சில நாட்களுக்கு முன்னர் சதுரங்க வேட்டை படத்தை மறுபடியும் பார்க்க சமயம் வந்தது . மிக அருமையான எதார்தனமான படம் .அதில் வரும் ஒரு வசனம் என்னை வெகுவாகப் பாதித்தது . 'ஒரு பொய் சொன்ன அதுல கொஞ்சம் உண்மையும் கலந்துருக்கணும் அப்போ தான் அது பொய்யுனு தெரியாது.'
என்ன பொறுத்தவரை பொய்களால் வாழ்க்கை அழகாகிறதுனு தான் சொல்லுவன்.
சின்ன வயசுல போலியோ மருந்து போடும் போது " இது ரொம்ப இனிக்கும் டா .... தேன் மாதிரி இருக்கும்னு எங்க அம்மா சொன்ன பொய் இன்னும் ஞாபகம் இருக்கு. காலையல அம்மா கிட்ட சீக்கரம் எழுந்து breakfast saptanனு சொல்லும் போது என்னோட பொய் ஆரம்பிக்குது.
பெரும்பாலும் ஒரு ஆண் சராசரியா ஒரு நாளைக்கு 8 பொய் சொல்றான் , பெண் அவன போல இரண்டு மடங்கு பொய் சொல்றானு research சொல்லுது .
இது வர என் life ல நான் கேட்டு என்ன பாதிச்ச சில சம்பவங்கள
சொல்றன்.
1) ஒன்பதாவது படிக்கும் போது tuition போக ஆரம்பிச்சன். உமா அக்கா tuition எங்க ஏரியால ரொம்ப famous .அங்க 12th போற students அதிகமா படிப்பாங்க. அதுல கவிதா அக்காவும் ஒன்னு .அவங்க கூட tuition வர ஒரு அண்ணாவ sincere ah love பண்ணாங். tuition ல எல்லார்க்குமே இது தெரியும் அந்த அண்ணாவும் love பன்னாகனு கேள்வி பட்டோம் .விஷயம் வீட்டுக்குத் தெரிஞ்சு பெரிய சண்டையே வந்துச்சு.
அப்போ அந்த அண்ணா 'நான் உங்க பொண்ண love பன்னல. உங்க பொண்ணு life ல நான் வர மாட்டணு சொல்லிட்டு காலேஜ் படிக்க கோயம்புத்தூர் போய்ட்டாரு. அந்த அக்காக்குக் கல்யாணம் ஆயிருச்சுனு தெரிஞ்சவாட்டி திரும்பி வந்தாங்க. அவர்க்கிட கேக்கணும் னு தோனுச்சு, போய் கேட்டன்,
உண்மையிலே நீங்க அவங்கள love பன்னலாயனு, அவர் சிரிச்சுகிட்டே சொன்னாரு , அவள ரொம்ப love பன்றன் டா.
அதான் அன்னைக்கு பொய் சொன்னன்னு .
சத்தியமா புரியலனா னு சொன்னன். அவர் அப்ப, 'நான் படத்துல வராம மாதிரி ஹீரோ லாம் இல்லடா . அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் .நானும் love பண்றனு சொன்னா , அவ தங்கச்சிக்கு கல்யாணம் நடக்கறது கஷ்டம் , அப்பறம் எங்க வீட்ல ,அப்பாக்கு வேற சுகர் இருக்கு .இவங்கள கஷ்டபடுத்தி அப்புறம் அவள marriage பன்னாலும் நிம்மதியா ஒரு வருஷம் தான் இருக்க முடியும்.திரும்ப பிரச்சனை வரும்.இப்போ பாரு அவ ரொம்ப நிம்மதியா இருக்கா .யாருக்கும் எந்த கஷ்டமும் இல்ல even அவ கூட நான் love பண்ணலன்னு தான் நினைப்பா'.
பொய் மீதான ஒரு மரியாதையை அந்த அண்ணா எனக்கு காமிச்சார் .
2) என் நண்பரின் தாத்தா அவர் ,சில வருஷமா எந்த hospitalkum போகாம இருந்தாரு .எல்லாரும் கேட்டாங்க வயசு ஆச்சு அடிக்கடி உடம்ப காமிச்சுக வெண்டியதுதான அவரு என் உடம்புக்கு ஒன்னுமே இல்லனு ஒரு full போடு மெடிக்கல் ரிப்போர்ட் ah காமிச்சாரு , அவருக்கு பிடிச்சது பிடிக்காது னு எல்லாமே சாப்டாரு ,அடிக்கடி ட்ரெக்கிங் போய்ட்டு வந்தாரு .ஒரு நாள் காலையல இறந்துப் போய்ட்டாரு .அப்பறம் ஒரு நாள் எதாச்சயா அவர் room ah clean பண்ணும் போது தான் தெரிஞ்சுச்சு , ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் ம் கூட ஒரு லெட்டர் ம் இருந்துச்சு .ரிப்போர்ட் ல அவர்க்கு cancer னு இருந்துச்சு ( lungs cancer வயசு 68) .அந்த லெட்டர் ல ," எல்லாரும் என்ன மன்னிக்கணும் ,என் உடம்புக்கு எதுமே இல்ல னு பொய் solitan .நான் உங்க கிட்ட காமிச்ச அந்த ரிப்போர்ட் பொய் .எனக்கு இப்படி வியாதி இருக்குனு சொல்லி இருந்தா, Hospital, Tablet , Injections, Diet னு நான் கஷ்டபடறது மட்டும் இல்லாம , என்னால உங்களுக்கும் நிறைய கஷ்டம் , எப்போ எனக்கு என்ன ஆகும் னு நீங்களும் பயபடுவீங்க , என் கூட இருக்கனும்னு நினைச்சு உங்க life ல நெறய சங்கடங்கள் வரும், என்னால யார்க்கும் கஷ்டம் வேணாம் னு தான் இப்படி செஞ்சன்.
இந்த பொய் , எனக்கு புதியதோர் பார்வையை பொய் மீது கொடுத்தது .
3) என் அக்காவின் நண்பன்,பள்ளியின் கபடிக்குழு தலைவன் .எங்கயோ விளையாட போகும் போது கீழே விழுந்துவிட்டு வந்துட்டான் .வீட்ல சொன்ன எங்க அடி விழும் னு நினைச்சுகிட்டு யார்கிட்டயும் சொல்லல . எல்லாரும் கேட்டப்போ வலிக்கவே இல்லனு பொய் சொன்னான் .எல்லாரும் அத நம்பி free ah விட்டுட்டாங்க .மறுநாள் எழுந்திருக்க போது தான் தெரிஞ்சுச்சு அவனோட கால் paralysed ஆச்சுனு .அப்பறம் 20 இலட்சம் செலவு ஆச்சு .ஆனா அந்த பையன் அப்பவே வலிக்குது னு உண்மைய சொல்லிருந்தா ஒரு 1000 ரூபாயோட போயிருக்கும் .
பொய் சொல்றதுக்கும் , அடுத்தவங்கள ஏமாற்றத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்குனு இந்த சம்பவம் எனக்கு சொல்லிக்கொடுத்துச்சு .
பொய்க்கும் ஏமாற்றத்துக்கும் ஒரு சின்ன விளக்கம் , எங்கயோ எப்போதோ படிச்ச நகைச்சுவை ,
ஆண் : நான் உன்ன தவர வேற எந்த பொண்ணையும் sight அடிச்சது இல்ல - இது பொய்
பெண் : சத்தியமா உன்ன தான் டா , கல்யாணம் பன்னிப்பன் - இது ஏமாற்றுவது :P
அப்பா அம்மா இறந்த பிறகு , காலேஜ் படிக்கும் போது எல்லாரையும் நம்பி அவங்க சொன்னதுலாம் உண்மைனு நினைச்சு ,சொந்தகாரங்ககிட்ட எல்லா சொத்தையும் கொடுத்துட்டு வாழ்க்கையை தொலைச்ச என் அப்பாவை பாக்கும் போதும் பொய்யின் இன்னொரு முகம் எனக்கு தெரிந்தது ;
இந்த அவசர உலகில் பொய் அத்தியாவசியமானது என்பது எவருமே மறுக்க இயலாது ,அரிச்சந்தரின் கதையையே ஒரு பொய்யாக புனையப்பட்ட கதை என்று சொன்னால் கூட நம்பும் உலகம் இது .
ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒருவர் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாலமே- அவர் உங்கள் பேச்சை நம்புவது . முடிந்த அளவு அந்த நம்பிக்கையை வீணாக்கதீர் .தவிர்க்க முடியாத இடங்களில் பொய்களை உபயோகியுங்கள் .உங்களுடைய பொய்யினால் மனிதத்தை இழந்து தொலைத்து விடாதீர்கள் .
"உண்மையின் பக்கத்தில்
இருக்கிறேன் - ஆனாலும்
பொய் மீது சாய்ந்துக் கொள்கின்றேன் !!
பொய் பேசுங்கள் வாழ்க்கை அழகாகும் , ஆனால் யாரையும் ஏமாற்றதீர்கள் .
குறிப்பு : நான் மேற்கண்டு கூறிய மூன்று உண்மைக் கதைகளில் ஒன்று மட்டும் பொய் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை!!முடிந்தால் கண்டுபிடியுங்கள் .
பக்கங்களைப் புரட்டுவோம் !!

1 Comments
2nd story
ReplyDelete