ரயில் பயணங்கள் சில சமயம் நமக்கு மறக்க முடியாத பயணமாக மாறிவிடும் சில சகப் பிரயாணிகளால் ! அப்படி என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு. கோயம்புத்தூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரசில் அந்த நண்பரைச் சந்தித்தேன் பல நாள் பழகிய உணர்வு அவரிடம் சிநேகமானனேன் பிறகு அவர் என்னிடம் கூறிய ஒரு உண்மை சம்பவம் என்னை மிகவும் பாதித்தது .அவர் என்னிடம் கூறிய அந்த நிகழ்வை , அவர் உங்களிடம் பகிருவது போன்றதொரு நடையில் எழுத விளைகிறேன் .
நீ வந்த இந்த train la தான் அவளையும் patan,same coach anaiku வியாழக்கிழமை so கூட்டமே இல்ல நானும் அவளும் மட்டும் தான் ,வயசு ஒரு 24-26 இருக்கும் நல்ல color சும்மாவே mokka figure ah sight அடிக்கற எனக்கு அந்த மாதிரி ஒரு பொண்ணு வந்தா எப்படி இருக்கும் நல்லா sight அடிச்சன் . அவளும் என்ன பாத்தா ! நானே enna introduce panan, அவளும் அவள introduce panna அப்பறம் கொஞ்ச நேரம் அமைதியா வந்தோம்.
மறுபடி அவளே பேச ஆரம்பிச்சா என்ன பார்த்தா எப்படி தெரியுதுன்னு sudden ah கேட்டா ,கொஞ்ச நேரத்துல வியர்த்துருச்சு,ena da periya problem la மாட்டிகிட்டோமான்னு அப்புறம் அவளே சிரிச்சுகிட்டே நீங்க பயப்படற மாதிரி ஒன்னுமே நடக்கல அப்புறம் அவ பேசுனா , நான் software engineer lam இல்ல , ஒரு prostitute .
நான் அப்படியே shocked,ஒரு vela நம்மள test panragalo , psychometric test னு சொல்றாங்களே அது மாதிரி இவ vaikkaralo nu oru doubt then நான் கேட்டன் nizamatan solreegalanu .
அவ சொன்ன ,நான் iduvara yarkitaum உண்மை பேசுனது இல்ல ,உன்கிட்ட உண்மைய பேசனும் இருக்கு அதான் பேசறன்.
முன்ன விட இப்போ ரொம்ப பயம் ஆச்சு ,வேற coach poirlama nu vera yosichan வேற வழி இல்லாம முன்ன மாதிரி கொஞ்ச நேரம் அமைதியா வந்தோம் படத்துல காமிக்கர மாதிரி எந்த symptoms m ava kita ila ..சொல்ல போன ரொம்ப அழகா இருந்தா :)
life la இனி இந்த மாதிரி சான்ஸ் கிடைக்குமா னு தெர்ல so பேசி பாக்கலன்னு முடிவு பண்ணி இப்போ நன் பேச ஆரம்பிச்சன் ..
sudden ah படத்துல கேக்கற மாதிரி "எப்படி இந்த தொழில்க்கு வந்தீக ? பிடிச்சுருக்கா ? உங்களுக்கு agent lam இருக்காங்களா ?எப்படி உங்கள மாதிரி ஆளுகள தேடி பிடிக்கறதுன்னு ?வரிசையா எல்லா கேள்வியும் கேட்டுடன் அவ அப்போ சிரிச்சா பதில் எதும் சொல்லல .நான் அவள சந்தேகமா பார்த்தன் ,"இவ நிச்சயம் பொய் சொல்றனு ! அப்புறம் அவ பேசுனா, பொண்ணுக ரெண்டு விதமா இந்த தொழில்க்கு வராங்க ,ஒன்னு பணத்துக்கு ஆசைப்பட்டு ,இன்னொன்னு அவங்கள அவங்களுக்கே தெரியாம யாராவது மாட்டி விட்ருவாக , அப்பறம் என்ன மாதிரி ஆளுங்கள கண்டுபிடிக்கறது ரொம்ப easy. அதுக்கு உனக்கு அவசியம் இருக்கனும் !
இந்த காசுக்கு ஆசைப்பட்டு இந்த தொழில்க்கு வந்தவங்க யாருமே நிலைக்க மாட்டாக சீக்கரம் கிளம்பிடுவாக! '.எங்க கிளம்புவாகனு ?' அப்பாவியா கேட்டன் , அவ மறுபடி சிரிச்சுகிட்டு எங்கயாவது போய் தற்கொலை பன்னிப்பாங்கனு சொல்லிட்டு என் கண்ண பாத்த .
மறுபடி நானும் அவளும் tea சாப்டோம்,அப்பறம் உங்க life பத்தி சொல்லுங்கனு கேட்டன்,உனக்கு bore அடிக்குதா இல்ல உண்மையிலே என்ன பத்தித் தெரிஞ்சுக்க கேக்கராயனு கேட்டா , ரெண்டுமே தான் சும்மா சொல்லுங்கனு சொன்னன்.அந்த question ஏன்டா கேட்டோம்னு இப்போ வர feel பன்றன் .
"அம்மா ,அப்பா யாருமே எனக்கு இல்ல, ஆசிரமத்துல தான் schooling பண்ண அப்பறம் ஒரு காலேஜ்ல சேர்ந்தன் .ஸ்கூல் வர கிடைச்ச எதுமே அப்பறம் எனக்கு கிடைக்கல,பசி யார்கிட்டயும் கேக்க முடியல ஒரு மாதிரி இருக்கும்.purse ல ஒரே ஒரு 100ரூபாய் இருக்கும் செலவு பண்ணா அடுத்த வேளைக்கு இருக்காதேனு , செலவு பண்ண thonaadu,.இன்னைக்கு வரைக்கும் அந்த 100ரூபாய் வச்சுருக்கன். காசுக்காக ஒரே ஒரு ஒரு time தெரியாம தப்பு பண்ணிடன் .இணைக்கு வர அந்த தப்பு -ah தெரிஞ்சே பன்றன் .
இப்போ எங்க போறீகனு கேட்டன் ,என் பார்வைக்கு அர்த்தம் புரிஞ்சு சிரிச்சுகிட்டே சொன்ன நான் இப்போ படிச்ச schoolku போறன் கடைசியானு சொன்ன !!.இப்போ எனக்கு சந்தேகம் வந்த்ருச்சு கூடவே பயமும் , கடைசியாவானு கேட்டன் .ஆமா நான் காசுக்கு ஆசைப்பட்டு இந்த தொழில்க்கு வந்தன் , என் life போதும்னு முடிவு பண்ணிடன் அதான் நான் கொஞ்ச சேர்த்து வச்ச money ah schoolku கொடுக்க போறன்.
life ல suicide தான் ஒரே முடிவு இல்ல வாழ எவ்ளோ வழி இருக்கு வேற எதாவது ஊருக்குப் போய் வேற வேலைச் செய்யுங்கனு சொன்னன்.
நான் போகாத ஊரே இல்ல .இந்த life நானா தேடிகிட்டது so யார் advice - m கேக்க பிடிக்கலனு சொன்ன .அதுக்கு மேல அவகிட்ட ஏதும் பேசல.
கடைசியா ஸ்டேஷன் வந்தவாட்டி நீங்க சொன்னதுலாம் உண்மையா னு கேட்டன் .அவ அதுக்கு நான் school படிக்கும் போது ஒருத்தன் எனக்கு love propose பண்ணான் அப்போ அவன வேண்டாம்னு சொல்லிட்டன் .ஒரு vela அப்போ ok சொல்லிருந்தா என் life இப்படி மாறிப் போய் இருக்காது .சாகறதுக்குள அவன மறுபடி பாக்கணும்னு நினைச்சன் அது நடக்கல ஆனா நான் செய்ஞ்ச கொஞ்ச புண்ணியம் அவன மாதிரியே நீ இருக்க அதான் உன்கிட்ட இதலாம் சொல்றன்.
நீ life ல marriage பண்ணி நல்லா settle ஆன வாட்டி ஆசிரமம் போய் எதாவது ஒரு குழந்தையோட life ku மனசார உதவி பண்ணு .Birthday அப்போ ஸ்வீட்ஸ், பிரியாணி கொடுக்கறதுனாலையோ இல்ல ஒரு 500ரூபாய் பணம் கொடுக்கறதுனாலையோ எந்த ஒரு பயனும் இல்ல.
உலகத்துல எல்லா தப்புக்குமே காரணம் காசுதான் அதுலயும் இந்த மாதிரி தப்புக்கு அளவுக்கு அதிகமான காசும் ,கடுமையான பட்டினியும் தான் காரணம் .
சரி நான் கிளம்பறன் , இதுவர எந்த ஆம்பளைங்க கிட்டையும் இவ்வளோ நேரம் பேசனது இல்ல , பணத்த தவர வேற ஏதும் யார்கிட்டயும் கேட்டதும் இல்ல உன்கிட்ட மட்டும் தான் இத கேக்கறன் .இப்போ கூட நீ நம்பளனு தெரியுது ,ஆனா நான் உன்கிட்ட எந்த பொய்யும் சொல்லல அது மட்டும் nizamஅப்டின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருந்தா .
அதுக்கு அப்பறம் அவள பாக்கவே இல்ல ,அவள தேடவும் try பன்னல,ஆன அந்த பயணம் எனக்கு நெறைய சொல்லிக்கொடுத்துச்சு . விலைமாதுக்களனாவே அருவருப்பா பாத்த எனக்கு அவள மட்டும் அப்படி பாக்க தோனல .நாம பாக்கற பார்வை தான் நல்லது கெட்டதுனு முடிவு பண்ணும்னு அப்போ தெரிஞ்சுகிட்டன்.அவ உயிரோட இருக்கனும்னு ஆசைப்படறன். Prostitution பத்தி எந்த news வந்தாலும் எனக்கு அவ ஞாபகம் தான் எனக்கு வருது .
குறிப்பு : அந்த நண்பர் இப்போது mindtree என்ற மென்பொருள் நிறுவனத்தில் வேலைச் செய்கிறார் .வேறு எதையும் அவர்களைப் பற்றி கூற விருப்பம் இல்லை .
இது தான் அவர் என்னிடம் கூறிய கதை , அவர் கூறிய கதாப்பாத்திரத்திற்கு கற்பனை உருவம் வரைந்து உள்ளேன் . அவரைப் போல நானும் அந்த தமிழ் மகள் உயிரோடு இருக்க ஆசைப்படுகிறேன் . இந்த கதையை நம்புவதும் நம்பதாததும் உங்கள் விருப்பம், ஆனால் இப்படியும் சில மனிதர்கள் உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை .
பக்கங்களைப் புரட்டுவோம்!
0 Comments