I told you right, எனக்கு அவன பாக்கவே பிடிக்கல அவனும் அவன் மூஞ்சியும் இந்த எடிட்டர் பண்ண வேலை
Hey listen, He is your senior
இல்லமா, ஆபீஸ்ன்னா கூட பரவால்ல அவன் வீடு அதுவும் ஒரே இருட்டா, எப்போ பாரு TV ஓட்டிட்டே இருக்கு. அந்த சத்தத்துல இவனுக்கு நான் எழுதித்தரனும்.
அது வந்து மிழினா,
இரு ஒரு நிமிஷம் எடிட்டர் கால் பண்றாரு.
ஒகே சார்
என்னவாம்
நாளைக்கு ஆபிஸ் வர சொல்லிருக்காங்க, last 2 weeks கத்துக்கிட்டத presentation பண்ணுமாம். Shit
உனக்கு தான் presentation ஈசியா வருமே ஏன் டென்ஷன் ஆவர
ரெண்டு வாரம் ஒண்ணுமே பெருசா பண்ணல, வெறும் content writing தான்
அதையே உன் எடிட்டர்கிட்ட சொல்லு , அவர் எதாவது பண்ணுவாரு.
ஹ்ம்ம் பாக்கலாம்.
-----
அடுத்த நாள்,
சொல்லுங்க மிழினா, உங்களுக்கு என்ன ப்ராப்ளம்
சார் தப்பா நினைக்காதீங்க
நான் intern கேட்டதது உங்க கிட்ட, இங்க , இந்த ஆபீஸ்ல ஏதோ ஒரு third person கிட்ட ஏன் அனுப்புனீங்க
இத நீ முதல்ல கேட்டுருக்கனும் , இப்போ ஏன் கேக்கற
இப்போவது கேக்கறேன்ல சொல்லுங்க, He is using me for his personal tasks.
ஹ்ம்ம் , உன்னோட favorite journer என்ன சொன்னன்னு ஞாபகம் இருக்கா
investigate Journalism
ஹ்ம்ம் good.
So, u mean to say, he is that person? isn’t it
Well in good.
Indiala very few reporters doing this work perfectly , and they always be in undercover . அவங்க உண்மையான பேரு கூட வெளில தெரியாது.
அவர்க்கிட்ட கத்துக்க தான் அனுப்புனீங்களா
அது மட்டும் இல்ல , We gave him one assignment its almost 2 years. 6 மாசம் முன்னாடி ஒரு நியூஸ் வந்துச்சு he came back but வரும் போது எதோ accident ஆகி hospitalல தான் போய் பார்த்தோம். ரிப்போர்ட் சீக்கரம் வரும்ன்னு சொன்னான் but இன்னும் வரவே இல்ல. அவனுக்கு ஏதோ ஆகி இருக்கு அத மறைக்குறான், as a friend i am curious to know what happened to him. as a editor i want my assignment.
நீங்க எதுக்கு என்ன இதுல இழுத்து விட்டீங்க
நான் இழுக்கல அவன் தான்
எப்படி
உன்னோட articles evavulate பண்ணி select பண்ணது அவன் தான்.
அதான் அவன் கிட்ட உன்ன அனுப்பி வச்சன்
எனக்கு அந்த ரிப்போர்ட்என்ன ஆச்சுனு தெரிஞ்சுக்கனும், அவருக்கு என்ன ஆச்சுன்னும் தெரிஞ்சுக்கனும் கூடவே investigate Journalism பத்திக் கத்துக்கணும் . that’s seems to be interesting
நெறைய டைம் இருக்கு பொறுமையா போங்க
எனக்கு பொறுமையே இல்ல சார், நாளைக்கு கேட்ருவன் டைரக்ட்டா.
சரி உன் இஷ்டம், பாத்துக்கோ
bye சார்.
bye.
-----
அடுத்த நாள்,
சார், நேத்து எடிட்டர் பாத்தன் எல்லாமே சொன்னாரு, நீங்க தான் என்ன செலக்ட் பண்ணீங்கன்னும்
இத கண்டுபிடிக்கவே உனக்கு ரெண்டு வாரம் ஆச்சா
சார் எனக்கு பொறுமையாலாம் பேச தெரியாது நெறய கேள்வி கேக்கணும் எழுதிட்டு வந்துருக்கன் கேக்கவா
சரி கேளு
உங்களுக்கு எப்படி investigate Journalism மேல ஆசை வந்துச்சு
ஏதோ ஒரு ஆர்வம் , எங்க சார் பொய் சொல்லமாட்டார்ன்னு, எப்படியாவது கண்டுபிடிக்கன்னு எல்லார்க்கிட்டையும்கேக்க ஆரம்பிச்சேன். அதுவே எனக்கு ஒரு விளையாட்டா போச்சு. அங்க இங்கன்னு கேட்டு எல்லாருமே நான் சொல்ற மாதிரி தான் சொன்னங்க, எங்க சார் ஏன் அப்படி சொன்னாருன்னு குழப்பமாவே இருந்துச்சு
எங்க கிராமத்துல இருந்து டவுன் போய் அங்க இருக்க லைப்ரரியில இதே மாதிரி சொல்லிகேட்டேன். அங்க இருக்க ஒரு அண்ணா ஒரு புக் படிச்சு அந்த பாட்டு English King IV இல்ல V George வரவேற்க பாடுன பாட்டு , இவ்ளோ வளம் இருக்க நாடு நீங்க ஆள காத்துகிட்டு இருக்குன்னு சொன்னாரு. congress committela கூட பாடுனாங்கன்னு
எனக்கு இந்த புக் கொடுப்பீங்களான்னுகேட்டு அத வாங்கி எங்க சார் கிட்ட கொண்டு போய் கொடுத்தன்
அவரால நம்ப முடியல , நீ எப்படி கண்டுபிடிச்சன்னு கேட்டாரு
நான் என்னலாம் பன்னன்னோஅப்டியே சொன்னன்
அவர் என் தலை மேல கை வச்சு நீ பண்ணி இருக்கறதுக்குப் பேரு தான் investigation and Researchன்னு சொன்னாரு. நீ CBCID மாதிரி வரணும்ன்னு சொன்னாரு,அது எங்க எங்கயோ போய் இப்போ இப்படி வந்து நிக்குது.
எதிர்ப்பாக்காத மாதிரி ஒரு பதில் , நீங்க நெறய பேரு பாத்து இருப்பீங்க உங்கள inspire பண்ணவங்க யாரு
நெறய பேரு இருக்காங்க
நெறய பேரு இருக்காங்க
யாரவது ஒருத்தர் பத்தி சொல்ல முடியுமா
சத்தீஷ்கர்க்கு ஒரு assignmentக்குபோய் இருந்தன் , பணம் எனக்கு வந்து சேரல ,என்ன பண்றதுன்னு தெரியாம அங்க இருந்த ஒரு platformல படுத்துட்டு இருந்தன்.
அப்போ எனக்கு பக்கத்துல ஒரு குடும்பம் அந்த ஆளுக்கு ஒரு 23 இல்ல 24 இருக்கும் அந்த பொண்ணுக்கு 19விட கம்மியான வயசு, மூணு குழந்தைங்க.
என்ன பாத்து பசிக்குதான்னு கேட்டுக் கைல அவங்ககிட்ட இருந்த ரொட்டி உருளைக்கிழங்குகொடுத்தாங்க
அவ்ளோ தான் தூங்கிட்டன், நடு ராத்திரில முழிச்சு பாத்தா ஒரே முனகல் சத்தம்அவங்க கொஞ்சிகிட்டு இருந்தாங்க நான் கண் திறக்கவே இல்ல.காலையில முழிச்சு பாக்கறன், அவர் பழ வண்டிய தள்ளிட்டு போய்க்கிட்டு இருந்தாரு
அந்த பொண்ணு என்கிட்ட வந்து பேசுச்சு
உனக்கு வயசு எவ்ளோ இருக்கும் சார்
27
எவ்ளோ குழந்தைங்க? கல்யாணம் ஆச்சுல்ல
இல்ல, இன்னும் டைம் இருக்கு
அதுலாம் தோணரப்போ பண்ணிக்கணும் சார்
உனக்கு எப்போ ஆச்சு
தெர்ல சார் ஒரு 4-5 வருஷம் முன்னாடி
உனக்கு அப்போவே தோணுச்சா
நாங்க படிக்காத சனம் சார், பொட்டபுள்ளங்க வீட்ல வச்ருக்க முடியாது அதுனால சீக்கரம் தள்ளிவுற்றுவாங்க
அதுக்குள்ள 3 குழந்தைங்க
(வெக்கப்பட்டுகிட்டே) என்ன சார் பண்றது சீக்கரம்மா தூக்கமே வர மாட்டிக்குது
அன்னைக்கு இரவு அவர் கிட்ட கேக்கறேன் ,
உங்களுக்கு என்ன குறிக்கோள்
அதல்லாம் ஒன்னும் இல்ல, இந்த பசங்கள governement ஸ்கூல்ல சேத்திவிடனும்
எவ்ளோ சம்பாதிக்குற நீ, வண்டிய தள்ளிட்டு போனா
உருப்படி போக அம்பது ருபாய் நிக்கும்
எவ்ளோ சம்பாதிக்குற நீ, வண்டிய தள்ளிட்டு போனா
உருப்படி போக அம்பது ருபாய் நிக்கும்
போதுமா உனக்கு இந்த வருமானம்
இந்த மாவு 10ரூவா, காய்கறி அப்டியே முதல்ல இருந்து எடுத்துகுவன் ஒரு டைம் மாவு வாங்குனா 3 நாள் வரும் இதுவே அதிகம் சார்
இந்த கார்ல, பைக்ல போறவங்கள பாத்து உனக்கு ஏதும் தோணலையா
அவங்க சாமி சாரி, ஏதோ புண்ணியம் பண்ணிருக்காங்க. அவங்க சில சமயம் 5 – 10 ரூவா என் பசங்களுக்குகொடுப்பாங்க.இந்த புள்ளைங்க ஏதோ வாங்கி சாப்டும்
இதுல்லாம் பேசிக்கிட்டு இருக்கும் போதே , பக்கதுல ஒரு ஆள் ஏதோ பேசிக்கிட்டு இருந்தாரு
சார் புரிஞ்சுகோங்க வீடு பாதியிலேயே நிக்குது, நெறய செலவு பண்ணிட்டன், house loan சீக்கரம் ஏற்பாடு பண்ணுங்க. அதான் voterID proof கொடுத்தனே
நான் திரும்பி இவர் கேட்டன்
உனக்கு வீடு இருக்கா சார்
இல்லையே
கடன் எதாவது
என்ன நம்பி யாரு சார் தருவா
voter id
அப்டின்னா சார்

ஒன்னும் இல்ல.
அன்னைக்கு நைட் நான் கிளம்பிட்டன், அவன மாதிரி பல சமயம் ஏன் இப்போ கூட ஒரு பரதேசி மாதிரி இந்த உலகத்தோட எதுக்குமே ஒட்டிக்கொள்ளாம ராஜா மாதிரி வாழனும் ஆசை
he is still someone I cant beat.
அன்னைக்கு சாயந்தரம் , தலைவலி பொறுக்கமா பக்கத்துள்ள இருக்க coffee shop போனன் that was happened.
அன்னைக்கு நைட் நான் கிளம்பிட்டன், அவன மாதிரி பல சமயம் ஏன் இப்போ கூட ஒரு பரதேசி மாதிரி இந்த உலகத்தோட எதுக்குமே ஒட்டிக்கொள்ளாம ராஜா மாதிரி வாழனும் ஆசை
he is still someone I cant beat.
நீங்க பண்ற எல்லா assignmentக்கும் உங்க identity மறச்சுகுவீங்களா
ஆமா
ஏன்
முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட நீ உன்ன பத்தி சொல்லலும் போது எந்த தயக்குமும் இருக்காது. இங்க தெரியாம தப்பு பண்றவங்க 10% தான் , மீதி இருக்க எல்லாருமே தெரிஞ்சே தப்பு பண்ணுவாங்க , அவங்களுக்கு உன்னோட பின்புலம் வெளிப்டையா பேச அனுமதிக்காது. And safe zone also உன்ன யாரும் தேடி வந்து அடிக்க மாட்டாங்க.
அப்போ அது தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிருக்கு
Except my last project.
உங்களோட last project நீங்க முடிச்சுடீங்களா
no
அது என்னன்னு தெரிஞ்சுக்கனும்
அதுக்குதான நீ இங்க வந்து இருக்க
ஆமா ,என்ன project சார்
ஒன்ற வருஷம் முன்னாடி எடிட்டர் என்கிட்ட கூப்ட்டு prosetution in India பத்தி ஒரு work கொடுத்தார், அவங்க underground network, demographic records எல்லாமே
என்னோட ரூம்ல bureao லஒரு கிரீன் கலர் பைல் , ஒரு டைரி இருக்கும் எடுத்துட்டு வா
போய் எடுத்துட்டுவரன்
இப்போதான் கவனிக்கரன், இந்த டேபிள்ல ஒரு போட்டோ இருந்துச்சு, இப்போ காணோம். இதுக்கு தான் என்ன உள்ள போக சொன்னாரா . எப்படி நான் கவனிக்காம விட்டன்.
என்ன யோசிக்கற
ஒன்னும் இல்ல சார்
இதுல அந்த assignment பத்தி நெறய இருக்கும் வீட்டுக்கு எடுத்துட்டு போ, படிச்சுட்டு திங்கக்கிழமை வா
சரி சார்
-----
திங்கள்கிழமை ,
சார், புல்லா படிச்சன் , எப்படி இவ்வளோ collect பண்ணிருகீங்க
ஒரு work கொடுத்தா அத பத்தி முழுசா தெரியனும் அதுக்குப் பேரு தான் Journalism
நீங்க mention பண்ண மாதிரி அலாஹபாத் , புந்தி, ஹைதரபாத், கொல்கத்தா , மும்பை, முசாபர், டெல்லி, புனே இங்க மட்டும் தான் நடக்குதா
இல்ல அது இந்தியா முழுக்க நடக்குது , இதோ இந்த ஊர்ல கூட..
இங்கலாம் நடக்காது சார்,
உன் கண்ணுக்கு தெர்லன்னு அங்க தப்பே நடக்கல்லன்னு சொல்ல முடியாதுல
ஆமா சார், அதான் ரிப்போர்ட் முடிச்சீட்டிங்க அப்பறம் ஏன் இன்னும் கொடுக்கல and ஒரு curious நவிரான்னு ஏன் தலைப்பு, எங்கயும் அதப்பத்தி சொல்லல and If am not wrong. Who is She.
who
என்ன உள்ள அனுப்பிட்டு ஒரு போட்டோ மறச்சு வச்சீங்களே நான் வரதுக்குள்ள Is that நவிரா?
U are smarter than I think
சார் pls சொல்லுங்க , நவிரா யாரு, அவங்களுக்கும் இந்த assignmentக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்
வேறென்ன? காதல்! :-)
காதலா , நீங்களுமா . உங்க experinceக்கு அது overrated இல்ல fantasyன்னு தெரியாதா Coz I feel this every single time.
May Be. I will say it is a gambling
am not getting
காதல் ஒரு சூதாட்டம்.எப்போ யாருக்கு அது வரும் அதுனால அவங்க life என்ன ஆகும் அவங்க சேருவாங்களா இல்லையா எதுமே யாருக்கும் தெரியாது. Pure gambling
இப்போ நவிரா எங்க இருக்காங்க . உங்களுக்கு அவங்களுக்கும் என்ன ஆச்சு . இந்த workல அவங்கள எப்படி மீட் பண்ணீங்க.
என்னோட project முடிஞ்சுஊருக்கு போலாம்ன்னு நினைக்கும்போது ஒரு நண்பர் மூலமா நார்த் இந்தியால ஒரு இடம் சொல்லி அங்க prosetution நடக்கறதா சொன்னாரு , அங்க இருக்க ஒருத்தர்க்கு இந்தியா முழுக்க லிங்க் இருக்கு அவர்க்கிட்ட உனக்கு நெறய தகவல் கிடைக்கும்ன்னு சொன்னாரு . அப்படி தான் அங்க போனன்
நான் அங்க போனன், ஒரு கஸ்டமரா உள்ள போய் அவர மீட் பண்ணி படம் எடுக்க போறன் அதுக்கு இங்க கொஞ்ச நாள் இருக்க எந்த பிரச்னையும் வராதுன்னு சொன்னன். He believed.
அன்னைக்கு சாயந்தரம் , தலைவலி பொறுக்கமா பக்கத்துள்ள இருக்க coffee shop போனன் that was happened.
coffee shopல ஒரு கைல புக், இன்னொரு கைல coffee கப்வோட எதாவது ஒரு பொண்ணு பாத்தா அப்படியேஅவள திரும்பிப் பாக்காம சீக்கரம் கடந்து போய்டணும் இல்லனா you will fall in love with her. அதான் அங்க நடந்துச்சு
சார் குறுக்க வரன்னு நினைக்காதீங்க இவ்ளோ நாள் இந்த வீட்டுக்கு வந்துருக்கன் அவங்கள பத்திப் பேசும் போது தான் உங்க கண்ணுல உங்க முகம் ஏன் இந்த வீடு முழுக்க வெளிச்சமா இருக்கு. நான் இனி எதுமே பேச மாட்டன். நீங்களே சொல்லுங்க, நவிரா பத்தி
அவளோட முகமே நான் பாக்கல ஒரு புக் seriousah படிச்சுட்டு coffee ரசிச்சு குடிச்சுட்டு இருந்தா . புக் வச்சுருந்த கைல அந்த மூணு விரல், coffee பிடிச்சுட்டு இருந்த அந்த ரெண்டுவிரல் அதுல நேரிடையா படற சூரிய வெளிச்சம் இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்கு
பக்கத்துல அவளோட நிழல், அளவான தனம், யாரையுமே உறுத்தாத பேரழகியா இருப்பான்னு நினச்சுட்டு இருக்கும்போதே அவ புத்தகம் மூடி வச்சு அவ முகம் காமிச்சா. அந்த முகம் எதிரில சூரியஒளிபடும் போது ஏதோ சிலையில செதுக்குன்ன மாதிரி ஒரு வடிவம். அப்போவே அவ மேல ஒரு ஈர்ப்பு.
அடுத்து என்ன ஆச்சு நீங்க பேசுனீங்களா
இல்ல அவளே பேசுனா
எப்போ எப்படி
ரெண்டு நாளைக்கு அப்பறம் அதே ஷாப்ல
இன்னைக்கும் coffeeaaன்னு
wait தமிழலய்யா
இதே அதிர்ச்சியோடதான் நான் அவள பாத்தன்
நீங்க தமிழா
நான் தமிழ் இல்ல, கொஞ்சம் கொஞ்சம் தெரியும்
என்ன பத்தி விசாரிச்சா , அவ பிழையோட பேசுற தமிழ் அழகா இருக்கா இல்ல அவ பேசறதுனாள அந்த பிழை அழகா இருக்கானு எனக்கு இன்னும் தெர்ல.ஆனா அடுத்த வார்த்தை அவ பேச காத்துகிட்டு இருந்தன்
நான் தமிழ்ன்னு எப்படி தெரியும்
நீங்க தப்பு தப்பா ஹிந்தி பேசும் போதே தெரியும் நீங்க தமிழா தான் இருப்பீங்கன்னு
அவ முகத்துல பிரகாசமான புன்னகை இருக்கும். அவள பாக்கும் நொடியெல்லாம் சந்தோசத்த தரும்
நீங்க இங்கயா இருக்கீங்க
ஆமா
சூப்பர் , என் பேரு மகிழன். உங்க பேரு
நவிரா.
அருமையான தமிழ் பெயர். எங்க இருக்கு உங்க வீடு
நீங்க டைரக்டர் தானா , கண்டுபிடிங்க பாப்போம்
coffeeக்கு காசு கொடுத்து திரும்பும்போது அவள காணோம். ஒரு பைத்தியக்காரன்மாதிரி எதையோ எதிர்ப்பார்த்து அவள தேடி ஓடிகிட்டே இருந்தன் அந்த தெரு முழுக்க
Did u find?
இல்ல ரெண்டு நாள் அப்பறம் அவள மறுபடிம் பாத்தன்
எங்க
அவரோட வீட்ல
சார் அப்போ அவங்க
ஹ்ம்ம். பேச ஆரம்பிக்கும்போது அவ சைகை காமிச்சு coffee shop வர சொன்ன
அவங்க வந்தாங்களா
வந்தா
நீங்க அங்க என்ன பண்றீங்க
அங்க என்ன நடக்குதுன்னு தெரியாம தான் இந்த ஊருக்கு வந்தீங்களா டைரக்டர்
உங்களுக்கு இது வேணாம்
அப்பறம்
நவிரா, நீங்க பேசாம என்கூடவே வந்துருங்க
ஹலோ, நீங்க என்ன பேசறீங்க
இல்ல நிசமா. எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சருக்கு
வந்துருங்க
அவ கிளம்பிப் போய்டா
அவ பின்னாடியே 2 நாள் சுத்துனன், 3வது நாள் அப்பறம் என்கிட்ட வந்து
நீ எப்போ இங்க இருந்து போவ
நீ வரன்னு சொல்லு இப்போவே உன்னையும் கூட்டிட்டு போறன்
இந்த மாதிரி எத்தன பேரு பாத்ருக்கன், this is just physical attraction
இதுக்கு பதில் தமிழ்ல எப்படி சொல்றதுன்னு தெர்ல .Yes, I was infatuated with you: I am still. No one has ever heightened such a keen capacity of physical sensation in me. புரியுதா
நீ தமிழ்நாடுல இருந்து வந்து இருக்கணு ஒரே காரணத்துக்குத்தான் உங்கிட்ட பேசிட்டு இருக்கன், ஒரு வார்த்தை சொன்னா போதும் உன்ன இங்க இருந்து கொன்னு புதைச்சுருவான்ங்க
நாங்க அடிக்கடி பேசிக்க ஆரம்பிச்சோம்.
நான் தெரியமா கேக்கறன் உனக்கு நான் இங்க பண்றது தப்புன்னு தெரியலயா
அது அவங்க எந்த மாதிரி சூழ்நிலையில இதுக்குள்ள வராங்கனு பொறுத்தது.
புரியல
delhiல நான் படிச்ச நெறய பொண்ணுங்க கிட்ட இதே கேள்வி கேட்டன்
அவங்க என்ன சொன்னாங்க
You sell your brain, we sell our body. What’s the fuss about? I feel, our society is still very judgemental. If a boy and girl go on a blind date and end up having sex—that’s fine. But if the guy pays the girl for sex, it becomes unethical. இவங்கலாம் விருப்பமா வந்தவங்க
அப்போ விருப்பம் இல்லாம வந்தவங்க
உன்கிட்ட தான் அத நான் கேக்கணும் , நீ என்ன நினைக்கிற நவிரா இங்க இருக்கறது பத்தி.
இந்த வெளி உலகம் ரொம்ப மோசம் மகிழ், அதுக்கு இந்த இருட்டு எவ்வளவோ மேல்.
சொல்லிட்டு இருக்கும்போதே அவ கண்ணுல அந்த கண்ணீர், நெறய இல்ல அதிகபட்சம் ஒரு சொட்டு. ரொம்ப வருசத்துக்கு அப்பறம் அவ அழுவறான்னு தெரிஞ்ச்சு
இப்போ தான் அவள எனக்கு இன்னும் புடிக்க ஆரம்பிச்சு அவள பத்தி நெறைய தெரிஞ்சுக்க தோணுச்சு. அங்க இருக்க கடையில , அங்க இங்கன்னு அவள பத்தி விசாரிச்சன்.
அவங்க எல்லாருமே சொன்னது ரெண்டே விஷயம் . மூணு விஷயம் , அவ யார்கிட்டவும் பேச மாட்டா, புக்ஸ் படிச்சிகிட்டே இருப்பா and She is in prison, அந்த ஊரு தாண்டி எங்கையும் அவளால போக முடியாது ,நெறய டைம் தப்பிச்சு போக பாத்து அவள திருப்பித்திருப்பி கூட்டிட்டு வந்துருக்காங்க.
அப்பறம்ஒரு நாள் அவக்கிட்ட,
உங்களுக்கு தமிழ் எப்படி பேச வரும் , நீங்க தமிழ் நாடா
நான் கொல்கத்தால இருந்தன் , எங்க வீடு மேல் மாடில ஒரு தமிழ் குடும்பம் இருந்துச்சு அவங்க மூலமா தான் தமிழ் எனக்கு தெரியும். அவங்க வீட்ல தான் நான் பெரும்பாலும் வளர்ந்தன்.உங்க ஊரு கல்கி , ஜெயகாந்தன்லாம் அவங்க வீட்ல நெறய படிச்சு இருக்கன்.
கேக்கறேன்ன்னுதப்பா நினைக்காத நவிரா , நீ எப்டி இங்க வந்த
Have you met any accident in your life?
yes
எப்போ எப்படி
வண்டில போய்ட்டு இருக்கும் போது எதிர்ல வந்த ஒருத்தன் வந்து இடிச்சுடான்
அப்படி தான் நானும் இதுக்கு உள்ள வந்தன், it was an accident.
இப்போ அந்த கொல்க்கத்தா தமிழ் பாமிலி அங்கவே தான் இருக்காங்களா
அவங்க இருந்தா நான் ஏன் இங்க இருக்க போறன்
புரியல
They all suicided
நான் எதுமே பேசல
நெறய கடன் இருந்து இருக்கும்போல , அன்னைக்கு காலையில
யார் யாரோ அவங்க வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டு பாத்திரம்லாம் எதுடுட்டுபோய்ட்டு இருந்தாங்க. நைட் அவங்க வீட்டுக்கு போய் போனன், எல்லாரும் சாப்டுட்டு இருந்தாங்க. எனக்குன்னு கேட்டபோ உள்ள இருந்து இன்னொரு தட்டுல எடுத்துட்டு வந்து கொடுத்தாங்க.. அப்டியே தூங்கிட்டன்.காலையில வீடு முழுக்க போலீஸ், நைட் சாப்டுல விஷம் கலந்து சாப்பட்ருகாங்க. எனக்கும் கொடுத்து இருந்தா நான் நிம்மதியா போய் இருப்பன்
ரொம்ப நேரம் அமைதியா இருந்துட்டு அப்பறம் அவ கண்ணுல இருந்து கண்ணீர், இந்த முறை கொஞ்சம் அதிகமா 3 சொட்டு.
-----
அடுத்த நாள்,
நவிரா, ரொம்ப ஈசியான வேலைல இது
எது
அதான் இந்த தொழில்
அந்த 4 வது வரிசையில இருக்க புக் எது
இது என்ன நவிரா ,என்ன காமசுத்ரவா
ஆமா
அதுல கடைசி பக்கம் போ
ஹ்ம்ம் இரு
அத அப்டியே சத்தமா படி
“Sleeping with strangers for gain does not come naturally for women. Yet to succeed as a prostitute, you must disguise your love of money as natural desire for the man himself. Prove to him that he, not his money inspires your Devine lust by always seeming selflessly devoted. Don’t be too obviously grasping; use your wits to fleece him intelligently.” – Kamasutra
புரிஞ்சுச்சா
ஏதோ
Geisha பத்தி எதாவது தெர்யுமா
ஜப்பான்ல இருக்க அந்தபுற அழகிகள் தானா
Well not bad, Sex is an art. இது தான் அவங்களுக்கு சொல்லி தர முத பாடம். அவங்கள தேடி வரவங்களுக்கு ஒரு தேவதையா, அவங்க கஷ்டங்கள காது கொடுத்து கேட்டு அந்த இரவு முழுக்க அவங்களுக்கு சேவகம் பண்ணுவாங்க. காலையில நீ பாத்த அந்த இடம் சுத்தமாகி ஒரு பூ வச்சுட்டு போவாங்க. hey wait உனக்கு இதலாம் தெரியும் இல்ல
தெரியும்
அப்போ சும்மா என்ன பேச வைக்கர்யா
நீ பேசறது அவளோ அழகா இருக்கு அதான் கேட்டுகிட்டே இருக்கன்
முத முறையா அவ முகத்துல சிரிப்பு. அத சிரிப்புன்னு கூட சொல்ல முடியாது , முத முறையா ஒரு மாற்றம்
தயவுசெய்ஞ்சு சொல்லு , நீ எப்படி இங்க வந்த
எங்க ஊரு பகுதில ஒரு கலவரம் நடந்துச்சு அம்மாக்கு கல்யாணம் ஆனா புதுசல, அப்போ வந்த சில பேரு கொஞ்சம் அத்துமீறுனாங்க அதுல எங்க அம்மாவும் ஒண்ணு. அவங்க கண்ணு முன்னாடியேஎங்க அம்மாக்கு அடுத்து வரிசையா அதே ஆளுங்க அடுத்தடுத்து அங்க இருக்க பொண்ணுங்கள மிரட்டி அவங்க ஆசைக்கு .. அத எல்லாமே பாத்து அம்மா disturbed ஆய்டாங்க
நைட் தூக்கடதுல கனவு வந்து முழிச்சி பாத்து தூக்கம் வரமா இருட்டு அறையிலே இருந்து பயந்த சுபாவமா மாறிட்டாங்க. அப்போ தான் நான் பொறந்தன், குடும்பம் கொல்கத்தாக்கு வந்துச்சு . அம்மா மாறவே இல்ல. ஒரு பொண்ணுக்கு என்னலாம் தெரியனுமோ அது எல்லாமே 7 வயசுல எனக்கு எங்க அம்மாவோ இரவு உளறல் மூலமா தெரியவந்துச்சு அம்மா இறந்தாங்க , பக்கதுல இருக்க தமிழ் குடும்பம் வீட்ல தான் இருப்பன்
அப்பா
அவரா
அந்த தமிழ் குடும்பம் இருக்க வர அவர்க்கு என்ன பத்தி கவலை இல்ல, அவங்களுக்கு அப்பறம் என்ன ஒருத்தர் வீட்ல தங்க சொன்னாரு அப்பறம் தான் தெரிஞ்சுச்சு அவர் என்ன முப்பதாயிரம்க்கு வித்துத்து வேற ஊருக்கு போய்டாருனு. எங்க எங்கயோ போய்ட்டு இங்க வந்த்ருக்கன்.
உங்களுக்கு வயசு கம்மி, இந்த வயசுக்கு உங்களுக்கு இவ்ளோ maturity இருக்கு , நெறய books படிக்கறீங்க இன்னும் ஏன் இங்க இருக்கீங்க, என் கூட வர சொல்லல வேற எங்கயாச்சு போய் இருக்கலாமே
ரொம்ப சுயநலமானது இந்த உலகம். உனக்கு அப்பா அம்மா இல்ல குடும்பம் இல்ல அதுவும் இல்ல உனக்குன்னு தட்டிக்கேட்க ஒருத்தன் இருக்கான் வை இந்த உலகம் உன்ன மதிக்கும் இல்லனா உன்னப் பத்தி அதுக்கு அக்கறை இல்ல. அவங்களுக்கு நீ உபயோகமா இருந்தா வச்சுக்கும் இல்லனா தூக்கிப் போற்றும். எனக்கு இந்த உலகம் தான் safe.
நான் நாளைக்கு கிளம்பறன்
அவ முகத்துல ஒரு ஏமாற்றம் ஆனா இத அவ வெளில காட்டிக்குல
சரி பாத்து போ
மூணு நாள் அவ கண்ணுல படல, நாலாவது நாள் அதே coffee shop ல நான் இருக்கும்போது அவ என்ன பாத்து கோவமா ஓடி வந்தா
Are you may. You are still here. உயிரோட போக வேணாமா நீ
இப்போவும் சொல்றன் நீ வா , சேர்ந்து போலாம்
மகிழா நீ நல்ல பையன், அழகா இருக்க , நல்ல வேலை செய்யற .
உனக்கு உங்க அம்மா அப்பான்னு குடும்பம் இருக்கு அவங்க பாத்து வைப்பாங்க என்ன விட ரொம்ப அழகனா பொண்ணா..நான் அழுக்கு உனக்கு வேணாம் நீ போ
நீ வா, இந்த உலகத்துல கெட்டவங்க மட்டும் இல்ல நெறய நல்லவங்க இருக்காங்க உனக்கு காமிக்கரன். நவிரா நான் ஒன்னு
கேக்கவா
உனக்கு என்ன பிடிச்சருக்கா
அதான் ஏற்கனவே சொல்லிட்டனே இது வேணாம்னு, திரும்ப திரும்ப முட்டாள் மாதிரி behave பண்ணாத.
கேட்டதுக்கு பதில்
புடிச்சுர்க்கு
எப்போ இருந்து
அதலாம் தெரியல, நீ கிளம்புவன்னு சொன்னல அப்போ இருந்து
ரெண்டு பெரும் பேசிக்கவே இல்ல.
அங்க இருந்த ஒரு புக் எடுத்து அந்த டேபிள்ல வச்சன். அரபிய அழகிகள் எல்லாரும் புடைசூழ கல்யாணம் செயஞ்சுக்கதயாரா இருக்கும்போது ஒரு சாதாரண பொண்ண விரும்புன Gayaz - laila வோட கதை அந்த புத்தகம்
பொருள் புரிந்தவள் போல ரொம்ப நேரம் அழுதா. என்னோட கை புடிச்சு அவளோட உள்ளங்கையில வச்சா. வெறும் மௌனமான
அந்த தருணம்
நம்பு, இது வெறும் physical interaction மட்டும் இல்ல நவிரா,
Love you மகிழ்
அங்க அதுக்கு அப்பறம் ஒரு வாரம் நல்லா போச்சு நெறைய பேசிக்கிட்டோம்
என்ன பேசுனீங்க haiyo சாரி சார், குறுக்க வந்துட்டன். நீங்க சொல்லுங்க
எங்களுக்கு நடந்தது உனக்கு வெறும் ஸ்டோரி .எங்களுக்கு அது life , அந்த உரையாடல்கள எந்த சுவராசியுமும்உனக்கு இருக்காது

அடுத்த நாள் விடியக்காலைலே தப்பிச்சு போலாம்ன்னு முடிவு பண்ணும் போதுதான்நள்ளிரவுள்ள நெறய பேரு வந்து என்ன அடிச்சு எங்கயோ தூக்கி போட்டுட்டாங்க
எப்படியோ சென்னை வந்து சேர்ந்தன்
அதுக்கு அப்பறம் அவங்கள பாக்கவே இல்லையா
திரும்ப போய் கூட்டிட்டு வருவீங்களா
ஆமா
அப்போயும் உங்கள அடிச்சு விரட்டிட்டா
மறுபடியும் போவன்
கேக்கறேன்ன்னு தப்பா நினைக்காதீங்க , She is a prostitute, அவளுக்கு வாழ்கை கொடுக்கணும்னு நினச்சீங்களா இல்ல அவங்க அழகா இருக்கான்னு உங்க கூடவே கூட்டிட்டு வர நினச்சீங்களா
அழகு நாம பாக்கற பார்வைல இருக்கு, இப்போ நீ அழகா இருக்கன்னு நினச்சா அது உன்னோட தப்பு. உனக்கு இருக்கறதுக்கு பேரு இளமை . அது அழகு இல்ல . ஒரு 35 வயசு ஆகும் போது தோல் சுருங்கி நீ எதலாம் அழகுன்னு நினச்சையோ அது வத்திப் போய் இருக்கும். அப்பறம் prostitute- அவக்கிட்ட எதிர்பார்க்கரது வெறும் உடம்பு சுகம் இல்ல. உண்மையான சுகம் உணர்ச்சிகள்ள இருக்கு அது ஒரு வித உளவியல் போதை ஒருத்தர் கிட்ட மட்டும் தான் அந்த போதை வரும். எங்க ரெண்டு பேருக்கும் அது இருந்துச்சு and we connected emotionallly , அதான் காதல் வந்துச்சு
அப்படி என்ன சார் காதல் . கொஞ்சம் பொறாமையா இருக்கு. சரி அடுத்து என்ன பண்ண போறீங்க
அவ என்கிட்ட சொன்னா ஒரு நாள் , எனக்கு சூரியனா ரொம்ப பிடிக்கும் அம்மா கும்டுவாங்க, நான் அந்த வானம் நீலமா இருந்து சிகப்பா மாற வர பாத்துகிட்டே இருப்பன் ஆனா இப்போ இல்ல..பாக்கன்னும் உங்க ஊருக்கு கூட்டிட்டு போய் காமின்ன்னு, அத பண்ணனும்.
சார் எப்படி அவங்க கூட சண்ட போட்டு கூட்டிட்டு வருவீங்களா
எல்லாருக்கும் ஒரு weakness இருக்கும் , அத வச்சுதான் போணும்
பெரிய நெட்வொர்க்ன்னு சொல்றீங்க எப்படி உள்ள போவீங்க
உனக்கு புரியற மாதிரி சொல்றன் , நீ ப்ரொவ்சிங் சென்டர் போறீனு வச்க்கோஅங்க இருக்க ஆளுங்க வேணும்னே உன்னோட கம்ப்யூட்டர்ல போர்ன் சைட்ஸ் ஓபன் பண்ணி உன்ன கேமரா மூலமா வாட்ச் பன்னுவாங்க. நீ கொடுக்கற ஆர்வம் பொறுத்து உன்கிட்ட CD பத்தி பேசி விப்பாங்க, அத நீ முழுசா முடிச்சுட்டா அடுத்த இந்த பொண்ணுகள பத்தி பேசி ஒருத்தர் கூட பேச சொல்லுவாங்க . அவங்க தான் agent. அவங்க மூலமா தான் இங்க இருந்து அங்கயும் அங்க இருந்து இங்கயும் network நடக்கும். அந்த ஒருத்தர் புடிச்சு அங்க மறுபடியும் போவன்.
சார் அது எப்படி சார் நவிரா உங்கள love பண்றாங்கன்னு கண்டுபிடிச்சீங்க
ஒருத்தர் கண் பாத்தே அவங்க என்ன நினைக்கறாங்கன்னு தெரியனும் அதான் reporter
சரி அப்போ என் கண்ண பாத்து என்ன நினைகன்றேனு சொல்லுங்க
உன் கண்ணுல ஒரு நடிப்பு இருக்கு. உனக்கு என்னோட கதை மேல ஆர்வம் இல்ல. இப்போ கூட நீ என்ன கவனிக்கல அடுத்து என்ன கேள்வி கேக்கலாம்ன்னு யோசிச்ட்டே பேசற.
சாரி சார், உங்க நவிரா project அவங்கள கூட்டிட்டு வந்தா தான் முடியுமா
ஆமா , நான் சொல்லி அனுப்பறன் அப்போ வா .
---------------
ஆறு மாசத்துக்கு பிறகு
மிழினா
ஆமா நீங்க
நான் மகிழன் பேசறன்
சார் சொல்லுங்க
assignment ரெடி ஆச்சு வந்து வாங்கிட்டு போங்க
நாளைக்கு வரன் சார்
சரி
இப்போதான் யோசிக்கறன், assignment ரெடினா , நவிரா வந்து இருப்பாங்களா ? அவர்க்கு என்ன ஆகி இருக்கும் அவரசப்பட்டு நாளைக்குன்னு சொல்லிட்டனே திரும்ப கால் பண்ணுவோம்
சார்
சொல்லுங்க
permisson போட்டுட்டன் இப்போவே உங்க வீட்டுக்கு வரவா
சரி வாங்க
அவர் சொன்ன அத்துணையும் யோசிச்ட்டே போறன் வீட்டுக்குள்ள நுழையும்போது
அந்த வீடு ரொம்பவே வித்தியாசமா இருக்கு..ரொம்ப வெளிச்சமா ...வீட்டுக்குள்ள நெறய மாற்றம்
உங்களுக்கு யார் வேணும்
மகிழன் சார் பாக்கனும்
மகிழா உன்ன பாக்க ஒரு பொண்ணு வந்தருக்கு
வந்துகிட்டே இருக்கன், உள்ள வாங்க
சார் அவங்க
எங்க அம்மா
மகிழா உங்க அப்பா அந்த நியூஸ் பேப்பர் இன்னும் எவ்ளோ நேரம் படிச்சுட்டே இருக்க போறாருன்னு கேளு.
நீ சும்மாவே இருக்க மாட்டியாமா, அவர் பாட்டுக்கு படிக்கறாரு உன்ன என்ன பண்ணாரு. ஒரு நிமிஷம் இரு
மிழினா, இந்தாங்க உங்க ரிப்போர்ட். எடிட்டர் கிட்ட கொடுத்துருங்க , நான் மீதி அவர்க்கிட்ட போன்ல பேசிக்குரன்
சார் நீங்க நவிராவ கூட்டிட்டு வந்துடீங்களா
ஆமா
நிசமாவ
ஹ்ம்ம்
இப்போ எங்க இருக்காங்க
மேல என் ரூம்ல இருக்கா
எப்படி மீட் பண்ணீங்க
அவ இருக்க இடம் தெரிஞ்சு போனன், என்ன பாத்த உடனே வந்துட்டா
அவங்களுக்கு எல்லா ஊருலயும் ஆளுங்க இருப்பாங்கனு சொன்னீங்க railway station , airport , bus standunu எப்படி வந்தீங்க
மினி பஸ்ல
சார்
ஒவ்வொரு ஊருக்கும் மினிபஸ்ல வந்து வந்து, எந்த ஊருக்குள்ளேயும் நுழையாம இங்க வந்து சேர்ந்தோம்
எவ்ளோ நாள் ஆச்சு
33 நாள்
இனி யாரும் வர மாட்டாங்களா அவங்கள தேடி
இல்ல வர மாட்டாங்க
சரி சார் நான் வரன்
கதவுக்கிட்ட போய்ட்டு
சார் நான் அவங்கள போய் பாக்கவா, தொந்தரவு பண்ண மாட்டன்
சரி போய் பாரு
lifela முத முறையா ஒரு thirller moment , இன்னும் இந்த சார்
சொல்றத நம்ப முடியல. இந்த வீடு இருட்டா இருக்க வர எனக்கு பயமே வரல..இப்போ ரொம்ப வெளிச்சமா இருக்கு அதான் பயமா இருக்கு
கதவு திறந்து இருக்கு மெதுவா உள்ள போறன்
சன்னல் வழியா வானம் பாத்துகிட்டே எதோ ஒரு புக் படிச்சுட்டு இருக்காங்க. பக்கதுல இருக்க கண்ணாடியில அவங்க முகம் . ஒரு வெளிச்சம் சார் சொன்ன மாதிரி அவங்க முகம் முழுக்க..
அவங்க கைல அந்த புக் , கள்வனின் காதலி
என்னோட நிழல் பாத்து உடனே தலைய திருப்பி எழும்புறாங்க
நீங்க
மிழினா
நீங்க தானா நவிரா
ஹ்ம்ம்
அவ முகத்துல எந்த உணர்வும் இல்ல ரொம்ப இயல்பா இருக்கா. அவ மனசுல இப்போ என்ன ஓடிக்கிட்டு இருக்கும்.
நவிரா நான் உங்கள ஒன்னு கேக்கவா
கேளுங்க
ஒரு வேல உங்க அப்பா இன்னொருத்தர் கிட்ட உங்கள கொடுக்கலேன்னா ..? உங்க வாழ்க்கை மாறி போய் இருக்கும்ல
ஒரு வேல அப்பா இன்னொருத்தர் கிட்ட உங்கள கொடுக்கலேன்னா, அந்த தமிழ் குடும்பம் இருந்து இருந்தா, எங்க அம்மா சாகமா இருந்தா என்னோட வாழ்கை மாறி தான் போயிருக்கும், மகிழன பாத்துருக்க மாட்டன், ஏன் இங்க இப்போ உன்கூட பேசிட்டு இருக்க மாட்டன்.
correct , Nice to meet you ma'am.
Same Here.
அவங்க சன்னல பக்கம் திரும்பிட்டாங்க , அந்த சன்னல் வழியா வானத்த பாக்றாங்க அது நீல நிறத்துல இருந்து இப்போ சிகப்பா மாறிக்கிட்டு இருக்கு.
-முற்றும்-
பக்கங்கள் புரட்டப்படும்

2 Comments
Nice writing Anna..
ReplyDeleteQaitWai for the next one.
Is this story a real one..is this over..I wish to know the continuation..
ReplyDelete