காலம் ரொம்ப விசித்திரமானது :ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு மஹா அற்புதமான நாளை வச்சுடும், அந்த நாள் எனக்கு இன்னைக்கு.இதோ என் WhatsApp status மாத்தப் போறேன் , இதுல என்ன அற்புதமுன்னு கேக்கறீங்களா அவ என்ன விட்டுப் போய் நாலு வருஷம் ஆச்சு, போகும் போது என்ன மட்டும் இல்ல , என் கவிதையை, என் இயல்பை ஏன் என்னையே என்கிட்ட இருந்து எடுத்துட்டு போய்டா .இப்போ இருக்கறது ஏதோ ஒரு உருவம் , இந்த நாலு வருஷதுல என்னோட status வெறும் “AVAILABLE” மட்டும் தான், DP ஏதும் வச்சது இல்ல.ஆன இப்போ ஒரு கவிதை யோசிக்கிட்டு இருக்கன் கஷ்டப்பட்டு , மறுபடியும் நான் மறந்துபோன எழுத்துகளை மீட்கொனரன் .ஏன் இந்த மாற்றம் தெரிஞ்சுகனுமா ரெண்டு நாளுக்கு முன்னாடி இருந்து என் கதை சொன்னாப் போதும்னு நினைக்கிறேன்.
ஆமாங்க சத்யா என்னைவிட்டுப் போய் இதோட நாலு வர்ஷம் ஆச்சு. இனி நமக்குள்ள ஏதும் இல்லன்னு சொல்லிடுப் போய்டா , அப்போ போனவள அதுக்குப்பிறகு பாக்கவே இல்ல. கல்யாண இன்விடடின் WhatsApp ல அனுப்பி இருந்தா , நீங்க நினைச்சது மாதிரியே நான் கல்யாணத்துக்கும் போல .அதுக்கு அப்ர்ரும் அடிக்கடி மெசேஜ் வரும் , நான் எதுக்குமே பதில் சொன்னது இல்ல . அவ போனதுக்கு அப்ரும் எந்த மாற்றமும் என்கிட்ட இல்ல , நீ என்ன நினைக்கறனு யார்க்குமே தெரியாது டா , அதான் உன்னோட plus னு சத்யா அடிக்கடி சொல்லுவா. கல்யாணம் வேணாம்னு அடம்பிடிச்சன் .ஆன பெண்ன விட ஒரு ஆணிற்கு திருமணம் செய்ய பெற்றோர்களும் உறவினர்களும் நெறைய ஆயுதம் வைத்துள்ளனர்.எனக்கு கல்யாணம் ஆகி ஒன்ற வருஷம் ஆச்சு.என் Wife அவளும் டாக்டர் தான்.பெண் குழந்தை பொறந்த்ருக்கு, மூணு மாசம் ஆச்சு .இங்க தான் என் பிரச்சன ஆரம்பம் .
பெண் குழந்தைன்னு தெரிஞ்சவுடனே பேரு சத்யா னு முடிவு பணிட்டன் , சும்மா யோசிக்ற மாதிரி நடிச்சுட்டு இருந்தன் இதுவர , காலையில அம்மா போன் பண்ணி நைட் குள்ள பேரு சொல்லலான நாங்களே ஒரு பேரு வச்சுடுவோம்னு சொல்லிட்டாக. எப்படி இந்த பேர சொல்ல , ஏன் இந்த பேருன்னு இவ கேட்ட என்ன பதில் சொல்ல .கல்யாணம் ஆன புதுசுல உங்களுக்கு லவ் இருந்துச்சான்னு இவ கேட்டபோ , என்ன யாரு லவ் பண்ணுவானு எங்கயோ பாத்து பதில் சொன்னன் , அந்த பொய்ய இதுவர சமாளிச்சுடன் . பொண்ணுகளுக்கு எதுமே தெரியாதுன்னு நினைக்காத எல்லாமே தெரியும் , தெரியாத மாதிரி நடிப்பாங்க அப்டின்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க , எல்லாமே என் மண்டைக்குள்ள வந்துப் போச்சு.அப்போ தான் சைத்தான் வேலை செய்ய ஆரம்பிச்சான்.
அவ friend marriage-க்கு போகணும்னு கேட்டுகிட்டே இருந்தா , நான் குழந்தை நலுங்கிரும்னு சொல்லி வேணாம்னு சொல்லிட்டன். இப்போ இத வச்சு பேசிட வேண்டியதுதான் .
இவக்கிட ஒரு பழக்கம் இருக்கு , நாம எதாவது கேட்டா புடிக்கலைன்னா புடிக்கலைன்னு சொல்லிட்டு உதட்ட சுழிப்பா. அவ பிடிகலன்னனு சொன்னது பிடிக்கலைனாலும் அந்த கோவம் எனக்கு பிடிக்கும்.
அவள கூப்டன் , உன் friend marriage-க்கு நாம கார்ல போய்ட்டு வரலாம் இன்னைக்கு நைட் – சின்னதா ஒரு ஸ்மைல் அதான் அவ கிட்ட இருந்து வரும் .மெதுவா சொல்றன் , நம்ம குழந்தைக்கு சத்யான்னு பேரு வைக்கலாமா ? என்ன ஒரு பார்வை பாத்த ..ஒரு ஆழமான பார்வை . இத விட வேறு பேரு சரியா இருக்காதுன்னு சொல்லிட்டு போய்டா .
சத்யான்னு சொன்னவுடனே நாள் பூரவும் அவ ஞாபகம் . என் வாழ்கையில ஒரு பாதி முழுக்க என் கூடவே வந்தவ .ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் பிரியணும்னு நினைக்கும்போது எனக்கு முன்னாடி அவ சொல்லி அவல கெட்டவள் ஆகிட்டு போய்டா . அதான் என் சத்யா , அவளுக்கு தெரியும் நான் அத சொல்லி இருந்தா அவளால தாங்கி இருக்க முடியாது .சொல்லபோன அவ அன்னைக்கு அத சொல்லுவானு தெரிஞ்சுதான் பாக்கபோணன் .சட்டென்னு வர இடி மழை மாதிரி அவ நினைவுகள்.
கல்யாணத்துக்குப் போறோம்.அங்க அவள தொந்தரவு பண்ணல , குழந்தை பசி எடுக்கற நேரத்துக்கு கொஞ்ச நேரம் முன்னாடி அவளே வந்துருவா. அப்டி அவ ஒரு டைம் வந்துட்டு போனவாட்டி அந்த கால் ,
எதிர்பாரத இன்ப அதிர்ச்சியில, கனவா நினைவான்னு தெரியாம .சத்யாகிட்ட இருந்து கால் , “இனி இந்த மாதிரி ஒரு காதல் யாரிடமும் வர வாய்ப்பில்லை இனி உன்கிட்டையும்” ன்னு சொலிவிட்டு வந்தவன் தான் அப்பரும் பாக்கவும் இல்ல பேசவும் இல்ல.அவ குரலை கேக்கணும் னு ஒரு ஏக்கம்,பேசலாமா வேணாமண்ணு ஒரு தயக்கம் , wife பாத்த என்ன ஆகும்னு ஒரு நடுக்கம் ஆண்டவா ஏன் என்ன சோதிக்கற .சரி பேசலாம்னு முடிவு பண்ணி குழந்தைய தூக்கிட்டு மாடிக்கு போறன்.
ஹலோ , எப்படி இருக்க டா ன்னு கேட்டா .
நான் லவ் பண்றபோ இருந்த சத்யா தான் ஆனா அதே சத்யா இல்லன்னு தெரிஞ்சுச்சு கல்யாணம் ஒரு பொண்ண எப்படி மாத்திருது பரப்புகள் ,ஆர்பாட்டம் எல்லாமே ஓஞ்சு தெளிந்த நீரோடை போல ஒரு நிதானம் குறிப்பா இந்த குரல
சொல்லு இருக்கன்
நீ கோயம்புத்தூர் வந்த்ருக்கயா
இல்லையே
பொய் சொல்லாத ,நான் உன்ன பாத்தன் .நைட் dinner சாப்டல அங்க தான் நானும் இருந்தன், family வோட .
நான் உன்ன பாக்கவே இல்ல
தெரியும் .நீ உன் குழந்தை கூட விளையாடிட்டு இருந்த .wife சாப்ட்டு இருந்தா .ரொம்ப அழகா இருக்கா என்ன விட . நீ specs போட்ருப்ப போல நல்லாத்தான் அதுவும் இருக்கு .
(நான் எப்படி பாக்காம போனன். அவ என்ன திரும்ப பாக்கவே கூடாதுன்னு நினைச்சன் , ஆனா என்ன பாத்ருக்கா உன்னிப்பா நோட் பண்ணிருக்கா எல்லத்தையும் )
ஹ்ம்ம்
அப்ரும், நீ என்ன தப்பா நினைகர்யா டா
ஏன் கேக்கற
இல்ல , நீ இல்லனு சொன்னலும் எங்க நீ என்ன தப்பா நினச்சுட்டு இருக்கையோன்னு ஒவ்வொரு நிமிசமும் நினைக்கின்றேன் டா
அதல்லாம் ஒன்னும் இல்ல .வேணும்னே தான் உன்ன avoid பண்றன்
(சில நொடிகள் மௌனம் அப்ரும் நான் இந்த முறை பேச ஆரம்பிக்கறண்) நீ எப்ப....டி இருக்க ( கேக்கும் போதே குரலும் உடம்பும் நடுங்கிருச்சு. அவ கண்ணுல தண்ணீ வந்ட்ருக்கும் போல )
இத நீ கேக்கணும் தான் இப்போ கால் பண்ணன் .நான் ரொம்ப நல்லா இருக்கேன் டா .நிஜமாவே . நல்ல family
தெரியும்
தெர்யுமா ?
அப்போப்போ உன்ன பத்தி விசாரிசுப்பேன் .
நான் ஒன்னு கேக்கட்டுமா
கேளு
நீ இன்னும் கவிதை எழுதற ?
ஆமா ன்னு பொய் சொன்னன் .( அது பொய்ன்னு அவளுக்கும் தெரியும்)
உன் wife பத்தி கவிதை எழுதி அனுப்பு , இல்ல வேணாம் உன் status ah வை பாத்துக்கிறேன்
பாக்லாம்.சரி வசுட்ரன் .
நீ அடிக்கடி சொல்ற மாதிரி உனக்கு முத குழந்தை பெண் குழந்தையே பொறந்த்ருக்கு போல .உன்ன இப்படி பாக்கணும்னு தான் நினைச்சன். இன்னைக்கு நிம்மதியா தூங்குவன்.
சரி bye
போன் வைக்கும் போது , கண்ணீரும் நினைவுகளும் கூடவே குட்டி சந்தோசம் இருந்தச்சு. ஆனா அது ரொம்ப நேரம் நீடிக்கல .மாடிலே ரெண்டு உருவம். கிட்டப் போய் பாக்கறான்
என் wife தான் , யாரோ ஒருத்தன் கூட பேசிட்டு இருக்கா ..இல்லை அழுது கெஞ்சிகிட்டு இருக்கா .உலக இயக்கமலாம் நின்னுப் போய் , நாங்க மூணு பேரு மட்டும் என் கண்ணுக்கு தெரியறோம்.ரெண்டு பேருமே அழுவரங்க .
அங்க வந்த ஒருத்தர கூப்டு கேட்டன்.
பாவம் சார் அவங்க , 3 வருஷம் லவ் பண்ணாங்க .யாரையுமே உறுத்தாத அமைதியான ஆழமான லவ் சார்.எங்க காலேஜ்ல எல்லாருக்குமே தெரியும் . யார் கண்ணு பட்டுதோ தெர்ல . அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணிகுச்சு .இவன் இன்னும் அவ ஞாபகமாவே இருக்கான். அதான் அவ கெஞ்சிட்டு இருக்கா கல்யாணம் பண்ணிக்க சொல்லி
அவர் பேரு என்ன சார்
சத்யநாராயணன் .நாங்க சத்யான்னு கூப்டுவோம்
கண்டீப்பா இது கனவு இல்லன்னு தெரிஞ்சுச்சு .அதுக்குமேல அங்க இருக்க கூடாதுனு குழந்தைய தூக்கிட்டு கீழ வந்துடன் .கொஞ்ச நேரம் கழிச்சு வந்தா எதுமே தெரியாத மாதிரி .
அப்போ என்ன ஒரு பார்வை பாத்தா ...என்ன ஒரு கருணை நிரம்பிய பெருந்தன்மையயான பார்வை . நானும் உன் போல தான் விதியால் ஏமாற்றப்பட்டேன் என்பது போல .அவளோட இடத்துல என்னோட சத்யாவும் , என்னோட இடத்துல அவளோட சத்யாவும் நினைச்சு பாத்தன் துளி கூட கோவம் வரல .இந்த ஒன்ற வருஷம் எவ்ளோ கஷ்ட பட்டுருப்பா , பொய்யா நடிக்கறது வலி எனக்கு தெரியும் அவளுக்கு அந்த வலி இருக்கணு தெரியும் போது இனம் பிரியா உணர்வு .
திரும்ப கார்ல கிளம்புறோம் .வலி முழுக்க மேகா ஞாபகம் .அதான் என் wife name .முத முறையா லாங் டிரைவ் அப்போ சத்யாவ மறந்தேன் .
கல்யாணத்துக்கு முத நாள் அப்பா சொல்றாரு , 23 பேரு வந்து பாத்துட்டு போயிருக்காங்க.அவளுக்கு உன்ன பிடிச்சுருகுனு சொல்லிருக்கா அப்போ அந்த வலியிலும் சின்ன கர்வம் இருந்துச்சு .இப்போ தான் தெரிது , சொந்த ஊர்ல இருந்து சென்னை போகும் போது பஸ்ல முன்ன பின்ன பாத்து ஏதோ ஒருத்தர் பக்கதுல உக்காருவோம் அதுக்காக அவங்கள பிடிச்சுருக்கு அப்டின்னு அர்த்தம் இல்ல சொல்லப்போன பேச கூட மாட்டோம் .ஏதோ உள்மனுசல கம்போர்ட் பீல் இருக்கும் .அப்படித்தான் மேகா என்ன செலக்ட் பண்ணிருக்கான் தோனுச்சு
யோசிச்சு பாத்த, ஒன்ற வருஷதுல எல்லாமே இருந்துச்சு .சினிமா, டென்னிஸ் டிவி சீரியல்கள் , தெரு நிகழ்வுகள் ,குரு பெயர்ச்சி ,குடும்ப கதைகள் , எரிச்சல்கள் இப்படின்னு என்னலாமா பேசி இருக்கோம் ஆனா மண்டைகுள்ள இருக்க சாத்தான் இவ எனக்கு இல்லன்னு சொல்லிட்டே இருந்துச்சு.
பதில் தெரியாத கெள்விகள் தான் வாழ்வை சுவாரசியமானதாகவும் கொடுமையானதகவும் வச்சுருக்கு .நிதானமாக யோசிக்கும் போது எனக்கும் அவளுக்கும் இடையே நட்பு , வாஞ்சை , உரிமை.ஈர்ப்பு கொஞ்சம் திருட்டு காமமும் இருந்தருக்கு அது உரிமை கொடுத்த தைரியம் .
அப்போ மணி ரெண்டு இருக்கும் , ஹலோ FM ல கண்ணதாசன் பாடல் ஓடிக்கிட்டு இருந்துச்சு .ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டிருந்த வரிகள் , நாலு வருசதுக்கு முன்னாடி அடி மனதில் புதைந்து போன வீணையின் ஒற்றை தந்தி மீட்டப் பட்டது போல ஒரு உணர்வு .AC கார்-ளையும் எனக்கு வியர்த்துச்சு.
ஆண் : காதலித்தாள் மறந்து விட்டாள் வாழ்வு என்னாகும்?
பெண் : அன்பு காட்டுகின்ற ஓரிடத்தில் காதல் உண்டாகும்
ஆண் :ஒரு முறை தான் காதல் வரும் தமிழர் பண்பாடு
பெண் :அந்தஒன்றை எது வெல்வது தான் கேள்வி இப்போது
ஆண் :வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு
பெண் :தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது
என்னகாவே கண்ணதாசன் எழுதி இருக்கார்னு தோனுச்சு.வீட்டுக்கு வந்தோம், குழந்தை மேகா ரெண்டு பேருமே தூங்கிட்டாங்க .
யாராலயும் பார்க்கப்படாத கவிதை வெறும் எழுத்துகளாகவே கடந்து போய்விடுகிறதுன்னு சொல்லுவாங்க அப்படி தான் எனக்கு மேகா தெரிஞ்சா. முத முறையா கல்யாண ஆல்பத்தை எடுத்து பாக்கரன்.
அந்த போட்டோ – மண மேடையில் தாலி ஏறும் வேளையில் அவளது கண்கள் – அந்த கண்களில் நாணம்மில்லை , நானும் இல்லை.
சுஜாதா சொல்ற மாதிரி , தாலி ஏறிய பின்பு பெண்ணின் படிப்பு , பட்டம் , உத்யோகம் , அனுபவம் ,குடும்பம் எல்லாமே பழைய சரித்தரம் ஆகுது. பெண்ணா பிறத்தல் இவ்வளவு கொடுமையானதா ?
பக்கங்கள் அற்ற புத்தகத்தில், எதுவுமே எழுதப்படாத புனிதமான கவிதை போல தூங்கிட்டு இருக்கா , கல்யாண ஆல்பத்துல கடைசியா அவ போட்டோ ,
காட்டன் புடவை
முழம் மல்லிகை
முத்துக் கொலுசு
மெல்லிய சங்கிலி
கண்ணாடி வளையல்
இளஞ்சிவப்பு மருதாணி
அதீதமெனில்..
இதழோர புன்னகை..அலுக்காத அழகியல்!
என் கண்ணுக்கு இப்போ அவ அழகா தெரியறா .இத வெளில சொன்ன என்ன பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க .நான் ஏன் சொல்லணும் ? காதல் ரொம்ப அந்தரங்கமானது .எங்க ரெண்டு பேருக்கும் மட்டும் அது தெரிஞ்சா போதும்.
சத்யா என்ன காதலிக்க நான் எதுமே செய்யல , நான் நானா இருந்தேன் ஆனா மேகா அப்டி இல்ல .என்ன தொலைச்சுட்டு தான் அவள கல்யாணம் பணிக்கிடேன்.நான் திரும்ப நானா மாறான போதும்.
இவக்கிட்டு இருந்து எதிர்பார்க்கறது “ I LOVE YOU “ என்ற பொய்யான வார்த்தைகள் அல்ல .ஒரு சிநேகிதமான , உள்ளார்தன்மான பிணைப்பு .திருமணம் என்ற பந்தத்துக்குள் செய்யப்படும் ஒரு ‘வியாபர தன்மையான உறவுக்குப் அப்பால் ‘ அவளிடம் இருந்து ஒரு அன்பான உறவு .
இதோ இந்த நொடி , நிகழ்காலம் .Whatsapp status மாத்திட்டேன். DP எங்க family போட்டோ.எதிர்பார்த்த மாதிரி சத்யாகிட்ட இருந்து தான் முத மெசேஜ் . எப்போயும் போல ஒரு smiley ஆனா அதுக்குள்ள ஆயிரம் அர்த்தம் இருக்கு எனக்கும் சத்யா-க்கும் தெரிஞ்சா போதும் .
என்ன கவிதைன்னு கேக்கறீங்களா, ?
நீ என் முதல் குழந்தை , இரண்டாம் தாய் மற்றும் ‘கடைசித்தோழி ‘
நீங்க நினைக்கறது சரி தான் , அந்த மஹா அற்புதமான நாள் இன்னைக்கு, ஏனா மீண்டும் ஒரு காதல் கதை தொடங்கிருச்சு இந்த முறை என் சத்யா இல்ல . மேகா கூட.
பக்கங்கள் புரட்டப்படும் !
3 Comments
Anna, words you have written are revolving around my mind :) Means a lot!
ReplyDelete#ஆழமான பதிவு
Super MURUGA!! __/\__
ReplyDeleteLovely story
ReplyDelete