கண்டதும் காதல்


எல்லார்க்கும் வணக்கம் , நான்தாங்க இந்த கதையோட ஹீரோ . ஹேண்ட்ஸமா, உயரமா, அம்சமா, வெயிட் வாலட் பார்ட்டிலாம் இல்ல சாதாரண ஒரு  துறுதுறு பையன் , இருந்தாலும்  என்னோட எதிர்காலத்துக்கான பக்கா பிளான் வைச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு ரசிச்சு வாழுற ஸ்மார்ட் பையனு கூட சொல்லல்லாம் . மிடில் கிளாஸ் பாமிலி , அதிகம் பேசாத அப்பா : அவர்க்கும் சேர்த்து பேசிக்கிட்டே இருக்க அம்மா : நான் எது பண்ணாலும் அது தப்பு தான் னு சந்தேகப்படும் தங்கச்சினு அழகான குடும்பம் . நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சவாட்டி தான் தெரிஞ்சுச்சு, பணம் சம்பாதிக்க அப்பா பட்ட கஷ்டமும் , மாசக்கடைசில காசு இல்லாம திரிஞ்சப்போ தான், அம்மா கடுகு டப்பால சேர்த்து வச்ச பணத்தின் அருமையும் புரிஞ்சுச்சு. எப்பயும் போல சாதரணமா போய்க்கிட்டு இருந்த என் லைப் , காலைல Whats app ல அந்த message ah அந்த Number ல இருந்து வந்தத பாத்தவுடனே தலைசுத்ருச்சி,என்ன message அது ? ஒரு சின்ன பிளாஷ்பேக்.

பேச்சுப்போட்டில ஸ்கூல் படிக்கும்போதே கலந்துக்குவன், நெறைய போட்டிகள் நெறைய இடங்கள் போய் இருக்கன். trouser ல இருந்து pant ஷர்ட்க்கு மாறுன காலம் அது. 

காதல் -செடியல பூக்கற மாதிரி ஒரு டைம் கீழ விழுந்த திரும்பி ஓட்ட வைக்க முடியாது , பார்க்காமலே காதல், காதலியின் எச்சில் பண்டங்கள் முதற்க் கொண்டு சேர்த்து வைக்கும் காதல்னு வரிசையா படங்களா பார்த்ததுநாளையோ, இல்ல அரும்பு மீசை வளர ஆரம்பிச்சதுநாளையோ அதன் மீது ஒரு ஆர்வக்கோளாறு.

அப்படி ஒரு நாள் போட்டிக்காக இன்னொருஇடதுக்கு போனன். அங்க, “க்ளுக்” னு ஒரு சிரிப்பு எங்கையோ கேட்டு திரும்பி பார்த்தன்.

அங்க ஒரு பொண்ணு மாங்காய்த் துண்டை ரசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் .ஒவ்வொரு முறை,  அவள் அந்த புளிப்பு சுவையை உணரும் போதும் அந்த சிரிப்பு சத்தம் கேட்டது .எனக்கு இன்னமும் தெரியல அந்த அசட்டு விளையாட்டு ஏன் அப்போ பிடிச்சதுன்னு. 

Accident ah என்ன பார்த்துடா , வெக்கம் அவளைப் பிடித்து தின்றது .அவள் தோழிய கூட்டிட்டு ஸ்கூல்குள்ள ஓடி போய்டா.அந்த இரட்டைச் சடை, பச்சைக் கலர் ரிப்பன் அதுல மல்லிகைப் பூ ஏதோ பண்ணியது என்ன. 

மதியானம் சாப்பிட போகும் போது என் பக்கதுல அவ , எதுக்கோ sorry கேட்டா அந்த குரல்,  திரும்பி திரும்பிப் பார்த்த பொண்ண விரும்பி பார்க்க செய்தது. 

அவளும் என்னைப் போல நடனப் போட்டிக்கு வந்து இருந்தா.ரெண்டுப் பேர்க்கும் வேற வேற இடத்துல போட்டி, வழக்கம்போல பேச்சுப்போட்டில எனக்கு prize கிடைக்கல.ஆனா அவல பாக்க பரிசளிப்பு விழாக்கு போனன்,அவளுக்கு second prize  என்னோட கைதட்டல் கொஞ்சம் பலமா இருந்துச்சு .யாராவது பேச வாங்கனு கேட்டாங்க , இத விட்டா வேற சான்ஸ் இல்லன்னு நினைச்சு போய்டன். எப்போவோ எழுதுன ஒரு கவிதையை சொன்னன்,எனக்கும் கைதட்டல் இப்போ . கிளம்பும் போது அவக் குரல் நேரா வந்து கைக் கொடுத்து கவிதை நல்லா இருந்துச்சுனு சொன்னா ,லைப் ல முத முறையா ஒரு அந்நிய பெண்ணின் ஸ்பரிசம் , எப்படி அத விவரிக்க.

அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு  , பொருட்காட்சியில் இந்த முறை நான் மாங்காய் சுவைத்துக் கொண்டு இருந்தேன் .அவள் பார்த்தாள், சிரித்தாள் அதை நான் ரசித்தேன் .அப்புறம் காலேஜ் வந்துட்டேன் .என்னோட காலேஜ் friends  லவ் பத்தி பேசுனாலும் சரி , லவ் movies பத்தி பேசுனாலும் சரி எனக்கு ஞாபகம் வரது அவ முகம் தான். எதாவது ஒரு புக் ah திறக்கும் போதும் சில சமயம் என்னோட மடிக்கணினி திரைல கூட அவ முகம் .

அப்படி ஒரு நாள் நண்பனுக்காக அவனின் நண்பனைப் பார்க்க ஒரு மருத்துவக் கல்லூரிக்கு போயிருந்தேன் .அங்க மறுபடியும் அவ , பிங்க் கலர் சுடில  .சரியா சொல்லனும்ன ஐந்தரை அடி உயரம் கவிதையா சொல்லனும்னா பதினொரு முழ மல்லிகைப்பூ .இதுவரை எந்த பொண்ணுக கூடையும் சரியா பேச தெரியாத நான் , அவக கிட்ட போய் பேசுனன். சத்தியமா தெர்ல அந்த வீரம் எங்க இருந்து வந்ததுன்னு .அவளுக்கு என்ன ஞாபகம் இருக்குமோனு தயக்கம் இருந்துச்சு , ஆனா அவளுக்கு என்ன நல்லாவே ஞாபகம் இருந்துச்சு.

போன் நம்பர் வாங்கிட்டு ரூம்க்கு வந்தன்.தயங்கியப்படி , அவளுக்கு ஒரு message ,”ஹாய் ,How are you ? “ சட்டென்று பதில் . லவ் பண்ற பசங்களாம் வெறும் போன் ah பாத்து ஏன் சிரிக்கறாங்கனு அப்போ தான் புருஞ்சுச்சு. அவளுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சன் .விடியற வரை message பண்ணோம். என்ன பேசுனன், என்ன கேட்டன் எல்லாமே என்னோட Nokia  1600  model ku மட்டுமே தெரியும் .அப்போலாம் unlimited messages , குறைந்தது 500 message பன்னிருப்போம்.என்னோட வீட்ல ரசத்துக்கு ஊறுகாய் தொட்டுக்கக மறந்துட்டேன் முதற்கொண்டு நானும் , அவளின் உடல்நிலை குறித்த இயலாமையை கூட பகிரும் அளவுக்கு அவளும் ஒரு விதமான புரிதல் தொடங்கியது.

எதச்சாயா, நீ இன்னும் கவிதை எழுதறயானு கேட்டா . என்ன விட்டு தொலைந்து போன அந்த கவிதைகளை மீண்டும் கொண்டு வந்தேன். அவளுக்காக கவிதை எழுதினேன்.நான் படித்த , ரசித்த கவிதைகள் எல்லாம் காதல் கவிதை ஆனது,சில சமயங்களில் எது எழுதின கவிதை ,எது படித்த கவிதை என குழம்பும் அளவுக்கு அவளுக்கு அனுப்பினேன் .சில கவிதை இன்னும் நினவிருக்கு ,

எதற்க்காக எழுதினேன் இன்றுவரை
தெரியவில்லை – உனக்கான எனது முதல் கவிதையை !

கவிதை எழுதுவதற்கு ஆயிரம் தேவதைகள்
தேவையில்லை – ஆசையும் மீசையும்
முளைக்கும் பருவத்தில் சின்னதாய் இரவில்
மின்னலாய் இதயஅன்னலில் பேசிய
காதலின் அந்த ஒற்றை நாள் ஞாபகம் போதும்
ஆயிரம் கவிதை எழுத!

உன் ஒவ்வொரு காத்திருப்பிலும் நான் கவிதையாகவே
இருந்தேன்.
மறக்க முடியாத அந்த நாட்களை
இரவுகள் சண்டை போட்டு தின்கிறது.
வெறுமையில் பிதாமகன்
விக்ரமாய் நான் மட்டும் மௌனத்துக்குள்
மரணமாகிக் கொண்டு ...

எதுவும் எதிர்பார்த்து நடப்பதில்லை
எதேர்ச்சையாக தான் நடக்கிறது,
உன் ஓரப் பார்வையைப போன்றே..

என்னுடைய அத்துணை கவிதைகளுக்கும் அவளிடம் ஒரு smiley மட்டுமே பதில் :)  , எல்லாரும் IV போறாங்க நான் போகட்டுமா , சினிமாக்கு போலாமா , உடம்புக்கு சரி இல்ல என ஒரு அந்நிய பெண் தங்களிடம் பெற்றோர்களிடம் கேக்க வேண்டிய அத்துணையும் என்னிடம் கேக்கும் போது அதை வெறும் நட்பாக பார்க்கும் பெருந்தன்மை இல்லாமல் போயிற்றுரு எனக்கு.

ரெண்டு பேரும் ஹோட்டல் போனோம் , என்னோட பிறந்தநாள் treat .அங்க இருந்த பசங்க கமெண்ட்ஸ் பண்ணாங்க ,” இந்த பையன் ரொம்ப கொடுத்து வச்சவன் டா னு “ , அவளின் கை இறுக பிடித்தது என்னை. “நான் உன்னை நீங்க மாட்டேன்  ..நீங்கினால் வாழ மாட்டேன் “ இளையராஜா ஒரு ஓரமாய் எனக்குள்  வந்து போனார் .அன்னைக்கு நைட் அவக்கிட இருந்து ஒரு message.

​பிற பெண்களிடம் காட்டும்
உன் புன்னகையும் கண்ணியமும் பயம் தருகிறது
என் போல் இன்னொருத்தி மயங்கிவிடுவாளோவென..!

முட்டாளான எனக்கு அந்த அர்த்தம் லேட் ah தான் புரிஞ்சுச்சு.அவளுக்கு எப்போ என் மேல லவ் வந்துச்சுன்னு நான் கேக்கவே இல்ல .ஆன அவல பாத்த அந்த second யே எனக்கு அவ மேல காதல் .

என்னோட வீட்டுக்கு அவள அறிமுகம் செய்ஞ்சன்.என் வீட்டுல இதுவர நான் பேசிய ஒரே பெயர் அவள் மட்டுமே.அவள் வீட்டுக்கும் நான் அடிக்கடி விஜயம் செய்ஞ்சன்.

'இரவின் பரணையில் புணரும் கனவுகள்',  எங்கள் இருவர்க்கும்.  பேசினோம், காதல் செய்ஞ்சோம், வாழ்க்கையை பற்றிய பயங்களும் அவள் மீதான காதலும் நாளுக்கு நாள் அதிகம் ஆச்சு. 

சில சமயம் லைப் லயும் skip option இருந்து இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.அந்த நாள் வாழ்க்கையில வராம  போயிருந்தா?

ஆமா, அவளோட அண்ணன் ஒரு பொண்ணு ah காதலிச்சு வீட்டை விட்டு ஓடி போய்ட்டாங்க . அவள் வீடு நரகம் ஆகிருந்தது.யார்க்கு என்ன ஆறுதல் சொல்ல .என்னோட அப்பா அம்மா , தங்கச்சி தான் ஞாபகம் வந்தாக.நான் அவ அண்ணன் மாதிரி கண்டிப்பா பண்ண மாட்டேன் இருந்தாலும் அவ வீட்ல் இன்னொரு லவ் னு சொன்னா என்ன நினைப்பாக ? புள்ளங்கள ஒழுங்கா வளரக்கலயோனு , கல்யாணம் ஊருக்காகக் பண்ணல நமக்காக பண்றோம், இது எல்லாமே என் மனசுல வந்தாலும் குற்ற உணர்ச்சி என்னை கொன்னுச்சி.

அவக் கிட்ட ஒரு message , நேர்ல பாக்கணும் னு .போனேன் நான் என்ன நினச்சனோ அதேயே அவளும் சொன்னா .அவங்க அப்பா அம்மா வ பாக்க கஷ்டமா இருக்குனு சொன்னா.. எவ்ளோ தைரியியமா  இருந்தாலும் கண்ணீர் வழிந்தது .அவள அடுக்கு மேல கஷ்டப் படுத்த விரும்பல . ஒரே ஒரு பதில் தான் சொன்னேன். 

'இனி இந்த மாதிரி ஒரு காதல் யாரிடமும் வர வாய்ப்பில்லை இனி உன்கிட்டையும்'

அந்த கடைசி சந்திப்பிற்கு பின்
என்னை நானே வீடு வரை கூட்டிவந்த வலி
காலம் முழுக்க உனக்கு புரியாமலே போகட்டும்.

காலம் உருண்டு போச்சு .அவளுக்கு அந்த நாள்க்கு அப்புறம் பார்க்கவும் இல்ல , பேசவும் இல்ல,அவளை விட்டு வெகு தூரம் தொலைந்து போயிருந்தேன் .

இதோ அந்த message , அவளின் கல்யாண அழைப்பிதழ். என்னை இழந்ததற்காக நீ வருந்தும் அளவுக்கான வாழ்க்கையை வாழ வேண்டுமென்பது லட்சியம், அதை விட சிறப்பான வாழ்வு உனக்கு வாய்க்கவேண்டுமென்கிறது காதல்.

ரெண்டு வரிகள் என்னை அடிக்கடி தொந்தரவு செய்யும் ,ஒன்று  ,விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் வசனம் ,” காதல் செய்யக்கூடாது; நிகழ வேண்டும்” .இன்னொன்று கவிஞர் தாமரையின் வரிகள் , 'அவள் எங்கே விட்டு சென்றாலோ அங்கே தொடங்கி உன்னை காதல் செய்வேனே'

phone ah ஒரு ஓரமா வச்சுட்டு , newspaper பார்த்தன் .அதுல ஒரு ஓரமா குட்டி செய்தி .நலன் குமாரசாமி மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் படம் , தலைப்பு 'காதலும் கடந்து போகும்'.

என்னத்த சொல்ல ................

                                -----------------------முற்றும்------------

 .

1 Comments

  1. end card la oru pin kuripu potu mudichiteenga :P sari sollunga athu unga love than ah

    ReplyDelete