அஞ்சுக்கால் குதிரை

ஒவ்வொருத்தரும் என்ன என்னமோ வரையறாங்க
எனக்கு என்ன வரையறதுன்னு தெர்ல

37 வருசமா இதுக்குத் தான் காத்துக்கிட்டு இருந்தாயான்னு நானே எனக்குள்ள கேட்டுப் பாக்கறன்.
காலேஜ் படிக்கும் போது என்னோட ராஜமாணிக்கம் சார் அடிக்கடி சொல்லுவாரு . நீ இந்த நொடி சந்திக்கப்போற வெற்றியோ தோல்வியோ அவமானமோ ஏன் ஒரு குழந்தையோட சிரிப்போ தான் உன்னோட அடுத்த நொடிய தீர்மானிக்கும் .Co-incidents are only life.

கண்ணமூடி அப்படியே நினச்சுப்பாக்கறன்.


ராஜமாணிக்கம் சார் , காலேஜ்ல அவர் எல்லார்க்கும் ஹீரோ எனக்கும் தான். அவ்ளோ ஸ்டைல்ல பேசுவாரு, நடப்பாரு . Psychology படிச்சது நாளையோ என்னவோ ஒருத்தர் பாத்தே அவங்க குணம் கண்டுபிடிக்கரதுல கெட்டிக்காரர். பசங்களுக்கே அவர பிடிக்கும்னா பொண்ணுங்கள கேக்கவா வேணும், அவர் கை கொடுத்தா அந்த ஒரு வாரம் பொண்ணுங்க தேவலோகத்துல இருக்க மாதிரி சுத்துவாங்க.

ஓவியக்கல்லூரில ராஜமாணிக்கம் கிளாஸ் பசங்கன்னு சொன்னாலே மரியாதை கொடுப்பாங்க . அவர் எந்த படத்துக்கும் அதிகபட்சம் சுமார்ன்னு சொல்லி ராஜான்னு கையெழுத்து போடுவாரு. சுமார்ன்னு கையெழுத்து வாங்கறதே எல்லார்க்கும் மூணு வருஷ கனவா இருந்துச்சு .

ஆனா எனக்கு அவர் போட்டது எல்லாமே மோசம் , மிக மோசம் மட்டும் தான். மாதேஸ்வரன் பேர எல்லாரும் மாதுன்னு கூப்டும் போது அவர் மட்டும் மாடுன்னு சொல்லுவாரு. 'து', 'டு' உச்சரிக்க வராது அவர்க்கு.

நீ ஏன் ஓவியக் கல்லூரியில சேர்ந்த மாடுன்னு கேக்காத நாலு இல்ல. கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல , ஸ்கூல் படிக்கும் போது நான் பார்த்த அந்த பொண்ணு இந்த காலேஜ்ல சேர்ந்துருக்குனு தெரிஞ்சு இந்த குரூப் எடுத்தன்னு. ஆனா விதி அவ இந்த காலேஜ்ல சேரவே இல்ல , அவளுக்கு கல்யாணம் ஆகி நாகர்கோயில் பக்கம் இருக்கானு தெரியவே ஒரு வருஷம் ஆச்சு.

இந்த எழுதறேன்னு சொல்றது, வரையறது, மியூசிக் போடப் போறேன்னு சொல்றது அதான் என் வாழ்க்கைன்னு சொல்றது எல்லாமே கேக்க நல்லா இருக்கும். those are good in books but in reality not. நீ இன்னும் ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு முயற்சி செய்ஞ்சா பெரிய கலைஞன் ஆகலாம் எல்லாரும் கைத்தட்டுவாங்க , செய்தியில ரெண்டு வரி வரும் ஆனா அடுத்த வேலை சோறு உனக்கு நிச்சயம் இல்ல, குடும்பத்த பத்தி யோசி இனியாச்சு பொறுப்பா இரு. வேற வேலைக்குப் போ இது உனக்கு சரியா வராது, இதான் அவர நான் கடைசியா பாத்தது பேசுனது எல்லாமே .

அவர் மேல அவ்ளோ கோவம், நமக்கு மட்டும் ஏன் இப்படி சொன்னாரு. மத்தவங்களுக்கு மட்டும் இப்படி சொல்லலனு .ஆனா மறுபடியும் விதி அவர் சொன்ன மாதிரி தான் போக வச்சுச்சு சொல்லப்போனா எனக்கு வேற வழியும் இல்ல

எங்க குடும்பம் ஒன்னும் பெரிய வசதியானது இல்ல குதிரைக்காரன் வீடு எதுன்னு கேட்டா எல்லார்க்கும் தெரியும் . எங்க வீடு வச்சுதான் மத்த வீட்டுக்கு வழி சொல்லுவாங்க . குதிரைக்காரன் வீட்ல இருந்து நாலாவது வீடு , எதிர்த்த வீடுன்னு.

அப்பா, தாத்தாவோட பூர்வீகம் குதிரை ஓட்றது. ராஜாக்களுக்கு குதிரப்படையா இருந்தோம்னு அப்புச்சு ஒருக்கா சொன்னது ஞாபகம் இருக்கு. வேண்டா வெறுப்பா குடும்பத்துக்காக வேலை தேடுனப்போ கிடச்சது தான் பேங்க் வேலை.

வாசுவ நீ IAS படின்னு சொன்னப்போ, இல்லப்பா நீங்க ஏற்கனவே ரொம்ப கஷ்டப்டறீங்க , உங்க உடம்புக்கு வேற இப்போ முடியல நான் வேற வேலைக்கு போறன்னு சொன்னான்.

ஆமா எனக்கு ஒரு கால் இல்ல, முள் குத்திடுச்சு அதுனால ஒரு கால் வெட்டி எடுத்தாங்கன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ஆனா அது தான் உண்மை.

அவன IAS படிக்க சொன்னன். இப்போ வாசு என்னோட பையன் கலெக்டர் .

இப்போ நானும் ரீடைர்டு ஆய்டன். பாங்க்ல காஷியரா இருந்தன். இன்னும் அந்த நாள் ஞாபகம் இருக்கு . கடைசி நேர்முகத் தேர்வுல நீங்க ஏன் இந்த வேலை choose பண்ணீங்கன்னு சார் கேட்டப்போ நான் சொன்னப் பதில்.

வாழ்க்கைக்கு முக்கியம் பணம், மனுசங்க . இது ரெண்டுமே நான் தினமும் பாக்கப் போறன் . புதுசு புதுசா மனுசங்க , அச்சடிச்ச புது ரூபா காசு இத தவிர வேற என்ன நல்ல வேலை இருந்தர போதுன்னு.

அந்த பதில் தான் எனக்கு அந்த வேலை கிடைக்க காரணம். ஆனா கடைசி வர பணமோ மனுசங்களோ அந்த வேலையில நான் பெருசா சம்பாதிக்கல .

வேலைக்கு சேந்து நல்லா போய்ட்டு இருந்த வாழ்க்கை ஒரு நாள் மாறுச்சு.

எல்லார்க்கும் ஒரு ஆசை இருக்கும்ல ஒரு புக் எழுதனும் , ஊரு சுத்தணும் இளையராஜா சார் நேர்ல பாக்கணும்ன்னு அது மாதிரி நான் மறுபடியும் வரையணும் ஆசை வந்துச்சு. என்னோட அப்பா அம்மா ஏன் ராஜமாணிக்கம் சார் கூட நீ வரைன்னு சொன்னது இல்ல, சிலைக்கு உப்புக்காயிதம் வச்சுத்தேக்குற ஒருத்தன பாத்து தோனுச்சு.

கும்பகோணம்க்கு அடுத்து சுவாமிமலையில வேலை பாக்கும்போது அங்க சிலை செய்யற கூட்டதுல ஒருத்தன் அவன். சாமி நினச்சு நாம கும்புட்ற சாமிக்கே உருவம் கொடுத்துட்டு இருக்க கூட்டம். நாமளும் மறுபடியும் வரையும்னுனு நினச்ச நொடி அவன் ஏதோ ஒரு கொம்புக்கு உப்புக்காயிதம் போட்டுட்டு இருந்தான்.
நான் ஏன் இப்போ எங்க எங்கயோ போய்க்கிட்டு இருக்கன்னு தெர்ல,வயசு ஆச்சு நினைவலைகள் ஒரே வரிசையா வர மறுக்குது.

வாசு ஒரு நாள் வந்து அப்பா நான் லவ் பண்றன்னு சொன்னான்.

இப்போதான ரிசல்ட் வந்தருக்கு அதுக்குள்ள இப்படி சொல்றன்னு கேட்டப்போ, அப்பா ரிசல்ட் வரட்டும்ன்னு இருந்தன் சொல்றதுக்குன்னு சொன்னான்

பொண்ணு வீட்ல பேசணுமா இல்ல அதுவும் பேசிட்டயா

இந்நேரம் அவளும் அங்க பேசிட்டு இருப்பா .


அவனோட கல்யாணத்துக்கு நான் எந்த மறுப்பும் சொல்லல.

என்னோட கல்யாணம் நினச்சுப்பாக்கரன்.

பவித்ரா

தஞ்சாவூர்ல இருக்கும் போது ஒரு தந்தி , உனக்கு பொண்ணு பேசி முடிச்சாச்சு ஆடி போய்ட்டு ஆவணில கல்யாணம்ன்னு. பொண்ணு ரெண்டு தெரு தள்ளி இருக்க கோனார் பொண்ணுன்னு

அவள பால்வாடி படிக்கும்போது கடைசியா பாத்த ஞாபகம் . மூக்கு ஒழுகிட்டு அழுக்குப்பாவாடையில இருப்பா எப்போயும்.

ஊருக்கு போய்ட்டு ஒரு நாள் அம்மா சொன்னுச்சு , இதோ அவ தான் உனக்கு பாத்ருக்க பொண்ணு. திரும்பிப் பார்க்கரதுக்குல அவ ஒரே ஓட்டம். தாவணி போட்டுட்டு குஞ்சம் வச்சு ஜடை பின்னி இருந்தா
அப்பரும் கல்யாணம் அப்போ தான் முகம் பாத்தன். அவள பிடிசுச்சா இல்லயான்னு நான் யோசிக்கவே இல்ல.எனக்கு அப்போ ஒரு கல்யாணம் ஒரு பொண்ணு தேவை பட்டுச்சு அவ்ளோ தான்.

கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சமா குடி சூதுன்னு இருந்த்சு , கல்யாணத்துக்கு அப்பறம் அது அதிகம் ஆச்சு . அடிக்கடி இவ கோச்சிகிட்டு போவா. திரும்ப வந்துருவா அதுனாலே என்ன விட்டா இவளுக்கு யாரும் இல்லன்னு மிதப்புல அதிகம் குடிச்சன் .

ஒரு கட்டம்ல குடி தவிர வேற எதுமே ஞாபகம் இல்ல. அவள எட்டி உடைக்காத நாளே இல்ல அதான் என்னவோ இப்போ ஒரு கால் இல்லையோ.


எப்போ குடி என்ன விட்டுப் போச்சுன்னு தெர்ல ஆனா வாசு பொறந்துடுக்கு அப்பறம்தான் எல்லாமே கொஞ்சம் மாறுச்சு . இப்போவும் பவித்ரா பாக்கும் போதெல்லாம் என் மேல குற்ற உணர்ச்சி வரும். எக்கேடு கெட்டுப்போடான்னு அவ போயிருந்தா எப்போவோ நான் குடிச்சே செத்துப் போயிருப்பேன் . எல்லாரும் என்ன நல்லவன்னு சொல்லும் போது பவித்ராக்கு மட்டும் தப்பு பண்ணிட்டோம்னு தோணும் .

வாசுக்கு குழந்தை பொறந்துச்சு, பேரு ராஜான்னு வச்சோம் . என்னோட ராஜமாணிக்கம் சார் ஞாபகமா நான் வச்ச பேரு.ஒரு நாள் ஆசிரயர்கள்தினத்துக்கு அவர் பாடுனாரு “ ராஜா ராஜா சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்னு “ அந்த நொடி அந்த குரல் பாடும் போது அவர்க்கிட இருந்த சிரிப்பு அவர் உண்மையிலே ராஜான்னு சொல்லும்.

நாம இத பண்ணும்ன்னு நினைப்போம் ஆனா கடைசி வர பண்ண மாட்டோம் கானல் நீர் மாதிரி எல்லாமே தள்ளிப் போய்டே இருக்கும். அப்படி தான் நான் தினமும் வரையுனும் நினைக்கிறது . வெறும் பேப்பர் மட்டும் இருக்கும் என்ன வரையன்னு சொல்லி யோசிக்கவே சரியா இருக்கும் அப்பரும் சோம்பேறித்தனம் . தூங்கும்போதும் சரி எழுந்திரிக்க போதும் சரி இன்னைக்கு எப்படியோ வரையணும் நினைப்பன் . ஒரு கோடு கூட போட ட்ரை பண்ணல.

உனக்காக நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும் ராஜமாணிக்கம் சார் எனக்கு எழுதிக் கொடுத்த வாசகம் அத படிக்கும்போது தான் போன வாரம் சேது கிட்ட இருந்து போன் . சேது நான் ஓவியக் கல்லூரில படிக்கும் போது கூட படிச்சவன் . எனக்கு எவ்ளோ ராஜமாணிக்கம் சார பிடிக்குமோஅவளோ ராஜமாணிக்கம் சார்க்கு சேதுவ பிடிக்கும் அதுனாலயே சேதுவ எனக்கு பிடிக்காது . அவன் இப்போ அதே காலேஜ்ல professor .

மாது , நம்ம ராஜமாணிக்கம் சார் தவறிட்டார் .காலையிலதான் ஹார்ட் அட்டாக்காம் . ஒரு நிமிஷம் சுதாரிக்குறதுக்குல கண்ணுல தண்ணீர் .

பவித்ரா என்ன இப்போ பாக்குறா இவனுக்கு அழுக கூட தெர்யுமான்னு.

அழுந்து முடிச்சு கண்ணு துடைக்கும் போது டிவியில அந்த பாட்டு ,
ராஜா ராஜா சோழன் நான்ன்னு. எதேச்சைகள் தான் எத்தனை எதேச்சையானது.

அவர் வீட்டுக்கு போறன் , இந்த 37 வருஷதுல போணும் போணும் நினச்ச இடம். செய்யன்னும்னு நினைக்ரத அப்போவே செயஞ்சுடனும்ன்னு அவர் சொன்னது அவர் வீட்டுக்குள்ள நுழையும் போது கேக்குது அவர் குரல்ல தூரமா எங்கயோ இருந்து .

அவரோட அந்த ரூம் , அதுல ஒரு அமைதி .

அப்போ தான் சேது சொல்றான் வர ஞாயிறு நம்ம காலேஜ்ல அவர் நினைவா ஒரு போட்டி வைக்கலாம்னு இருக்கோம் மாது .

நீயும் வா

என்ன போட்டி

படம் வரையன்ணும். சாருக்கு வேற என்ன நாம செய்ய இவர் ஞாபகமா எல்லாரும் வருவாங்க

எல்லாருமா

ஆமா

யார்லாம் வரைய போறா

அவர்கிட்ட படிச்ச எல்லாரும் இந்தா லிஸ்ட் பாரு

என்னோட பேரு இல்ல

இல்ல மாது , நெறைய பேரு வருவாங்க நீ எல்லாரயும் மேனேஜ் பண்ணு

நான் கேட்ட கேள்வி புரியலயா? என் பேரு ஏன் இல்ல

எல்லாரும் நல்லா வரைவாங்க அது இல்லாம இடம் இல்ல அதான்

சேது சொன்ன அந்த வார்த்தை என்ன ரொம்ப காயப்படுத்துச்சு

நான் வரையப் போறன். அவ்ளோ தான்

சேது கண்ணுல ஒரு ஏளனம் இவன் என்ன வரஞ்சு சாதிக்கபோறானு

நான் அடுத்து வரைய போற படதுக்கு என்னோட 37 வருஷ வாழ்க்கை எனக்கு தேவைப் பட்ருக்கு
இதோ இன்னைக்கு தான் அந்த நாள்

எல்லாரும் குடும்பம்குடும்பமா வந்துருக்காங்க

எனக்கு ராஜமாணிக்கம் ஒருத்தர்தான்ஆனா ராஜமாணிக்கத்துக்கு என்ன மாதிரி 1000 பேருன்னு தோனுச்சு.

என்ன வரைய போறதுன்னு யோசிக்கரன், நீங்க பாத்த உங்கள பாதிச்ச விசயங்கள் மட்டும் தான் உங்க கற்பனையில வரும். உங்களக்கு பிடிச்ச மாதிரி வரைங்க. மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி வரையனும்னா அவங்க தான் வரையணும்ன்னு சார் சொல்லுவாரு.

கண்ண மூடி ஒரு தவம் மாதிரி ஆரமிக்கப் போறன்.


இந்த நொடிக்காக தான் நீ காத்துக்கிட்டு இருந்தன்னு உள்ள இருந்து ஒருத்தன் சொல்றான்.

நான்கு மணி நேர இடைவெளிக்கு பின் என்னோட ஓவியம்




தலைப்பு வச்சுட்டு வரைய ஆரம்பிக்காத , அப்போ அந்த தலைப்புக்குள்ள உன்னோட கற்பனை முடிஞ்சுரும் . வரைஞ்சு முடிச்சுட்டு தலைப்பு வைன்னு ராஜமாணிக்கம் சார் சொன்னது ஞாபகம் இருக்கு

இதோ நான் வரைஞ்சத முழுசா பாக்கரன்.

தலைப்பு : அஞ்சுக்கால் குதிரை
ராஜா ஓடி வரான்

தாத்தா நீங்க வரைஞ்சதா

ஆமா எப்படி இருக்கு

மாடு தலை , குதிரை உடம்பு , கொம்பு இருக்கு ஆமா இதுக்கு ஏன் 5 கால் இருக்கு

தாத்தாக்கு ஒரு கால் இல்லல அது தான் இங்க இருக்கு

அப்போ அது உங்க காலா

அப்படியும் சொல்லாம்

தாத்தா எங்க மிஸ் மாதிரி இதுக்கு மார்க் போடவா

சரி ஆனா தமிழ போடணும்

இன்னும் நல்லா நீங்க வரஞ்சு இருக்கலாம் சோ சுமார்

ஒரு ஓரமா ராஜா ன்னு அவனோட சின்ன கையெழுத்து

இந்த கையெழுத்து வாங்க நான் இவ்ளோ நாள் காத்துக்கிட்டு இருந்தன்னு தோனுச்சு.

சேது ஓடி வந்து அந்த ஓவியம் பாத்துட்டு , மாது , உண்மையா நீ நல்லா வரஞ்சு இருக்க , சார் இருந்து இருந்தா உன்ன பாராட்டி இருப்பாரு.

தெரியும் சரி நாங்க வரோம் 

அடிக்கடி காலேஜ்க்கு வா மாது

பாக்கலாம் . bye.

Co incidents are only lifeன்னு ராஜமாணிக்கம் சார் சொன்னது புரிய எனக்கு 37 வருஷம் ஆகி இருக்கு. இந்த ராஜான்னு கையெழுத்து , சுமார்ன்னு மார்க் , அஞ்சுக்கால் குதிரை தலைப்பு, இந்த படம், என்னோட வாழ்க்கை இதுக்கு எல்லாம் சம்பந்தம் இருக்கானு கேட்டா என்னால இல்லன்னு இப்போ பதில் சொல்ல முடியாது.

-----முற்றும்----






பக்கங்கள் புரட்டப்படும்....













0 Comments