ஏப்ரல் 1,2௦17,
மேகா
நாளைக்கு எங்க அம்மாவோட பிறந்தநாள் ,
போன வருஷம் இதே நாள்ல என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா .
அன்னைக்கு 12 மணிக்கு வாழ்த்துச்
சொல்லீட்டு இரவு ஒரு சின்ன பங்சன் ஏற்பாடு பண்ணி இருந்தோம் .அப்பாக்கு நைட் ஷிப்ட்
அதுனால காலையில 1௦ மணிக்கு தான் வர முடியும்ன்னு சொல்லிட்டார். என்னைக்கும் இல்லாம
சீக்கரம் முழிப்பு வந்த்ருச்சு.தம்பி இன்னும் தூங்கிட்டு தான் இருக்கான் . அம்மா
ரூம் போய்ப்பாக்கும் போது அங்க அம்மா இல்ல.வீடு முழுக்க தேடிப் பார்த்தப்போ
எங்கயுமே இல்ல .உடனே அம்மாவோட போன்க்கு கால் பண்றன் அது அவங்க ரூம்ல இருக்கு கூடவே
அவங்க போட்ருந்த எல்லா நகைகளும் அங்கேயே இருக்கு அது ஒரு விட பயத்த கொடுக்குது .எனக்கு
இருந்த அரைகுறை அறிவு என்னலாமோ யோசிக்க வைக்குது , அம்மாவோட ரூம் சுத்தி பாக்கும்
போது ஒரு வித நேர்த்தி தெரியுது . எல்லாமே அடுக்கி வச்சது மாதிரி , இயல்புக்கு
மாறா இருந்த நேர்த்தி இன்னும் பயத்த அதிகமாக்குது .அப்பாக்கு இன்னும் போன் பண்ணல ,
தம்பி இன்னும் தூங்கிட்டு தான் இருக்கான் .
அப்பா வர இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்
, தம்பி எழும்ப குறைஞ்சது 1 மணி நேரம் ஆகும் அதுக்குள்ள ஏதாவது பண்ணனும் .மனுசுல
ஒரே தப்பான எண்ணங்களா ஓடுது , இந்த சினிமா ,சமூகம் என்னுள எப்படி பட்ட நஞ்ச விதச்சுருக்கு,
என்னோட அம்மாவ அந்த மாதிரி நினைக்கும் போதே உடம்பெல்லாம் கூசுது ,அப்படி எதுவும் இருக்க
கூடாதுனு இன்னொரு மனசு சொல்லுது.எனக்காக மட்டும் இதுவர கடவுள் கிட்ட வேண்டி
இருக்கன் இப்போ நேரா சாமிக்கிட்ட போறன் அம்மா எங்கன்னு கேக்கறன் .அந்த சாமி என்ன நினச்ருக்குனு
தெரியும், ‘இப்போயும் உனக்காக தான வேண்டிக்கரனு ‘. ஆமா எனக்காக தான் அம்மா
வரணும்.
தெரு முனை வரை ஓடி போறன் , அதுக்கு மேல
எங்க போறதுன்னு தெர்ல மறுபடியும் வீட்டுக்கு வரன் .வீட்ல எல்லாமே வச்சுட்டு
போயிருக்காங்க.ATM , நகைங்க எல்லாமே வீட்ல இருக்கு ஒரு வேல ரொக்கமா கைல எடுதுட்டு
போயிருக்கலாம் .துணிங்க எடுதுட்டு போயிருக்காங்களா இல்லையான்னு தெர்ல , உண்மைய
சொல்லப்போன அம்மாக்கிட்ட எவ்ளோ சேலைங்க இருக்குனு தெரியாது .யாராவது கேட்டா
சிரிப்பாங்க. அம்மா வந்தவுடனே முதல இத கேக்கணும் ,அய்யோ அதுக்கு அம்மா வரணுமே .பயம்
, பதட்டம் தாண்டி இப்போ அழுகை வர ஆரம்பிச்சுருச்சு .
அவர்க்கிட்ட இப்போ சொன்ன என்ன ஆகும்
அவரும் அம்மாவ தப்பான நோக்கத்துல தான் விசாரிப்பாரா ? .அப்பா கூட வேலை செய்யறவங்க என்ன
நினைப்பாங்க , அம்மாவ தப்பா நினச்சுட்டா ? நாமளே தேடுவோம் முடிஞ்ச வரை .
போலீஸ்காரன் பொண்ணா யோசிக்க சொல்லுது மனசு .
அம்மா ரூம்க்கு மறுபடியும் போறன் ,சுத்திப்
பாக்கறன்.ஒரு ஓரமா அம்மாவோட தையல் மிசின் , இதுவர ஒரு நாள் கூட தொட்டுப் பாத்ததே
இல்ல. எந்த புது துணி வாங்குனாலும் இதுல ஒரு முறை நூல் நூத்து தான் போடுவாங்க .இது
மேல இனம் புரியாத காதல் , ஒரு வேள நான் சேர்த்து வச்ச காசுல முத முதலா வாங்குனது
கூட காரணமா இருக்கலாம்னு அம்மா எப்போயோ சொன்னதா ஞாபகம் .
தொட்டுப் பாக்கும்போது அடில அந்த
நூல்ப்பெட்டி ( BOX) , அதுல நெறைய கடிதங்கள் . அதுல ஒன்னு சரியாய் மடிக்காம பாதி திறந்து
இருக்கு.அது மட்டும் தான் புதுசா இருக்கு , மற்ற எல்லா கடிதங்களும் கொஞ்சம் மஞ்சள்
நிறத்துல வெளரிப் போய் இருக்கு . கைல அந்த கடிதம் எடுக்கறன்.
மேல இப்படி எழுதி இருக்கு , ‘ காணமல்
போனவளின் கதை ‘ , சத்தியமா எங்க அம்மாவோட கையெழுத்து இது . அப்பாவோட பொண்ணா எதையோ
கண்டுபிடிச்ச திருப்தி , ஆனா அது முழுசா முடியறதுக்குள்ள எங்க அம்மாவோட கடிதம்ன்னு
நினைக்கும்போது உலக இயக்கம் நின்னுப் போச்சு .மனசு எங்கயோ போகுது , சீ இது தப்புன்னு மாத்திக்க அதே
மனசு சொல்லுது .
அப்பாக்கு போன் பண்றன் , எப்போ
வருவீங்கன்னு கேக்கும்போது இன்னும் அரைமணிநேரத்துலன்னு சொல்லிடாரு .எங்க அம்மா
சொல்லி இருக்காங்க , யாராவது வெளில போய் இருந்தா அவங்க வீட்டுக்கு வர வரைக்கும்
அதிர்ச்சியா எதையும் சொல்லாத , வந்ததும் சொல்லு .ஒரு வேள வரும் போது அவங்களுக்கு பதட்டுத்துல எதாவது ஆச்சுனா ? . உடனே போன் வச்சுட்டன் .தம்பி
இன்னும் தூங்கிட்டு தான் இருக்கான் , அவன எழுப்புனா என்ன பண்ண முடியும் அவனால .அழுவான்
பயங்கரமா: இல்ல வேணாம் அவன் தூங்கட்டும் .
அத்துணையும் யோசிட்டு இருக்கும்
போதுதான் கவனிக்கறன், அந்த கடிதம் என்னோட கைல .உடம்பெல்லாம் வியர்துருச்சு கை
நடுக்கல் எடுக்க ஆரம்பிசுர்ச்சு .படிக்கலான்னு புத்தி மனசு ரெண்டுமே சொல்லுது .
இதோ அந்த கடிதம் ,
வணக்கம் ,
23 வயசுல எனக்குள்ள ஒரு தனிமை ஏற்பட்டுச்சு ,சுத்தி எல்லாரும் இருந்தும் தனியா இருக்க மாதிரி ஒரு உணர்வு .அதுக்கு காரணம் அப்போ தெர்ல .அந்த தனிமைய போக்க என்ன பண்றதுன்னு தெரியாம தான் உங்கள கல்யாணம் பண்ணிகிட்டன்.நீங்க எனக்கு அறிமுகம் ஆனா கதை இது தான் .மனசார சொல்றேன் , எனக்கு கிடைச்ச மாதிரி கணவரும் சரி குழந்தைகளும் சரி யாருக்கும் கிடைக்க மாட்டாங்க . குடும்பம் , படிப்பு , வேலை எல்லாமே எனக்கு நல்லாவே கிடைச்சுருக்கு.வீடு வேலை செய்யறதோ , வேலைக்கு போறதோ இல்ல அது முடிச்சுட்டு குழந்தைங்கள பாத்துக்கிறதோ எதுமே பிரச்னை இல்ல .ஆனா கொஞ்ச நாள மறுபடியும் ஒரு தனிமை எட்டிப் பாக்குது .எல்லா வேலையும் செய்ஞ்சு முடிச்சுட்டு இரவு தூங்கும்போது எனக்குள்ள ஏற்படற ஒரு வெறுமை , அதுக்கு காரணம் தெரியல அந்த நாள் வரைக்கும் .
உங்களுக்கு ஞாபகம் இருக்கா மூணு மாசம் முன்னாடி ஊட்டில ஒரு ஹோடெல்ல சாப்டும் போது ஒருத்தர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தன் . நீ எப்படி இருக்க , என்ன பண்ற , கல்யாணம் ஆச்சா , குழந்தைங்க என்ன பண்றாங்க இந்த நாலு கேள்விக்கு மேல அவன்கிட்ட என்னால பேச முடியல.அவனுக்கும் இதே காரணம் இருந்து இருக்கலாம் .உடனே காதல் கதைன்னு நினைச்சுராதீங்க.அவன் கிட்ட கல்லூரில அதிக பட்சம் மூணு நாள் பேசி இருப்பன் .என்னோட கிளாஸ்மேட் பிரண்டு. பஸ்ல ஒரு நாள் யாரோ என்ன ரேக் ( ragging) பண்ணாங்கன்னு சண்டை போட்டான் . அன்னைக்கு இரவு முழுக்க அவன்கிட்ட பேசிட்டு இருந்தன் .ஒரு காலத்துல இரவு முழுக்க பேசிக்கிட்டு இருந்த பையன்கிட்ட இப்போ நாலு வார்த்தைக்கு மேல பேச ஏதும் வரல ,காரணம் நீங்க.
நான் எது பேசுனாலும் உங்களையும் குழந்தைகளையும் மனசுல வச்சுக்கிட்டு தப்பா ஏதும் போகக் கூடாதுனுனு யோசிச்சு பேச வேண்டியதா இருக்கு .
ரெண்டு வாரம் முன்னாடி உடம்பு சரி இல்லன்னு வீட்டுக்கு சீக்கரம் வந்தன் தெர்யுமா . அன்னைக்கு என்னோட கம்பெனி பார்ட்டில பிரண்டு ஒருத்திய சந்திச்சன் .அவ வேற யாரும் இல்ல ஸ்கூல் படிக்கும் போது எனக்காக எப்போயுமே லீவ் லெட்டர் எழுதிக் கொடுத்த பொண்ணு , அவள பாக்கனும்னு நினச்சுட்டே இருப்பன் ஆனா அவ என்னோட ஆபீசெலே வேலை செய்யறானு அன்னைக்கு தான் தெரிஞ்சுச்சு .எவ்ளோ சோம்பேறியா இருக்கன்னு அப்போ தான் புரிஞ்சுச்சு .
என்னுடய உலகம் ரொம்ப சின்னது , இதுவர ஒரு சில ஆயிரம் பேர பாத்து இருக்கலாம் .ஆனா கண்ண மூடி யோசிக்கும் போது வெறும் நூறு பேரு முகம் மட்டும் தான் வந்து போகுது .மத்தவங்க முகம் எதுமே ஞாபகம் வரல .இவங்க மட்டும் தான் என்னோட வாழ்கையில ஏதோ ஒரு தாக்கத்தைக் கொடுத்ருக்காங்க . அந்த முகங்கள் என்ன ஏதோ பண்ணுது .
அவங்க எல்லாரயும் இப்போ பாக்கனும்னு தோணுது , அப்டி பாத்து என்ன பேசப் போறேன்னு கேக்கறீங்களா .பேச எதுமே இல்ல பாக்கணும் திரும்ப திரும்ப .அவங்க மட்டும் தான் நான் இந்த உலகத்துல வாழ்ந்ததுக்கு அத்தாச்சி .முடிஞ்சா இப்போ அவங்க இப்போ எப்படி இருக்காங்க , என்ன இன்னும் ஞாபகம் வச்சு இருக்காங்களா ,என்ன பத்தி அப்போ என்ன நினச்சங்கா இது எல்லாமே கேட்டு தெரிஞ்சுக்கணும்
நண்பர்கள் எல்லாருமே சுயநலவாதிகள் – சத்தியமான வார்த்தை .எனக்கு தேவைப்படும் வரை அவங்க கூட நான் தொடர்பில இருந்தன் இப்போ அவங்க எனக்கு தேவை படல அதுனால அவங்கள்லாம் மறந்துட்டாங்கன்னு பச்சையா பொய் சொல்ல வேண்டி இருக்கு .அருவருப்பா இருக்கு எனக்கு என் மேலேயே .என்னோட குடும்பம் ,வேலைன்னு சுருங்கிப் போச்சு என்னோட இந்த வாழ்க்கை . இதுக்கு காரணம் யாருமே இல்ல , நானும் என்னோட சுயநலம் , சோம்பேறித்தனம் .
இந்த நூறு பேரையும் பாக்க முடியலைன்னா கூட இந்த சில பேர கட்டாயம் நான் பாக்கணும்.என்ன பால்வாடிக்கு கைய புடுச்சு கூட்டிட்டு போன சிவகாமி ஆயா ,பாத்ரூம் போகும் போதெல்லாம் எனக்காக வெயிட் பண்ணி கூட்டிட்டு போன ப்ரீத்தி ,ஸ்கூல்க்கு வெளில எனக்கு மட்டும் ரெண்டு துண்டு எக்ஸ்ட்ரா மாங்கா தர கடைக்கார அக்கா , கிளாஸ்க்கு எப்போயுமே லேட்-ஆ வர ரமேஷ் ,டெய்லி ரெட்டை ஜடை போட்டு அதுல வித விதமா பூ வச்சுட்டு வர ஜாஸ்மின் ,கிளாஸ்-குள்ள வர வந்து விட்டுடு என்ன பாத்து கன்னத்த கிள்ளிட்டு போற ரேகாவோட அப்பா ,first மார்க் வாங்குற கணேஷ் – அவன் அப்போவே நல்ல புத்திசாலி இப்போ இன்னும் நல்லா வந்த்ருபான்,எனக்கு மட்டும் எக்ஸ்ட்ரா மார்க் போடற சயின்ஸ் டீச்சர், எனக்கு பிடிக்காத PT சார் ,கல்லூரில எனக்கு முத முதலா லவ் லெட்டர் கொடுத்த அந்த பையன் ,எனக்கும் சேர்த்து லஞ்ச் எடுதுட்டுவர மலர் ,சுஜாதா புக் வந்தா சத்தமே போடாம என்னோட பையில வச்ச லைப்ரரி அண்ணா , ரெண்டு பசங்க இருக்கா வீடா பாத்து கல்யாணம் பண்ணிப்போம்னு சொன்ன நளினி – பைத்தியக்காரி , நான் பார்த்து பிரமிச்சு போன என்னோட சீனியர் அண்ணா , என்னோட gang பொண்ணுக இவங்கள மட்டும் பாக்கணும் .அப்படி இவங்களையும் பாக்க முடியலைன்னா கூட ரவி-ய பாக்கணும்
அவனோட உண்மையான பேரு வேற , நான் கூப்ட வச்ச பேரு ரவி.ஆமா அவன் என்னோட பெஸ்ட் பிரண்டு .ஸ்கூல் முடிச்சு காலேஜ் படிக்கற வர . அவனுக்கு அப்புறம் அவனோட எடத்துல வேற யாரையும் வச்சு பாக்க முடியல . ஒரு நாள் சண்டை அதுக்கு அப்பறம்அவன் கூட பேசவே இல்ல .தப்பு எங்க ரெண்டு பேர் மேலயும் தான் நான் போய் மன்னிப்பு கேக்கணும் அவனுயும் மன்னிச்சு வுடனும் .யோசிச்சு பாக்கும் போது எங்க அப்பா இறந்த போது வீடு முழுக்க சொந்த காரங்க ஆனா எனக்கு தெரிஞ்ச நான் ஆறுதல் தேட கிடைச்ச ஒரே ஆள் அவன் தான் .அந்த ரெண்டு நாள் முழுக்க என் கூடவே இருந்தான் அவன் கூட ஏன் சண்ட போட்டனு இப்போ வருத்தமா இருக்கு . இப்போ அவங்க எல்லாரையும் பாக்க போறன் .
இதலாம் நீ சொல்லிட்டே போய் இருக்கலாம்னு சொலுவீங்க அதான , உண்மைய சொலுங்க இத சொன்ன நீங்க பகடி செய்வீங்க .நான் சொல்ற எல்லா விசயதுக்கும் முதல நீங்க தர விமர்சனம் பகடியான பதில். உங்களுக்கு வேணா சிரிப்பா இருக்கலாம் ஆனா ஒருத்தரோட உணர்வுகளா கொச்சைப்படுத்தும் போது எவ்ளோ அவமான இருக்கும்னு உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்ல .சரி விடுங்க கடைசியா என்ன சொல்லுவீங்க உணர்ச்சி வசப் பட்டு எடுத்த முடிவுன்னு ஆமா இப்போ எனக்கு இது சரியா படுது ,நாளைக்கே தப்பா படுச்சுச்னா திரும்ப வந்துருவன், தேட வேணாம்
மேகா உனக்கு இப்போ 23 வயசு ஆகுது , உனக்கு நான் சொல்ல விரும்பறது இந்த வரிகள் தான் , எங்க படிச்சனு ஞாபகம் இல்ல ஆனா இத மனசுல வச்சுக்கோ ,
வாழ்ந்துரு! - இந்த ஒரே வார்த்தைதான் நான் சொல்ல விரும்பறேன். உன் கோப்பை உனக்குத்தான். ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காத... பட்டாம்பூச்சி போல பற. மெழுகுவத்தி மாதிரி உருகு. ஒரு நதி மாதிரி காடு, மலை, நிலம்னு கரை புரண்டு நுங்கும் நுரையுமா ஓடு. எங்கேயும் யாருக்காவும் நிக்காத. நின்னா தேங்கிடுவ. உன் ரசனை, உன் விருப்பம், உன் முடிவு... எதையும் விட்டுராத. ஆடுறவரை ஆடு. சாவு சந்தோஷமா இருக்கணும். கடைசி நிமிஷம் தொண்டைக் குழி விக்குறப்போ, எதுக்காவது ஏங்குனா... உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமப் போயிடும். அர்த்தம் கொடுத்துரு, அதுக்காக... வாழ்ந்துரு!
சீக்கரம் வந்துடுவன்.
இப்படிக்கு ,
மீரா
----------------------------------------------------------------
படிச்சு முடிச்ச வாட்டி தாரை தாரையா கண்ணீர் .எங்க அம்மாவ நினைச்சு பெருமையா இருக்கு .எல்லாத்தையும் விட்டுட்டு போக ஒரு துணிச்சல் வேணும் ,அம்மா இப்போ திரும்ப வர வேணாம் அவளுக்கா எப்போ தோணுதோ அப்போ வரட்டும் .அப்பாவையும் தம்பியையும் நான் பாத்துக்கறன் .
நான் என்னோட லைப் நினைச்சு பாக்கறன், எங்க அம்மா மாதிரி இதுவர எதையுமே observe பண்ணது இல்ல /என்ன பொறுத்தவரை எல்லா stage-ளையும் புது பிரண்ட்ஸ் தேவை படுவாங்க .ஒரே நண்பர்கள லைப் ல எல்லா stage – ளையும் வச்சு பாக்க முடியல .இன்ஜினியரிங் படிக்கறது நாலாயையோ நான் பார்த்த வரை எல்லாருமே சந்தர்பவாதிகள் , பொறமை பிடிச்சவங்க .அவங்க தேவைனா மட்டும் use பண்ணிப் பாங்க.இல்ல இத இப்படியும் சொல்லலாம் எனக்கு தேவை படற மனுசங்கள மட்டும் நான் friend ஆக்கிகிரன், அப்போ யாரு இங்க சந்தர்பவாதி.அம்மா நீ , நான் எங்க இருக்கணு சொல்லி காமிச்சுர்க்க. நானும் உன்ன மாதிரி போய் மன்னிப்பு கேக்க போறன், எல்லாரயும் மன்னிச்சு விட போறன் .புது தெம்பு வந்த மாதிரி இருக்கு. கண்ணுல தண்ணீ இப்போ வத்திப் போச்சு .அம்மா இப்போ வர வேணாம்ன்னு கடவுள வேண்டிக்கரன் .
வாழ்க்கை ரொம்ப மோசமானது , நாம எதிர்பாக்கற விசயத்த எதிர் பாக்காத நேரதுல கொடுத்து விளையாடும் .அது மாதிரி தான் அப்போ , அப்பாவோட வண்டி வர சவுண்ட்.
வேக வேகமா லெட்டர் எடுதுட்டு போய் அதே தையல் மெசின் பெட்டிக்குள்ள போட்டுட்டு வெளில வரன் . அங்க அப்பா கூட அம்மா நிக்கறாங்க . பீறிக்கிட்டு தண்ணீர் வந்த்ருச்சு ,அப்பாக்கு ஒண்ணுமே புரியல .அம்மாவும் குழப்பமா பாக்கறாங்க , அம்மா கையில சின்னதா ஒரு கட்டு .
நான் பேச ஆரம்பிக்கப் போகும் போது அப்பா பேசறாரு , எங்கயோ கோவில் போகும் அடிப்பட்டு hospital ல சேர்த்தி இருக்காங்கமா வேற பயப்பட ஒன்னும் இல்ல. அவக்கிட போன் இல்ல அங்க இருக்கவங்க விசாரிச்சு எனக்கு கால் பண்ணாங்க .
அப்பா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே , அவங்க ரூம்க்கு அம்மா போய்ட்டாங்க .அப்பா திரும்ப அவரோட ஆபீஸ் புராணம் ஆரம்பிச்சுட்டார் , தம்பி அப்போதான் எழுந்து வரான் .அம்மா சேலை மாத்திட்டு சகசமா பேச தம்பிகிட்ட கொஞ்சிகிட்டு இருக்காங்க .
நான் இப்போ அம்மா ரூம் போறன் , எதிர் பார்த்த மாதிரி அங்க அந்த கடிதம் இல்ல. என்ன பொறுத்த வரை இதான் நடந்ருக்கும் ,
அம்மா எங்கயோ போக பாத்ருக்காங்க அப்போ அடிபட்டு hospital ல சேர்ந்து இருப்பாங்க,தகவல் கிடைச்சு அப்பா கூட்டிட்டு வந்த்ருக்காரு .அம்மா வந்த வுடனே அந்த கடிதம் எங்கயோ ஒளிச்சு வச்சுடாங்க .
அடுத்த நாள்ல இருந்து லைப் பழைய மாதிரி தான் போச்சு , எந்த மாற்றமும் இல்ல ஆனா அந்த தையல் மிசின் மட்டும் இடம் மாறிடுச்சு .அதுல இருந்த அந்த கடிதங்கள் எங்க போச்சுனே தெர்ல, இன்னும் தேடிகிட்டே இருக்கண் .
அம்மாக்கு இன்னும் தெரியாது நான் அந்த கடிதம் படிச்சு இருப்பன்னு. எனக்கே புரியாத சில வினோதங்கள் இன்னும் இருக்கு . என்னைக்கும் இல்லாம நான் ஏன் அன்னைக்கு சீக்கரம் எழும்பணும் , தம்பி ஏன் எழுந்தரிக்கவே இல்ல, அந்த தையல் மிசின்ல இருந்தா மற்ற கடிதங்கள் என்னவா இருந்த்ருக்கும். யாருமே வேணாம்னு வீட்ட விட்டு போனப்போ அம்மா என்ன நினச்ருப்பாங்க , அப்பாவ பாத்தவாட்டி என்ன நினச்ருப்பாங்க. இங்க ஆண் பெண் பத்தி புரிஞ்சுக்கறது ரொம்ப ஈசி ஆனா அவர்களோட உணர்வுகளா முழுசா புரிஞ்சுக்க முடியாது , யூகிக்கலாம் வேணுனா .
எங்க அம்மா வந்த்துனளா ஒரு மகளா சந்தோஷ பட்டேன் ஆனா சக பெண்ணா ஏமாற்றம் அது .ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ல முடியும் என்னோட மீரா மாதிரி இங்க நெறய பேர் இன்னும் வாழ்ந்துட்டு இருக்காங்க ஆனா நான் மீரா மாதிரி இருக்க மாட்டன், நான் மேகா !
இன்னையோட ஒரு வருடம் ஆச்சு , நாளைக்கு எங்க அம்மாவோட பிறந்த நாள் உங்கள மாதிரி நானும் ஆர்வமா இருக்கண் .அது மட்டும் இல்ல இன்னொரு முக்கியமான நாள் அதாங்க ஏப்ரல் 1 .
-----பக்கங்கள் புரட்டப்படும் --------

5 Comments
Nalla iruku na unmaiyana unnarvugall....
ReplyDeleteஅருமை ����
ReplyDeleteVery good one. Nice to read. It gave me an experience like watching a movie. Scenes went like how it naturally happens to us. Lines about friendship are somewhat true. But not everyone is like that. 'Expected things will happen at unexpected times', Magic words but applicable for most of the people at most of the times. Surely a nice creation. Expecting your next article in a short while. Keep turn your pages...
ReplyDeleteVera level Anna.
ReplyDeleteWow...that letter nd her wishes👌🤗
ReplyDelete