவ் பண்றாரு , கண் இமைக்ற நேரதுல அது நடந்த்ருச்சு .எங்க அப்பா என்ன எட்டி உதைச்சது மட்டும் தெரியும் .முழிச்சு பாத்தா hospitalல

அப்பா எங்கன்னு கேட்டன்

சாமிக்கிட்ட ரெண்டு பேரும் போய்ட்டாங்கன்னு சொன்னாரு .அப்டினா என்னனு விவரம் தெரிய கொஞ்ச நாள் ஆச்சு ..

நேத்து உங்களுக்கு எல்லாமே இருக்கும் , ஆனா இன்னைக்கு எதுமே உங்களுக்கு இல்ல, யாருமே உங்களுக்கு இல்லன்னு ஒரு நிலைமை எதிரிக்கு கூட வர கூடாது .எங்க வீட்ல எல்லாமே இருந்தது , பீரோ புல்லா அம்மாவோட சேலை. நகைங்க , அப்பா உக்காந்து இருக்க சோபா எல்லாமே .ஆனா அவங்க இல்ல.

பொறக்கும் போதே அனாதையா இருக்கறது வரம், அம்மா அப்பா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு அவங்க இல்லாம இருக்கறது வாழும் போதே நரகத்துல இருக்க மாதிரி.

எல்லாருமே என்ன நல்லா பாத்துகிட்டாங்க , ஆனா எனக்கு உறுத்தலா இருக்கும் எதோ பாவம் பாத்து கவனிக்கற மாதிரி .என்ன hostelல சேர்த்தி வுங்கன்னு சொலிட்டன். மாமா, சித்தப்பா , பெரியப்பா ன்னு எல்லாருமே பணம் சரியாய் அனுப்பிடுவாங்க.நான் எதுக்கு படிக்கணும் , யாருக்காக படிக்கணும் , என்ன படிக்கணும் எதுமே எனக்கு தெரியாது .அது எதுமே எனக்கு தேவை இல்லன்னு தோனுச்சு

எப்போ hostel போகும் போது மகிழன்னு என்ன கூப்ட ஆரம்பிச்சங்களோ அப்போவே விஷ்ணு இந்த உலகத்த விட்டு போய்ட்டான்.எந்த அளவுக்கு தனிமை என்ன விரட்டுசோ அதே அளவுக்கு தனிமைய நான் தேடி போனன். அது எனக்கு பிடிச்சது .அது மட்டும் தான் எனக்கு பிடிச்சது. ஸ்கூல் முடுஞ்சு , காலேஜ் சேர்ந்தன் , சூழ்நிலை மாறிபோச்சு ஆனா அந்த தனிமை என் கூட தான் இருந்தச்சு .தனிமை வரும் போதே ஒரு குற்ற உணர்ச்சி வரும் , கூடவே என் மேல கோவமும் . அப்போ ஒரு புண்ணியவான் சரக்கு அடி மச்சி எல்லாமே சரியாய் போய்டும்னு சொன்னான் .சொல்ல மறந்துட்டன், அதுக்கு முன்னாடியே எனக்கு சிகரெட் பழக்கம் இருந்தச்சு. இன்னைக்கு ஒரு நாள் அடிச்சுட்டு விட்ருவோம்ன்னு நினைச்சன் .விட்டுடன் என் hostel ah சரியாய் சொலனும்னு துரத்தி விட்டுட்டாங்க குடிகாரன்னு சொல்லி. வெளில வீடு எடுத்து இருந்தன்.இதோ இப்போ சாப்டனே அங்க தன் என் வீடு இருந்துச்சு, பகல் கொஞ்சம் கொஞ்சமா வெறுக்க ஆரம்பிச்சன் .

இருட்டு தான் என் வாழ்க்கையா ஆச்சு , இருள் பிடிக்க ஒவ்வொருத்தர்க்கும் ஒரு காரணம் இருக்கு , எனக்கு பிடிச்ச காரணம் அதுல என்ன யாருக்குமே அடையாளம் தெரியாது.இருளோட இருளா நானும் வாழ்ந்தன் . வெளில வரவே மாட்டன் , காலேஜ் சிகரெட் குடி இதான் என் வழக்கமா இருந்தது அன்னைக்கு வர ,

சாப்ட்டு ஹோட்டல் ல இருந்து வரும் போது ,அவள பாத்துருக்க கூடாது அப்டியே பாத்தாலும் அவ பக்கதுல போய் இருக்க கூடாது அப்படடியே போய் இருந்தாலும் ஐநூறு ரூபாய்ன்னு அவ சொன்னப்போ வீட்டுக்கு ஓடி போயிருக்கன்னும்

முடியலையே , அதுக்கு காரணம் வயசா , இல்ல தனிமையா இல்ல என் கிட்ட இருந்த பணமான்னு தெர்ல.தெரியாம போனன்னு சொல்ல மாட்டன் , தெரிஞ்சே தான் போனன் .இனி போகவே கூடாதுன்னு நினச்சன்

மாசம் ஒருக்க, மாசத்துக்கு ரெண்டு ஆச்சு அப்ரும் வாரம் ஒருக்கா கடைசியல வாரம் மூணு முறைன்னு அப்டியே போச்சு
நடுவுல காலேஜ் முடுச்சுடன். கல்யாணம் பண்றது இதுக்காக தான் , இப்படியே இருந்துடனும்.கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து அப்ரும் சாகறதுக்கு இது பரவாலன்னு தோனுச்சு

அந்த இருட்டு வாழ்க்கையல ஒவ்வொருத்தியும் ஒரு கதை சொல்லுவா , சில பேர் என்ன காதலிக்கறேன்னு கூட சொல்லுவாங்க அது பணத்துக்காக இல்ல உண்மையாலுமா அதல்லாம் நான் யோசிக்கல.என்ன பொறுத்தவரை அந்த மூணு மணி நேரம் தான் எனக்கும் அவளுக்கும் எல்லாமே.அவங்க முகத்த கூட சரியாய் கவனிக்க மாட்டன்.

எனக்கே என் மேல அருவருப்பா இருக்கும் .நான் ஏன் உயிரோட இருகண்ணும் தோணும் ஆனா சாக முடியல .ஏதோ தடுத்தது.சின்ன வசயுல தப்பு பண்ணா மட்டுக் கட்டைல அடிச்சுட்டு நான் அழுகும் போது , அம்மா சரி அழுவாத போய் தூங்கி எழுந்து நல்ல புள்ளையா இருக்கனும் சரியாய்ன்னு சொல்லுவாங்க. அத தான் ஒவ்வொரு நாளும் நினச்சுடே தூங்குவன் .ஆனா நாட்கள் போனதே ஒழிய நான் மாறவே இல்ல. அன்னைக்கு ஒரு நாள் மாமா போன் பண்ணி உனக்கு பாண்டிச்சேரில வேலை பாத்ருக்கன் போரயான்னு கேட்டாரு.

அந்த ஊரு பேரு கேட்டாலே கோவம் தான் வரும் .அன்னைக்கு வீட்ல வேற ஊர்க்கு போலாம்னு சொன்னபோ நான் தான் ரெண்டு நாள் சாப்டாம அடம் பிடிச்சு அந்த ஊருக்கு கூட்டிட்டு போக சொன்னன்.அங்க போகும் போது தன் accidentல என் வாழ்க்கை இப்படி ஆச்சு.

மாமாகிட்ட ரெண்டு நாள் டைம் குடுங்கன்னு கேட்டன் யோச்சிச்சு சொல்ல . அப்போ அவ முகம் கூட ஞாபகம் இல்ல , அவ சொன்ன..உங்கள இங்கயே பாக்கரன் சார் .தப்பா நினைக்காதீங்க வேற எங்காவது போங்க அப்போதான் இத விட முடியும் .உங்களுக்கு வயசு இருக்கு சார், இது வேணாம் உங்களுக்கு .போயிருங்கன்னு.

அவ சொன்னத கேட்டு அந்த தெருவ விட்டு கிளம்புணன்.இதோ இன்னைக்கு தான் மறுபடியும் போனன்.

மாமாக்கு போன் போட்டு சரின்னு சொல்லிட்டன்.சித்தி அவங்க பங்குக்கு ஒரு பைக் அப்ரும் பெரியப்பா அவர் பங்குக்கு கொஞ்சம் காசு கொடுத்தாரு வழக்கம் போல நான் எங்கயும் கஷ்டப் படக்கூடாதுன்னு இதோ இப்போ பாண்டி போகப் போறன் இன்னொரு முறை



பின்னாடி ஒரு தட்டல் ,

பயங்கரமான யோசனை போல

அப்படிலாம் ஏதும் இல்ல சார், போலாமா

ஹ்ம்ம் போலாம்

AC ஆப் பண்ணுங்க சார் , நீங்க சிகரெட் குடிப்பீங்களா

இல்ல சார், விட்டுட்டன்

ஏன் உங்க லவர்க்கு புடிக்காத

அப்டி யாருமே இல்ல சார்

சாரி சார்

பரவால சார்

நீங்க உங்க லவர் பாக்க போறீங்களா

ஆமா சார், ஆனா அது லவ்ன்னு சொல்றதான்னு தெர்ல.வித்தியாசமான கதை. யார்க்கும் சொல்றதா இல்ல .சாரி .இளயராஜா பாட்டு இருந்தா போடுங்கன்னு சொன்னாரு

போட்டன்

நான் தூங்க போறன் .பாண்டி வந்தா எழுப்பி விடுங்கன்னு சொன்னாரு

எனக்கு தெரியும் அவர் தூங்க மாட்டாரு..அவரோட காதல நினைச்சு பாப்பாரு

கடந்த காலத்த மீட்பதில் இறைவனை விட இளையராஜாக்கு சக்தி இருக்ன்னு நினைக்கிறேன் .அந்த இசை, ரம்மியமான சூரியன் , இடப்பக்கமா இருக்க கடல் அதுல வர அலைகள் எல்லாமே எனக்கு அவள ஞாபகப் படுத்துது .

மனசு மோசமான எதிரி , மறக்கண்ணும் நினைக்ற விசயத்த திரும்ப திரும்ப ஞாபக படுத்துது .

ஆமா நான் சிகரெட் விட்டதுக்கு அவ தான் காரணம் .ஏழு வருசமா இருந்த பழக்கம்.

ஒன்னு சொன்ன தப்பா நினைக்க மாட்டியே , நீ ரொம்ப நல்லவன் டா ஆனா இந்த சிகரெட் மட்டும் விட்ரு ப்ளீஸ் .அட்வைஸ் பண்ணல ஒரு friend ah சொல்றன் .

அவ சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக விட்டன் .அதுக்குப்பிறகு இது வர தொட்டதே இல்ல ,

தவிர்க்க முடியல , அவளோட ஞாபங்கள் வரத ,அவளுடைய ஏதும் என்னிடம் இப்போ இல்ல , ‘நாங்க ஒரு காலத்தில்’ என்ற வார்த்தைய தவிர

மிளகு அளவு பொட்டும்
முழ மல்லிகையும்
சின்னஞ்சிறு ஜிமிக்கியும் போதும்
பேரழகி உருவாகிட

அவ அவ்ளோ அழகியான்னு தெர்ல..ஆனா எனக்கு அவ தேவதை .

பாண்டில வேலைக்கு போய் ரெண்டு மாசம் இருக்கும் , அந்த குடி சிகரட்டை விட முடியல. பொண்ணுங்க வாசம் கொஞ்சமா குறைஞ்சு போச்சு அதுக்கு காரணம் அந்த தெருவ நான் இன்னும் கண்டுபிடிக்கல

அப்படி ஒரு நாள் மதியம் கை நடுக்கல் எடுத்து குடிக்க போகலான்னு வண்டியில போகும் போது சட்டனு மழை , எல்லா மரத்தடியிலும் ஆளுங்க. எனக்கு எங்கயும் நிக்க புடிக்கல.அப்போதான் அந்த மரம் , யாருமே இல்லாம தனியா .

அங்க நின்னுட்டு இருந்தன்.சிகரெட் இழுக்கலாம்ன்னு நினைச்சபோ தான் அவ,

வண்டிய நிறுத்திட்டு என் பக்கதுல

அவ கால் தான் பாக்கறன்.ரொம்ப அழகா நின்னுட்டு இருந்தா , நிக்கறதுல என்ன அழகுன்னு கேக்கறீங்களா. எனக்கு அழகா இருந்ததே !

அவல கொஞ்சம் கொஞ்சமா நிமிர்ந்து பாக்கறன்.

அவ போட்ருந்த உடை நேர்த்தி,கைல போட்ருந்த சன்னமான வளையல் , அரைக்கை விட கொஞ்சம் அதிகமா , அதே மாதிரி கழுத்து வர ஒட்டி போட்ருந்த சுடிதார் ,தோடுக்கு மேல சின்னதா இன்னொரு தோடு தலைல மல்லிகைப் பூ அப்டியே நடுவுல மஞ்சள் நிறத்துல ரோஜான்னு எல்லாமே புதுசா எனக்கு இருந்துச்சு

முத முறையா ஒரு பொண்ணு முகத்த பாக்கறன், கழுத்துக்கு கீழ பார்வை போகல.பார்வை கீழ போகும் போது யாரோ வந்து என்ன கழுத்து தூக்கற மாதிரி ஒரு அழுத்தம்.

அவ என்ன பாத்தவாட்டி,அவ துப்பட்டாவ சரி பண்ணா.எனக்கு அசிங்கமா போச்சு.

மழை விட்டு போச்சு , அவ வண்டி ஸ்டார்ட் ஆகல,

எனக்குள்ள இருக்க விஷ்ணு கொஞ்சமா வெளில வந்தான்,நான் கிட்டப் போய் ,

மேடம் , நான் ட்ரை பண்ணவா

தேங்க்ஸ் சார், ப்ளீஸ்

வண்டி ஸ்டார்ட் ஆகல

மேடம் , தண்ணி உள்ள போயிருக்கும் , பக்கதுல பட்டறையில விடலாம் அப்டியே என் வண்டிய TOE பண்ணிட்டு வாங்க

அப்படின்னா,

ஒரு கால் என் வண்டியல வச்சுட்டு வாங்க

அதல்லாம் எனக்கு பழக்கம் இல்ல

அப்போ நீங்க என் பைக் ஓட்டுங்க , நான் TOE பண்றனு சிரிச்சுகிட்டே சொன்னன் (எனக்குக் கூட இப்படி பேச வரும்ன்னு அப்போ தான் தெரிஞ்சுச்சு)

என்ன பாத்தா எப்படி தெர்யுடுனு கேட்டா

கொஞ்ச நேரதுக்கு அப்ரும் நான் சொல்ற மாதிரி அழகா TOE பண்ணிட்டு வந்தா

பட்டறையில விட்டுட்டு , எனக்கு தேங்க்ஸ் bye ன்னு சொன்னா

நான் எதுமே சொல்லல, திரும்பி கூட பாக்காம வந்துடன் .

அன்னைக்கு நைட் மாமா கூப்டாங்கனு ஊர்க்கு போயிட்டு மூணு நாள் கழிச்சு திரும்ப பாண்டிக்கு போறன் .அந்த மூணு நாள் பூரா அவ நின்ன அந்த நளினம் தான் என் கண்ணுக்குள்ள இருந்துச்சு

சட்டனு தோனுச்சு , பைக் எடுதுட்டு அந்த எடத்துக்கு போறன் , அவ அங்க நின்ன..நிசமா...யாரயோ.. எதிர் பாத்துக்கிட்டு இருக்க மாதிரி இருந்துச்சு.

அங்க போனன் . உடனே இன்னக்கு மட்டும் நீங்க வரலைன்னா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருப்பேன்.அப்ரும் தான் தெரிஞ்சுச்சு அவளோட வண்டி டோக்கேன் என்கிட்ட மாட்டிகிடுச்சுன்னு.

அந்த பட்டறையில அது உங்க வண்டின்னு சொல்றாங்க ..உங்கள கூட்டிட்டு வர சொல்றான் இல்ல டோகேன் கொண்டு வர சொல்றான்.

நல்ல வேலையா அதே பேண்ட் போட்டுட்டு வந்தன் , டோகேன் கொடுதுட்டு வண்டி வாங்குனோம்

ஆமா என்ன பத்தி எதுமே தெரியாது , என்னனு போலீஸ் கிட்ட சொல்லி இருப்பீங்க

உங்க வண்டிய TOE பண்ணும் போதே வண்டி நம்பர் மனப்பாடம் பண்ணிடன்

சரியான ஆளு தான் நீங்க

இடப் பக்க புருவத்த மேல தூக்கி குட்டியா சிரிச்சா .. தேவதை மாதிரி இருந்தா....

அதுக்கு அப்ரும் எங்காவது எதச்யோ ரோடுல கிராஸ் பண்றபோ , சின்னதா தலை ஆட்டுவா , பாக்க நல்லா இருக்கும்.அப்டி ஒரு நாள் நான் நடந்து போகும் போது, பின்னாடி ஒரு குரல் .அவ தான் .

என் friend வரன்னு சொன்ன ,அவ வர லேட் ஆகும் போல.. தனியா நிக்க ஒரு மாதிரி இருக்கு ..கொஞ்சம் நேரம் கூட நிக்கறீங்களா

எனக்கு ஒரு மாதிரி ஆச்சு. சரின்னு சொன்னன்

காபி சாப்படலாம

எனக்கு காபி பழக்கம் இல்லைங்க

என்னங்க இந்த காலத்துல காபி கூட பிடிக்காத இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்களே .

எனக்கு என்ன சொல்றதுன்னு தெர்ல, அமைதியா இருந்தன்

காபி மட்டும் குடிக்க மாட்டீங்க , ஆனா சிகட்ரெட் பழக்கம் இருக்கு போல

எங்கயோ நான் சிகரெட் அடிக்கும் போது பாத்ருப்பா போல

காபி குடிச்சோம் ,

அவ பேரு மேகவதின்னு சொன்ன

மேகான்னு கூப்டவா

உங்க பேரு என்ன,

மகிழன்

அப்போ நான் மகின்னு கூப்டுவன்

நான் சிரிச்சுட்டன் , எனக்கு கூட சிரிக்க தெரிஞ்ச்சு ஆனா என்ன நீ விஷ்ணுன்னு கூப்டுனு சொல்லணும் போல மனசு சொல்லுச்சு .ஆனா ஏதோ தடுத்துச்சு .

என்னனவோ பேசுனோம் , நெறைய பேசியது போலவும் எதுமே பேசாதது போலவும் , எவளவு பேசினாலும் தீராதது போலவும் இருந்தது அந்த முப்பது நிமிடம் ,

தொலைப்பேசி எண்கள் பரிமாறப்பட்டு ,பேச்சு தொடர்ந்தது.
என்ன முழுசா நம்புனா சிகரட்டை தவிர வேற ஏன்டா பழக்கமும் இல்லன்னு உறுதியா

என்னால எதுமே உண்மைய சொல்ல முடியல ..அவள ஏமாத்தரன் , இது தப்புன்னு மனசு சொல்லிகிட்டே இருக்கும். யாருமே எனக்கு வேணாம்னு இருந்தன் .

நான் அவள avoid பண்ணும் போதெல்லாம் , என்ன தேடி தேடி வந்தா .

எனக்கு அவள காதலிக்கும் ஆசைலாம் இல்லவே இல்ல .அவளோட பேச பிடிச்சது , அவளோட இருப்பு பிடிச்சது , மொத்தத்தில் அவள பிடிச்சது அவ்வளவே .

சட்டுன்னு ஒரு நாள் சொல்லிட்டா , எனக்கு உன்ன பிடிச்சுர்க்கு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு

விஷ்ணுவா இருந்தா உடனே ஆமான்னு சொல்லிருப்பன்.இப்போ வேணாம்ன்னு சொல்லவும் முடியல சரின்னு ஒத்துக்கவும் முடியல

அவள் புன்னகை அவள் வெட்கம் என்னுடய மௌனம் இது மட்டும் தான் அப்போ அங்க நடந்துச்சு .


கொஞ்ச நாள்ல , அவ எனக்கு கொடுத்த உரிமையோ இல்ல நான் மறந்துபோன பொண்ணுங்க வாசமோ அன்னைக்கு அவள என் வீட்ல தங்க வைக்க வேண்டியதா போச்சு .அவ அதுக்கு வருத்தப்பட்ட மாதிரி தெர்ல, காசுக்கும் காதலுக்கும் நெறைய வித்தியாசம் இருக்குனு தோனுச்சு

நாளைக்கு அதே இடத்துக்கு வா , ஊர்க்கு கூட்டிட்டு போறன்னு சொன்னன்

ஆனா நான் அங்க போகும் போது அவ அங்க இல்ல .கொஞ்ச நாள்ல மறுபடியும் ஒரு குற்ற உணர்ச்சி அங்க இருந்து கிளம்பிட்டன்.



இதோ இப்போதான் இரண்டாவது முறை போறன் .

சார் நீங்க சொன்ன இடம் வந்த்ருச்சு ,

சரி நீங்க இங்க இருங்க .நான் வரன்னு சொல்லிட்டு போனாரு

நான் இப்போ வலப்பக்கம் திரும்பிப் பாக்கறன் . அதே மரம் கம்பீரமா நிக்குது. அங்க இருக்கா ஒவ்வொரு நிமிடமும் முள் படுக்கையில இருக்கா மாதிரி இருந்தச்சு .

அவள பாக்க போலாமா வேணாமான்னு

அந்த மரம் , அந்த சாலை. தூரமா தெரியற அந்த பட்டறை அந்த பகல் வெளிச்சம் என்ன சாகடிச்ச மாதிரி இருந்துச்சு

சரி அவள பாக்க போலாம்ன்னு வண்டியில இருந்து இறங்கும் போது ,

சார் அவளோ தான் வேலை ஓவர்..வாங்க சென்னை போலாம்..

சார் போலாமான்னு ஒரு சன்னமான குரலல கேட்டன்

சீக்கரம் போங்க சார் , டைம் ஆச்சு

ஒரு ஓரமா வந்த கண்ணீர துடைக்க முடியாம அது அந்த காத்துல காஞ்சுப் போச்சு .

சார் உங்க owner பத்தி நெறைய கேள்வி பட்ருக்கன் , ஹி இஸ் seriously inspirationன்னு சொன்னாரு

நான் சிரிச்சன்.

உங்க பேரு சொல்லவே இல்லையேன்னு கேட்டாரு

மகிழன்

என்ன சொல்றீக , மகிழன் travels MD ah

ஆமா சார்

சத்தியமா நம்ப முடியல ..உங்கள பாக்கணும் நினசுடே இருப்பேன்

உங்க சோசியல் வொர்க்லாம் சூப்பர் .குறிப்பா இந்த prostitutes நீங்க பண்ற initiative ..

ஏதோ என்னால முடிஞ்சது .

அப்டியே பேசிட்டே வரும் போது , ஏர்போர்ட் வந்த்ருச்சு

சார் உங்க family பத்தி எங்கயுமே சொன்னது இல்லையே . Are you married?

ஹ்ம்ம்

wife பேரு என்ன

இல்ல வேணாம்

குழந்தைங்க?

ஒரு பையன் சார்

அவன் பேரு

இல்ல வேணாம் சார்

உங்க பையன் உங்கள மாதிரி இருப்பான

என்ன மாதிரி வர கூடாதுன்னு தான் வளக்கரன் சார் .உங்கள மீட் பண்ணது ரொம்ப சந்தோசம்

எனக்கும் தான்

திரும்ப எப்போ வருவீங்க சார் ,

பாக்கலாம்ன்னு சொலிட்டு சிரிச்சுகிட்டே போய்ட்டாரு

அந்த அசதியில கார்ah ஒரு ஓரமா நிறுத்திட்டு தூங்கிட்டன்.



அப்போ தான் யாரோ எழுப்பற மாதிரி , சார் இன்னும் ஆபீஸ் கிளம்பலையா

நடந்தது அத்துணையும் கனவுன்னு தெரியவே கொஞ்சம் நேரம் ஆச்சு. அப்போ கனவுல வந்த ஆளு வேற யாரும் இல்ல என் மனசாட்சியா தான் இருக்கும்ன்னு guess பண்றன்



சம்பவங்களின் கோர்ப்பு தான் கனவா வரும்ன்னு சொலுவாங்க ,எனக்கு நடந்த சம்பவங்கள் , ஏக்கங்கள் , மறந்து போன என்னுடைய பழைய முகம் எல்லாமே சேர்த்து ஒரு கனவா . நான் எப்படி இருக்கணும்னு நினச்சனோ அப்படி ஒரு உருவம் வாங்கி வந்து எனக்கு எல்லாமே ஞாபக படுத்தி இருக்கு.


ஆனா அந்த கனவுல கூட நான் திட்டமிட்டு மறச்ச ரெண்டு விஷயம் இருக்கு

ஒண்ணு அன்னைக்கு அம்மா அப்பா கூட கார்ல போகும் போது , நான் வண்டி ஒட்ரன்னு அடம் பிடிச்சு அப்ரும் சரி கியர் மட்டும் போடுன்னு அப்பா சொன்னாரு ..அந்த கோவத்துல வேகமா வண்டி போகும் போது reverse கியர் மாத்தி போட்டுட்டன்.அப்போ வண்டி கன்ரோல் பண்ணும்போதுதான் அந்த accident .அப்பாக்கு மட்டும் தான் இந்த உண்மை தெரியும். அந்த குற்ற உணர்ச்சி தான் என்ன அடியோட புரட்டிப் போட்டுச்சு .

அதான் என்னமோ தெர்ல , மேகாவ விட்டு சென்னை வந்தப்போ யாரோ ஒரு பெரியவர் தம்பி என்ன அங்க ட்ரோப் பண்றீங்கள ..கொஞ்சம் அவரசமா போகணும்ன்னு சொன்னப்போ மறுக்க முடியல ..எந்த கார்ல என் வாழ்க்கை போச்சோ அதேயே தொழிலா பண்ணுன்னு உறுத்துச்சு . எங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரி இப்போ ஒரு குடும்பம் இல்ல

80 குடும்பம் என்ன நம்பி இருக்கு., அப்பாக்காக இது .

இரண்டாவது அன்னைக்கு மேகாவ வர சொல்லிட்டு முத நாள் நைட் ஊர்க்கு கிளம்பிட்டன் .ஏன் போனன்னு கேட்டா என்ன சொல்ல ,

பிரச்சனைகள் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த தேவதை அவள் எனக்கு அவள பிடிச்சுருக்கு ஆனா அவ தேவதையாவே இருகண்ணும் ,நான் ஒரு அழுக்கு , மோசம் .நான் அவளுக்கு சரியானவன் இல்ல .என் கூட அவ வாழும் போது எனக்கு குற்ற உணர்ச்சி என்ன கொன்றும் .அவ நல்லா இருக்கணும் . நான் மூணு நல கழிச்சு போகும் போது அவ அங்க இல்ல .நான் திரும்பி வந்துட்டன் .

ஊரு உலகத்த பொறுத்தவரை எனக்கு கல்யாணம் ஆகி wife குழந்தை பொறக்கும் போது செத்துபோய்டா .ஆனா எனக்கு மட்டும் தான் தெரியும், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல .அப்போ அந்த குழந்தை ?


நான் தத்து எதுட்டு வளக்கரன்,இது மேகாக்காக. அவ அந்த குழந்தைய என்ன பண்ணானு தெரியாது . என்ன பொறுத்தவர இத எங்களோட குழந்தையா தான் நினைச்சு வளக்க போறன் .

என் குறிக்கோள் எல்லாமே ,என் குழந்தைக்கு அப்பா இல்லாத சோகமே தெரிய கூடாது .அவன் செத்து போனவாட்டி தான் நான் செத்து போகணும். அவனுக்கு அந்த தனிமை தெரிய கூடாது .அப்புறம் அவன என்ன மாதிரி ஒரு மோசமான ஜென்மமா வளர்க்க கூடாது .உலகத்துல இருக்கா எல்லா தப்பையும் பண்ண மிருகம் நான்.பண்ண பாவத்துக்கு புண்ணியம் தேடி ஓடிக்கிட்டு இருக்க பாவி .

என் ஒரே ஒரு கவலை , மகிழன் ஒருத்தனா தான் எல்லார்க்குமே தெரியும் ஆனா அவனுக்குள்ள விஷ்ணனு ஒருத்தன் இருக்கான்னு யாருக்குமே தெரியாம போச்சே. இனி தெரியவும் வாய்ப்பு இல்ல என்பது தான் நிசம் .

ஆனா இந்த வாழ்க்கை எனக்கு இப்போ புடிச்ருக்கு , ஒரு நிதானம் என்கிட்ட இருக்கு .எல்லாத்தயும் வெறும் பார்வையாளன கடந்து போக சொல்வது இல்லை .முதிர்ச்சி,பக்குவம்,புனிதம் கொடுப்பதில்லை இந்த நிதானம் .இந்த நிதானம் பொறுமை இல்ல .கண்ணீரையும் புன்னகையும் உருவாக்குவும் உருக்கவும் இந்த நிதானத்தால் முடியும்.இந்த நிதானம் ஒரு தவம் .இது எனக்குள்ள ஒரு போரை நடத்துகின்றது இதில் வலியும் இல்லை வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை.

அப்டியே ஆபீசெக்கு கிளம்பறன் , காலெண்டர்ல என் ராசிக்கு எதிர் பாரத சந்திப்புன்னு போட்ருக்கு. அலட்சிய புன்னகை தான் என்னுடைய மௌனமா அங்க ,

அதுக்கு மேல அந்த திருக்குறள் ,

​குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

எனக்காகவே வள்ளுவர் எழுதி இருப்பாருபோலன்னு நினச்சன் .


ஆபீஸ் ல இருந்து போன்

சார் எப்போ ஆபீஸ் வருவீங்க, உங்கள பாக்க ஒருத்தர் வந்து இருக்காங்க

எங்க இருந்து வந்து இருக்காங்க

பாண்டிச்சேரில இருந்து சார்

அவங்க பேரு என்ன

(அந்த பக்கம் பேரு கேக்கறங்க)

மேடம் உங்க name

மேகவதி , மேகான்னு சொல்லுங்க அவர்க்கு தெரியும்.


சார் ஷி இஸ் மேகா from பாண்டி

(இதுவும் கனவா இருக்க கூடாது)

சார் are u in the line?

சாரி மா ..அவங்கள என் ரூம்ல வெயிட் பண்ண சொல்லுங்க , இருபது நிமிசடுல அங்க இருப்பன்.

-------------------முற்றும் -------------------------------------------------

3 Comments