முன்னுரை எழுதி விட்டு முதல் உரை எழுத போகும் போது மிகப் பெரிய குழப்பம் , எதை முதலில் எழுதுவது என்று ? எழுத எவ்வளோ தலைப்புகள் இருந்தாலும் முதல் பதிவு என் மீதான எதிர்ப்பார்ப்பை உறுதி செய்யும் அல்லவா ! அப்படி இருக்கையில் ஒரு ஆட்டோவாலா எனக்கு வழிவிட்டார் ! நான் இருப்பது Gurgaon என்ற பகுதி டெல்லி மிக அருகில் , தினமும் அலுவலகம் ஆட்டோவில் செல்லுவது தான் வழக்கம் , அப்படி ஒரு நாள் செல்லும் போது அவர் எனக்கு Gurgaon வரலாறை சொன்னார் .
துரோனச்சரிச்யார்க்கு பாண்டவர்களால் குரு தட்சணையாக வழங்கப்பட்ட இடம் தான் இந்த குருகோன் (Gurugaon ), Guru Gram என்பது Gurgaon ஆக மாறியது வரலாறு .அப்போதே தீர்மானித்து விட்டேன் எனது முதல் பதிவை யாருக்கு எழுதுவது என்று !
நம்மில் எத்தனை பேர்க்கு நம்முடைய ஆசிரியர்களை ஞாபகம் உள்ளது ? கல்லூரி பேராசியர்கள் பெயரை நினைவில் கொள்வதே பெரிய சாதனை ,அவர்களுக்கும் நமக்குமான இடைவெளி மிக அதிகம்,+1 மற்றும் +2 ஆசிரியர்கள் பந்தயக் குதிரைகளை பாரமரிப்பவர்கள் போல அங்கே உணர்வுபூர்வமான உரையாடல்கள் குறைவு தான் .ஆனால் Kinder garden , Middle School , High School ஆசிரியர்கள் மீதான உறவுகள் நிச்சயம் மறக்க முடியாதவை .நம்மை முட்டி போட வைத்த(Kneel Down ) , வீட்டுப்பாடம் (Home work ) கொடுத்த , பிரம்பால் அடித்த ஆசியர்களை நினைவில் இருக்கிறதா ? என் கதைக்கு வருகிறேன் !
நன்றாக பேசக்கூடிய ஓரளவு தமிழ் உச்சரிப்பு உள்ள நான் திக்கு வாய் என்று எத்துனை பேர்க்கு தெரியும் ? சேலத்தில் இருந்து நாமக்கல்-லில் ஒரு நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்ந்தேன் .ஆறாம் வகுப்பில் தான் அவரை பார்த்தேன் .பழைய ஜானி பட ரஜினியை போல இருப்பார்.அத்தைக்கும் அட்டைக்கும் வித்தியாசம் சொல்ல தெரியாமல்அனைவரும் ஏளனமாய் எள்ளி நகையாடும் போது ,என்னை சிறந்த தமிழ் உச்சரிப்புக்குக்கான மாநில விருதை பெற காரணமானவரே அவர் தான் திரு .ஜான் பெரிநாயகம்.
தொடக்கத்தில் அவர் எழுதி கொடுத்ததை பள்ளியில் பேச ஆரம்பித்து பிறகு நானாக எழுதி பரிசு பெற ஆரம்பித்தேன்.ஒரு கட்டத்தில் பள்ளியின் இலக்கிய மன்ற தலைவனாக பொறுப்பை கொடுத்த அவர் எனக்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமாகவே தெரிந்தார் .பள்ளி முடியும் தருவாயில் என் கடைசி போட்டியிலும் பரிசை வென்றேன் ,நான் எழுதிய கவிதை என்று சொன்ன போது கரவோசம் அதிகமாகவே கிடைத்தது. அவர் என்னை அழைத்தார் , அவர்க்கும் எனக்குமான உரையாடல் இங்கே ,
John : kavithai yar eluduna ? nalla irunduchu

Me : nan tan sir ..
பளார் என்று என் கன்னத்தில் அடித்து விட்டு சொன்னார் ,,
John: Ulagathula eda venalum thirudu , urimai kondadu tappu ilai ,ana adutavanoda karpanaiya matum thirudi un peyar adula pottukada !! ada vida mosamana visayam vera edum ilai
இதுவரை என்னை அடித்த முதல் மற்றும் கடைசி ஆள் அவர் தான்.அன்று அவர் அடித்தற்காக கோவப்பட்டு வருத்தப்பட்டேன் ,இன்று !ஏன் கோவப்பட்டேன் என்று வருத்தப்படுகிறேன் .பிரியும் தருவாயில் அவர் என்னிடம் சொன்னது , நீ பார்க்க போகும் மனிதர்களில் நானும் ஒருவன் என்று அன்று தான், நான் அவரை நான் கடைசியாக பார்த்தது.பள்ளியை விட்டு மாற்றலாகி போய்விட்டார் இன்னும் தேடி கொண்டிருக்கிறேன் நன்றி சொல்ல ???

உங்களுக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு ஆசிரியர் உதவி இருப்பார் , உங்கள் நலனுக்காக அவர் பாடுபட்டு இருப்பார் ,திரும்பி பாருங்கள் அவர்களை !அப்படி யாராவது ஒருவர் நினைவுக்கு வந்தால் ஒரு குறுஞ்செய்தி அனுப்பவும் அவர்க்கு .நண்பர்களுடான வழக்கமான உரையாடலை தவிர்த்து உணர்வுபூர்வமானதாக ஒரு உரையாடல்களை தொடங்குகள் இல்லை எனில் என் போல ஆசிரியரைத் தொலைத்த மாணவராகி விடுவீர்கள்.
"ஒருவனின் நன்னத்தடையினால் அவன் அடையும் புகழுக்கு பெற்றோர்கள் காரணம் ஆகிறார்கள் அது போல ஒருவன் கல்வியினால் அடையும் புகழுக்கு ஆசிரியரே பொறுப்பு ஆகிறார்கள்.
என் முதல் பதிவை ஆசியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
பக்கங்களை புரட்டுவோம் !!
1 Comments
ஒரு வார்த்தையில் சொல்வேன் இதைப் பற்றி "அருமை!!"
ReplyDelete