எப்பவும் எனக்கு இதோ இந்த தருணம் தான் பிடிக்கும் . "லிவ் தி மொமெம்ன்ட்"னு ஆங்கிலத்தில் சொல்லுவாங்க.காலையில new year wish பண்ணும்போது அம்மா சொன்னாங்க ,கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி போன வருஷம் உனக்கு நடந்த எல்லா விசயத்தையும் கொண்டு வா.அப்பறம் கோவிலுக்குப் போய் புது வருஷத்துக்கு வேண்டிக்கலாம் .அம்மா வார்த்தைக்கு மறுப்பு ஏது ? திரும்பிப் பார்கிறேன் என்னுடைய இந்த ஆண்டை
நினைவுகள் மிகவும் விசித்ரமானவை
அன்று அழுதுததை நினைத்து இன்று சிரிக்க வைக்கும்
அன்று சிரித்ததை நினைத்து இன்று அழ வைக்கும் .
என் நினைவுகள் எனக்கும் மட்டும் தான் feelings தரும் .உங்களுக்குப் பிடித்துப் போகலாம் பிடிக்காமலும் போகலாம் ஒரு வேளைச் சலிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கு .ஏன் மனச விட்டு நீங்காத பதிவாகவும் இருக்கலாம் அப்படி நினைத்து தான் இத எழுத போறன்.
ஜனவரி-என்னுடைய கல்லூரி வாழ்கைக்கு அர்த்தம் கிடைச்ச நாள் .போன வருஷம் full ah எந்த companiyulum place agama யார்கிட்டையும் மனச விட்டு சொல்ல முடியாத தவித்த நாட்களுக்கு விடுதலை கிடைத்த நாள் (Jan 13, 2015). சக நண்பரின் place ஆன செய்தியைக் கேட்டுக் கூட மனதார சந்தோசப் படாத நிலை ,place ஆகாத மக்களுக்கு மட்டுமே அந்த வருத்தம் புரியும் . core company ல place aitanu தெரிஞ்சவுடனே என சுத்தி நிறைய விவாதங்கள் , " அவனுக்கு luck da அதான் core la place aitan; 7 pointer எப்படி da core ல place ananu " என்னுடைய பதில் வெறும் சிரிப்பு மட்டுமே ..
கடின உழைப்பால் கிடைத்த அனைத்தையும் அதிர்ஷ்சத்தால் கிடைத்தது எனும் போது வெறுப்பு வருகிறது; யார் மீதும் அல்ல - அதிர்ஷ்டம் மீது
மார்ச் -project எப்படி பண்ணும்னு தெரியாம கஷ்டப்பட்டு அவமானப்பட்டு அசிங்கப்பட்டு கல்லூரி வாழ்க்கைய கடத்திய நாட்கள் .Thesis submission பேர்ல கலர் xerox எடுத்து எங்களுடைய 5000Rs ah 8 copies எடுத்தோம் .இப்போ அந்த thesis-லாம் ஒரு cupboard ல இருக்கும் .சிரிப்பா வருது நினைக்கறப்போ ..
ஏப்ரல்-சில விஷயங்கள் இப்படி நடந்துருந்தா நல்லா இருக்கும்னு தோணும்ல அப்படி பட்ட மாதம் எனக்கு .என்னுடைய வேலைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கமா அவமானப் பட்ட முன்பாதி . அப்பறம் காலேஜ் vacate பண்ணும்னு சொல்லிட்டாக..எப்போவுமே IRCTC ல return ticket சேர்த்து book பண்ணி தான் பழக்கம்.ஆனா இந்த முறை அப்படி பண்ணமுடியாதேனு நினச்சப்பயே கண்ணுல தண்ணீர் வந்த்ருச்சு .ஒரு சதாரண கிராமத்தான் நான் , என் கல்லூரி என்னுடைய தலையெழுத்தை மாற்றியதுன்னுசொல்றத விட என் தலைமுறையை மாற்றியதுன்னு தான் சொல்லுவன்.
மே-கல்லூரியின் நினைவுகளில் வாழ்ந்த நாட்கள் , என் வாழ்க்கை எப்படி இருக்குமோனு உள்ளே போனேன் .ஆனா , எதையுமே எதிர்கொள்ளும் திறனை என் கல்லூரி எனக்குக் கொடுத்தது . என்னுடைய நண்பர்கள் படுபயங்கர திறமைசாலிகள், என்னுடைய நிதர்சனமான ஆசான்களான அவர்கள் இல்லையனில் நான் என்னவாகிருப்பேன் ???
என்னுடைய கடுமையான நாட்களை எதிர்கொள்ள மூட்டை மூட்டையாய் சீனியர் ஜூனியர் நட்பு கைகொடுத்தது .படிப்பை தவிர நெறய வழிகள் இருந்ததாலோ என்னவோ என் திறமையை நிரூபிக்க வேறு திசைகளில் நன் செல்ல வேண்டி இருந்தது .அப்பறம் கம்பனி ல இருந்து call letter , எனக்கு உடை வாங்க சேலம் போன அந்த நாட்கள் .என் பையன் "white collar job"போகணும் கனவோடு இருந்த என் பெற்றோரின் விருப்பம் நிறைவேறிய நாட்கள்.
ஜூன் -தலைநகர் டெல்லியை நோக்கி என் முதல் பயணம் ,தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்-இல், துணைக்கு யாருமே வேணாம் என்று வந்தேன் .அந்த 33 மணி நேர பயணம் முழுவதும் என் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளில் மட்டுமே இருந்தது . அன்று இரவு ஜான்சி ரயில் நிலையம் அருகில் என்னுடைய பணம் சுமார் 10000 ருபாய் காணாம போச்சு .என்னுடனும் சேர்த்து இன்னும் சில பேர் அந்த ரயில் போலீஸ் சொன்ன பதில் அத விட அதிர்ச்சியா இருந்துச்சு . இன்னொரு purse இல் இருந்த 1௦௦௦ சொச்சம் வைத்துக் கொண்டு தலைநகரில் கால் வைச்ச அந்த நொடி மறக்க முடியுமா ? பத்திரமா போய்டியானு வீட்ல கேட்டப்போ என்ன சொல்ல ... அணைக்கு சொன்ன பொய் ah இதுவர வீட்டுக்கும் யாருக்குமே தெரியமா மறச்சுட்டுவரன் .டெல்லியை சேர்ந்த சில பேர்க்கு மட்டுமே இது தெரியும்.
ஜூலை -முதல் வருமானம் -எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரக்கூடிய கர்வம் அது எனக்கும் வந்ததில் ஆச்சரியம் இல்லை . அந்த மாசதுலதான் என் பொறந்த நாள் வந்துச்சு .School படிக்கும் போது எதற்சையா வீம்புக்கு , " என் birthday apo தாஜ்மஹால் போய் பாப்பேன் னு சொன்னது நடந்துச்சு அதுவும் என்னோட நான் சம்பாதிச்ச காசுல ..இத வித பெரிய gift வேற என்ன இருக்க போகுது .
ஆகஸ்ட் ,செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் சொல்ற அளவுக்கு பெரிய சம்பவங்கள் நினைவில் இல்லைனாலும் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது . இனம் ,மொழி ,கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என அனைத்துலுமே வேறுப்பட்ட நபர்கள்- நண்பர்கள் ஆனார்கள்.உங்கள யாருனே தெரியாத ஒரு இடத்துக்கு போங்க அங்க நீங்க உங்கள மாத்திக நினைக்கற பழக்கத்தை தொடங்குக எந்த ஒரு தடையும் இல்லாம சுதந்திரமா செயல் படலாம்.
நவம்பர் -ஊருக்கு போறன் திரும்பி தீபாவளிக்கு , நிறைய கனவுகள், பை நெறய ஆடை இனிப்புகளோட .அம்மாவ பார்த்த அந்த கணம் முத முறையா வார்த்தை வரல வெறும் காத்து தான் வந்துச்சு .அடுத்த நாள் காலையில உரிமையா என் purse ல இருந்து பணம் எதுத்துக்கிட்டு போனாக ..வீட்ல நான் இருக்கறதே தெரியாம இருந்த உறவினர்கள் லாம் போன் பண்ணி நலம் விசாரிச்சப்ப தான் BP வந்துச்சு . அப்றம் காலேஜ் கு போறன் Nov 16 , தாம்பரம் ல 21 G ஏறி உக்காந்தன், தாம்பரத்திற்கும் கல்லூரிக்கும் இடையேயான 1௦ நிறுத்தம்தான் என்னுடைய 4 வருட கல்லூரி வாழ்க்கையை fast forward செய்ய கிடைத்த அவகாசம் .Night பெய்ஞ்ச மழை இன்னும் தூறலா தூறிக்கிட்டு இருந்துச்சு , கல்லூரி ல யாரயுமே பாக்க முடியல சொல்ல போன அது ஒரு கவிதை .நான் எங்கயுமே யார்கிட்டையும் நின்னு பேசல .மௌனமாய் நான் நடந்து, ஓடிச் சென்ற சாலைகளிலும் ,என்னுடைய வகுப்பறையும் என்னுடைய விடுதி அறையையும் வெறிச்சுப் பாத்தன் .கல்லூரிய தினமும் தொட்டு செல்வது மாதிரி போகும் விமானத்த முத முறையா நிஜத்துல தொட்டன். Air India விமானம் , seat நம்பர் 2 6 E பத்திரமா இருக்கு அந்த ticket இன்னமும் , இனியும் இருக்கும் .
டிசம்பர்-கம்பெனியின் USER Conference ல ஒரு presentation பண்ணன் ,பாராட்டு எனக்கு புதுசு இல்ல ஆனா நீலாம் ஒரு English presentation பண்ண லாயுக்கு இல்லனு என்னோட project advisor Eight sem review apo certificate கும் கூட E grade மும் சேர்த்து கொடுத்தாரு .ஒருத்தர் நம்மளால இது முடியாதுனு சொல்லும்போது அத முடிச்சுக்காமிக்கறப்போ வர திமிரு அது .வருடத்தின் கடைசி நாள் உண்மையான new Year Partyvoda mudunchadu .
இதோ என்னுடய திரும்பிப் பார்த்த நாட்கள் .ரொம்ப Positive ah எழுதி இருக்கையே negative ah உன் life ல எதுமே நடக்கலாயனு கேக்காதீங்க .சொல்ல முடியாத அளவுக்கு கொடுரமான நாட்களும் இருக்கு - சில உதாரணங்கள் காசு இல்லாம டெல்லி road ல நடந்த நேரங்கள், மொழி தெரியாம பட்ட அவமானங்கள் எனப் பட்டியல் நீளும் ..நல்ல நினைவுகளைக் கொண்டு அடுத்த வருடம் செல்ல தயாராகி விட்டேன் அதான் சொல்ல விரும்பல எதையுமே ..
நீங்களும் உங்களுடைய கடந்த ஆண்டை நினைத்து பார்த்துக் புதிய ஆண்டை எதிர்கொள்ளுங்கள்! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
பக்கங்களைப் புரட்டுவோம்!
0 Comments