இப்படியும் சில மனிதர்கள் - 2




சில புக்ஸ் படிக்கும் போது மட்டும் இல்ல மூவீஸ் பாக்கும் போதும் நமக்குள்ள அந்த படமும் , அந்த படங்களுக்குள்ள நாமும் கரைஞ்சு போய்டுவோம். அப்படி நான் சமீபத்தில் பார்த்த படம் Forever அப்படினு ஒரு பிரெஞ்சு படம். ஒரு தனிமையில் இன்னொரு தனிமை குறுக்கிடும் போது என்ன ஆகும் தான் கதை.அதுல ஒரு காதல் வச்சு சொல்லிருப்பாங்க.

புரியறமாதிரி சொல்லனும் அப்படினா , பஸ்ல போறோம்னு வச்சுக்குவோம். பஸ்ல ஏறி எறங்குற வர தான் நமக்கு டிரைவர் கண்டக்டர் பத்தி ஞாபகம் இருக்கும். அதுக்கு அப்பறம் நாம நம்ம பிரச்சனைய பாத்துகிட்டு போய்கிட்டே இருப்போம், அவங்களுக்கு குடும்பம் இருக்கா , அவங்க என்ன பண்றாங்கன்னு நினைக்க கூட மாட்டோம் இல்ல . அப்படி நினச்சு அவங்க பின்னாடி போன என்ன ஆகும் தான் அந்த படம் .

அந்த படம் பாத்து முடுச்சுட்டு , நம்ம லைப்-ல அப்படி யாராவது இருக்கான்னு யோசிக்கும் போது சட்டனு ஞாபகம் வந்தவர் தான் ரவி அண்ணா . அவர பத்தின பதிவு தான் இது .

டெல்லில karol bagh அப்படினு ஒரு இடம் இருக்கு .அங்க நம்ம ஊரு ஹோட்டல் நெறைய இருக்கும்.அப்படி போகும் போது அங்க ஒரு ஹோட்டல் ல சர்வர் வேலை செய்யரவரு தான் ரவி அண்ணா. அடிக்கடி அங்க போய் அவர் கூட நல்ல ஒரு பழக்கம் .

பேச்சு எங்கயோ ஆரம்பிம்போம் ஆனா அது முடியற இடம் அவரோட இந்த வசனம் , “ இங்க இருந்து என்ன கிழிக்க போற ஒழுங்கா ஊரு பக்கம் போய் சேரு “ ன்னு தான் .நான் பெருசா எடுக்கவே மாட்டன் .ஒரு நாள் அவர் குடிபோதையில் தள்ளாடிக்கிட்டு ரோடு ல போறத பாத்தன் , கண்டுக்காம போய்டன் . அந்த குற்ற உணர்ச்சியில அங்க போகல .அப்புறம் ஒரு நாள் ஹோட்டல் போனேன் , சாரி கேட்டன்.

அவரு பதில் எதுமே சொல்லல .அவர் லைப் பத்தி கேக்கணும்னு ரொம்ப நாள் ஆசை . அன்னைக்கு கேட்டன் .ஒரு பெரிய போராட்டுத்துக்கு அப்புறம் சொன்னாரு . அவரே அவர் கதை சொல்ற மாதிரி எழுதி இருக்கன் .அப்புறம் நானே திரும்பி வரன் ,

என் பேரு ரவி , சொந்த ஊரு துறையூர் .அம்மா இல்ல அப்பா மட்டும் தான். எப்போ பாத்தாலும் அடிச்சுகிட்டே இருப்பாரு. அவர் மேல பயம் இருந்தது இல்ல , ஆன ஒரு மரியாத எப்போயுமே இருக்கும் . daily night மறக்காம beef chilly வாங்கிட்டு வந்துருவாங்க . 12 result வந்தபோ fail ஆனன். எங்க அப்பா அடிப்பாரோன்னு பயந்து டெல்லிக்கு train ஏறி வந்து சேர்நதேன்.எங்க அப்பா என்ன நெறைய இடங்கள தேடி இருந்தாருன்னு அப்புறம் தான் தெரிஞ்சுச்சு. 3 மாசம் கழிச்சு வீட்டுக்கு போனேன் .ஊரே எங்க வீட்ல தான் இருந்துச்சு. எல்லாருமே என்ன திட்டுனாங்க அப்பா ஒரு வார்த்தை கூட பேசல. அன்னைக்கு night மறக்காம beef chilly வாங்கிட்டு வந்து இருந்தாரு .

அடுத்த நாள் காலைல அப்பா கிட்ட சொல்றன்.நான் ஹோட்டல் ல வேலை செய்யறன் அங்கேயே இருந்து பணம் உங்களுக்கு அனுப்பி  வைக்கரன்னு. அவரு வேணாம் தம்பி அந்த பாதையில போகாத திரும்பி வர முடியாதுன்னு சொன்னாரு அத மீறி தான் வந்தன்.அப்புறம் ஊருக்கு போகும் போது அவர்க்கு ஒரு மொபைல் வாங்கிட்டு போனன் .எப்படி போன் போடணும்னு சொல்லிக் கொடுத்தன். அன்னைக்கு இருந்து சரியா காலையில 1௦ மணிக்கு நைட் 1௦ மணிக்கு போன் வந்தரும் .

தம்பி சாப்டியா , என்ன பண்ற இந்த ரெண்டே கேள்வி தான் கேப்பாரு .நான் திரும்பி ஏதும் கேக்க மாட்டன்.இங்க வந்து 6 மொழி சரளமா பேச, புரிஞ்சுக்க முடியும்.     இங்க இருந்து மலேசியாக்கு போக offer வந்துச்சு .வீட்டுக்கு போறன்.

அப்பா தம்பி கல்யாணம் பண்ணி வச்சுடரன் அப்புறம்எ ங்க வேணா போன்னு சொன்னாரு. இல்ல வேணாம்ன்னு சொல்லிட்டன்.அன்னைக்கு night beef chilly வீட்டுக்கு வந்துச்சு.நான் வீட்ல இருக்கும்போதே அப்பா call பண்ணாரு .ஏன்னு கேட்டப்போ இல்லன எனக்கு தூக்கம் வராதுன்னு சொன்னாரு .

அப்புறம் மலேசியா போய் ஒரு வாரத்துல போன் , அப்பா இறந்து போய்ட்டாருன்னு .எனக்கு என்ன சொல்றதுனு தெர்ல .வீட்டுக்கு போறன்னு எல்லாரும் அழுவுரங்க..எனக்கு மட்டும் கண்ணுல ஒரு சொட்டு தண்ணீ வரல. மொட்டை போட சொன்னங்க போட்டன் .கொள்ளி வைக்க சொன்னங்க வச்சன் .அன்னைக்கு நைட் சீக்கரமே தூங்கிட்டன். அடுத்த நாள் காலையில சொந்த காரங்க என் முன்னாடியே பேசிக்காறங்க ,

ரவி நாலா தான் அவங்க அப்பன் போய்டான், அவன் அழுவவே இல்ல பாத்தீங்களா அப்டி இப்டின்னு..எனக்கு என்ன சொல்றதுனு தெர்ல .அழுந்தா தான் பாசம் இருக்கும்னு அர்த்தமா ? அன்னைக்கு காலையில 1௦ மணிக்கு போன் வரல ..அப்போ தான் உள்ளுக்குள்ள என்னமோ பனுச்சு .அவரு போன் ah தேடி பாத்தன், அதுல இருந்தது எல்லாமே என் நம்பர் மட்டும் தான். என்னையும் அறியாம பீறிகிட்டு தண்ணீ வந்த்ருச்சு .

எனக்கு அவர் மேல எவ்ளோ பாசம் இருந்துச்சு தெரியுமா ? அப்படி வச்சுகனும் அவரன்னு நெறைய கனவு இருந்துச்சு ..தாஜ்மஹால் கூட்டிட்டு போய் காமிக்கணும் , நான் சமைச்சு போடணும் ..என் கல்யாணத்துக்கு அவர்க்கு sarwani டிரஸ் வாங்கி போடணும் , நான் எதையுமே பண்ல .அட்லீஸ்ட் இதலாம் உனக்கு பன்னப் போறன் அப்பா அப்டியாச்சு அவர்கிட்ட சொல்லிருக்கணும்.

டெய்லி கால் பண்ணுவாரு , ஒரு நாள் கூட நீ சாப்டியா ன்னு கேட்டதே இல்ல. அதையாச்சு கேட்ருகனும். நம்மள நினச்சு தான்  செத்துப் போய்ட்டாருன்னு  ஒரு குற்ற உணர்ச்சி வரும்ல  அது வாழ்ந்துட்டு இருக்கும் போதே சாவற மாதிரி .

நீ அன்னைக்கே என்ன பாத்த இல்ல அன்ணைக்கு எங்க அப்பா செத்த நாள் , அதான் குடிச்சன்.இந்த hair கு தான் சொல்றன் நீயாச்சு ஒழுங்கா ஊருக்குப் போன்னு .

கடைசியாக ஒரு கேள்வி கேட்டன் , நீங்க ஏன் கல்யாணம் பண்ணிகலன்னு . அண்ணா சொன்னாரு , எவன் எனக்கு பண்ணிவைப்பா ,

சொந்தகாரங்க எல்லாரும் இருகாங்க ஆன நான் அனாதைய இருக்கன், எங்க அப்பா இருந்து இருந்தா இப்படி விட்ருபாரா ? ன்னு சொல்லிட்டே அந்த போன் பாக்கறாரு கன்னத்துல ஓரமா தண்ணீர்.

சரி ஏன் கடைசியா ஒரு கேள்வின்னு சொன்னேன் தெர்யுமா ? அதான் அவர கடைசியா பாத்தது, அப்புறம் அவரு பஞ்சாப் போய்டரு.மொபைல் நம்பர் யார்கிட்டையும் கொடுக்க மாட்டாரு .

ரவி வந்ததுக்கு அப்புறம் தான் நான் எங்க அப்பாவ பத்தி நினைக்க ஆரம்பிச்சன். இப்போ கூட உனக்கு அப்பா பிடிக்குமா இல்ல அம்மாவான்னு கேட்டா சட்டனு அம்மா தான் சொல்லுவன், அதுக்காக அப்பா பிடிக்காதுன்னு அர்த்தம் இல்ல .அவருக்கு அது தேவை படாது.

நீ பேச ஆரம்பிக்கும் போது தான் மத்தவங்க கேக்க ஆரம்பிப்பாக, இல்லைனா அவங்க பேசறதா தான் நீ கேக்கணும் .என்ன மாதிரி நீ வராத முருகா ன்னு அவர் சொன்ன வார்த்தை தான் நான் இன்னும் எனக்குள்ள இருக்கு.

அன்பே சிவம் படத்துல ஒரு வசனம் வரும், “ நாம என்ன lovers ah அடிக்கடி I Love You ன்னு சொல்ல , இது feelings சார் தானா  புரிஞ்சிக்கன்னும்”.  இது அப்பா மகன் உறவுக்கு அப்படியே பொருந்தும்.

ஒவ்வொரு மகனுக்கும் அவங்க அப்பா ஹீரோ வா தெரிவாங்களான்னு எனக்கு தெரியாது , ஆனா ஒவ்வொரு அப்பாக்கும் அவங்க பையன் தான் சூப்பர் ஹீரோ .அவங்க கனவுகளின் நாயகன் அவன் தான்,

எல்லா அப்பாக்கும் ஒரு நிறைவேறாத ஆசை இருக்கும்.அந்த வலியோட பழகி அத மறச்சி அம்மா, குடும்பம், மனைவி, புள்ளைங்கன்னு எல்லார்க்கும் உழைச்சுக்கிடே இருக்கறாங்க. இன்னும் சில பேர் ரவி அண்ணா மாதிரி வாழ்க்கைய தொலைச்சுட்டு எங்கேயோ தேடி வெறும் நினைவுகளோட மட்டும் வாழ்ந்துட்டு இருக்காங்க.

பெண்கள் நாள தான் உலகம் அழகு ஆகுது,  ஆனா வலிகளை பழகி ஆசைகளை துறந்து. தன்னோட  குடும்பத்துக்கு மட்டும் உழைக்கும் ஆண்கள் நாள மட்டும் தான் இந்த உலகம் அர்த்தப்படுகிறது.

இப்படியும் சில மனிதர்கள்ல நாம சந்திக்கும் போது தான் , நாம எங்க இருக்கோம்னு தெரிஞ்சுக்க முடியும் .நம்ம கூட இருக்கவங்க மட்டும் இல்ல நமக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தர் கூட பேசி பழகும் போது தான் , நம்மள வேற விதமா மாத்திக்க முடியும்.  புத்தகங்களை படிப்பதை விட மனிதர்களை படிப்பது தான் ஆழமான அறிவை தரும்ன்னு எங்கயோ படிச்சது இப்போ ஞாபகம் வருது .உங்களுக்கு இப்படி எதாவது அனுபவம் இருந்தா comment பண்ணுங்க.


குறிப்பு : ரவி அண்ணா கண்டிப்பா நீங்க இத படிப்பீங்க, உங்களுக்கும் எனக்கும் இருக்க ஒரே தொடர்பு என் blog addrees உங்க கிட்ட இருக்கறது. இத படிச்சுட்டு ஒரு ஓரமா சிரிப்பீங்க , அதுக்கு தான் இந்த பதிவு போட்டன் . மிஸ் யூ அண்ணா .


                                       பக்கங்கள் புரட்டப்படும்!



1 Comments