முன்னுரை



இது எனது நூல் , இங்கே நான் எனது அனுபவங்களில் சொல்ல மறந்த, சொல்ல மறைத்த பல தகவல்களை பதிவேற்ற ஆசைப்ப டுகிறேன் சித்ரா'சரவணன் பக்கங்கள், பெயர் காரணம் மிக எளிது . என் அம்மா அப்பாவின் பெயர், படித்துமட்டும் இருந்தால் இன்று தனக்கான அடையாளத்தை பெற்று இருப்பார் என் அன்னை. அவளுக்கு கிடைக்காத ஒன்றை நான் பெற, அவள் பட்ட, பட்டுக்கொண்டு இருக்கும் இன்னல்களுக்கு நன்றிக்கடனாக மட்டும் இல்லை, எழுத படிக்க தெரியாத அவள் பேரில் என் எழுத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசையின் காரணமாக என் புனைப்பெயரை நானே சூட்டிக் கொண்டேன்.

என் பதிவுகள் சமுகத்தில் ஒரு மாற்றத்தை  ஏற்படுத்த வேண்டும் என்றோ, இல்லை என் கவி,இலக்கியத்திறனை வெளிப்படுத்த  வேண்டும் என்றோ, எழுத போவது இல்லை, எனது  ஒவ்வொரு பதிவும் நீங்கள் படித்து முடித்தவுடன் கண் அயரும் நேரம் உங்கள் நினைவலைகளில் வந்து போனால் அதுவே என் பதிவின் வெற்றி.

அஞ்சல் வழி தொடர்பின் கடைசி தலைமுறையும்  இணைய வழி தொடர்பின் முதல் தலைமுறையும் நாம் தான். இந்த தலைமுறையில் உள்ள  மில்லியன் கணக்கான பதிவுகளில் ஒன்றாக இல்லாமல் தனித்துவமாக இயங்க விரும்புகிறேன். பதிவுகள் பிடித்து இருந்தால் பகிரவும் .


  பக்கங்களை புரட்டுவோம் !!


                             


0 Comments